வேகமாக இணைய உலா மேற்கொள்ள
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2014
00:00

மவுஸ் கிளிக், கீ போர்ட் டைப்பிங் போன்ற பணிகள் சிலருக்கு விரல் இணைப்புகளில், மணிக்கட்டுகளில் வலியை ஏற்படுத்தும். அதிகமாக இவற்றைப் பயன்படுத்தாமல் இருக்க சில குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி, விரல்கள் இயக்கத்தினைக் குறைக்கலாம். இதன் மூலம் இணைய உலாவினையும் வேகமாக மேற்கொள்ள முடியும். அதற்கான வழிகள் சிலவற்றை இங்கு காணலாம்.
1. ஷார்ட்கட் வழிகளை உருவாக்கவும்: நாம் அடிக்கடி பார்க்க விரும்பும் இணைய தளங்களை அணுக, ஷார்ட்கட் கீகளை உருவாக்கலாம். குரோம் பிரவுசரில், முகவரிக்கான பார் கட்டத்தில், ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், Edit Search Engines என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் டயலாக் பாக்ஸில், Other search engines என்ற பிரிவில், புதிய வழி ஒன்றைக் கீழ்க் குறிப்பிட்டுள்ளபடி உருவாக்கவும்:
1. எந்த இணைய தளத்தை ஷார்ட் கட் மூலம் அணுக திட்டமிடுகிறீர்களோ, அதன் பெயரை டைப் செய்திடவும்.
2. அடுத்து, அதற்கான ஷார்ட் கட் சொல்லை, இரண்டு அல்லது மூன்று எழுத்துக்களில், அமைக்கவும்.
3. அடுத்து, இணைய தளத்தின் முகவரியை இணைக்கவும்.
4. தொடர்ந்து Done என்பதில் கிளிக் செய்திடவும்.
இனி, நீங்கள் அமைத்த எழுத்துக்களை டைப் செய்தால், குறிப்பிட்ட தளம் திறக்கப்படும். இத்துடன், பிரவுசர்களுக்கான மாறா நிலையில் தரப்பட்டுள்ள சில ஷார்ட்கட் கீகளை நினைவில் வைத்துப் பயன்படுத்தவும். அவை:
1. புதிய டேப் திறக்க Ctrl + T, அப்போதைய டேப்பினை மூட Ctrl + W, அனைத்து டேப்களுக்கும் சென்று வர Ctrl + Tab, அப்போதைய பக்கத்தினை ரெப்ரெஷ் செய்திட F5, முழுத்திரை நிலையில் இணைய தளத்தினைப் பார்க்கவும், பின்னர் முந்தைய நிலைக்குத் திரும்பவும் F11, மற்றும் கர்சரை முகவரிக் கட்டத்தில் நிறுத்த அல்லது முகவரிக் கட்டத்தில் உள்ளதை ஹை லைட் செய்திட F6 .
மேலும் பல மாறா நிலையில் உள்ள ஷார்ட்கட் கீ தொகுப்புகளை அறிய http://www.makeuseof.com/tag/opengooglechromebookmarkskeyboardshortcuts/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
2. டேப்களைக் கையாளும் விதம்: பல இணைய தளங்களுக்கான டேப்கள் திறக்கப்பட்ட நிலையில், அவற்றைக் கையாளும் திறன், குறைந்த பட்ச கீகளை இயக்குவதில் உள்ளது. இதற்கு தயார் செய்திடும் வகையில், முதலில் தேடல் முடிவுகளை ஒரு புதிய டேப்பில் அமைக்கவும். இதனை, மாறா நிலையில் நீங்கள் அமைத்திருக்கும் சர்ச் இஞ்சினில் அமைக்கலாம்.
நீங்கள் கூகுள் பயன்படுத்துபவராக இருந்தால், search results பக்கத்தில் மேலாக வலது பக்கம் உள்ள கியர் ஐகானில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் கீழ் விரி மெனுவில், Search Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Where results open என்பதனைத் தேடிக் கண்டறியவும். இங்கு புதிய விண்டோவில் தேடல் முடிவுகள் திறக்கப்பட வேண்டும் என்பதில் டிக் செய்திடவும். உண்மையில், இது புதிய விண்டோவில் திறக்கப்பட மாட்டாது. புதிய டேப்பில் தான் திறக்கப்படும். கூகுள் தேடல் சாதனத்தில் இது ஒரு பிழையாக உள்ளது.
3. புக்மார்க்குகளை திறமையுடன் அமைக்கவும்: நாம் குறிப்பிட்ட இணைய தளங்களுக்கான, புக்மார்க்குகளை அமைக்கையில், ஒரு ஒழுங்கான நிலையில் அன்றி, ஏனோ தானோ என நினைவு செல்லும் வகையில் அமைக்கிறோம். இதற்குப் பதிலாக, இந்த புக்மார்க்குகளை ஒரு அமைப்பாக அமைத்துவிடலாம். நாம் புக் மார்க் அமைக்கையில் Ctrl+D என்ற கீகளைப் பயன்படுத்துகிறோம். இதற்குப் பதிலாக, இதற்கு உதவிடும் வகையில் வடிவமைக்கப்பட்ட தர்ட் பார்ட்டி புரோகிராம்களைப் பயன்படுத்தலாம். அப்படி ஒரு அப்ளிகேஷன் தான் pocket. இதனை https://getpocket.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். Saved.io என்பது இன்னொரு புரோகிராம். இதனை http://saved.io/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். இவை, ஒவ்வொரு தளத்திற்கான லிங்க்குகளை, தங்கள் க்ளவ்ட் ஸ்டோரேஜில் தக்க வைத்து, நாம் விரும்பும்போது தருகிறது.
4.எக்ஸ்டன்ஷன்களை முறைப்படுத்தவும்: நமக்கு பல வழிகளில் எக்ஸ்டன்ஷன் புரோகிராம் இயக்கங்கள் உதவி செய்கின்றன. ஆனால், சில நமக்கு இடையூறும் குறுக்கீடும் தருகின்றன. இவற்றிலிருந்து மீள, ஆம்னி பாருக்கு அடுத்து வலது பக்கம் உள்ள எக்ஸ்டன்ஷன் ஐகானில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் உள்ள Hide Button என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அடுத்த படியாக, நாம் பயன்படுத்தாத, அல்லது அடிக்கடி பயன்படுத்தாத எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை, இயக்கம் இன்றி முடக்கி வைக்க வேண்டும். இதற்கு முகவரி கட்டத்தில் chrome://extensions/ என டைப் செய்திடவும். உடன், எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் அனைத்தும் காட்டப்படும். பயர்பாக்ஸ் பிரவுசரிலும் இது போன்ற வசதி தரப்பட்டுள்ளது. மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் அனைத்தும் சாதாரண குறிப்புகள் போலத் தோன்றலாம். ஆனால், பழகிப் பார்த்தால் தான், விரைவாகவும் எளிதாகவும் இணைய உலா வர இவை உதவும் என அறியலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X