விண்டோஸ் 8 - முக்கிய ஷார்ட் கட் கீ செயல்பாடுகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2014
00:00

விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு, விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவிலிருந்து வந்தவர்களுக்குப் பல விஷயங்கள் புதிதாகவே தெரிகின்றன. இவற்றைக் கற்றுக் கொண்டு, நினைவில் வைத்துக் கொண்டு இதில் செயல்பட வேண்டியுள்ளது. குறிப்பாக விண்டோஸ் கீயுடன் ஷார்ட் கட் கீகள் பயன்படுத்துவதில் பல செயல்பாடுகளும் அவற்றிற்கான கீ தொகுப்புகளும் புதியதாக, எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியனவாகவும் உள்ளன.
அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1. Windows Key + X - கண்ட்ரோல் பேனல், டாஸ்க் மானேஜர், பைல் எக்ஸ்ப்ளோரர் மற்றும் கமாண்ட் ப்ராம்ப்ட் ஆகியவற்றுடன் அடங்கிய மெனு ஒன்று பாப் அப் ஆகி, நாம் தேர்வு செய்திடத் தயாராய் கிடைக்கும்.
2. Windows Key + Q - அப்ளிகேஷன் சர்ச் டூல் ஒன்று நமக்குக் கிடைக்கும். நாம் இன்ஸ்டால் செய்திட்ட அனைத்து சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்களிலும் நமக்குத் தேவையானதைத் தேடிக் கண்டறியும் திறனை இது வழங்குகிறது.
3. Windows Key + C -விண்டோஸ் 8 சிஸ்டத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள சார்ம்ஸ் மெனு (charms menu) வினை இது தரும்.
4. Windows Key + I - திறந்து பயன்படுத்திக் கொண்டிருக்கும் அப்ளிகேஷனுடைய செட்டிங்ஸ் மெனுவினை அணுக இது அனுமதி தரும். எடுத்துக் காட்டாக, நீங்கள் குரோம் பிரவுசர் திறந்து பயன்படுத்திக் கொண்டிருந்தால், இந்த கீகளை அழுத்துகையில், Internet options செட்டிங்ஸ் மெனுவினை இது தரும்.
5. Windows Key + D - அடிக்கடி பயன்படுத்தும் ஷார்ட் கட் கீ இது. இது டெஸ்க்டாப் நிலையை நமக்குத் தரும். விண்டோஸ் 7 சிஸ்டத்திலும் இதே செயல்பாடு இருப்பது குறிப்பிடத்தக்கது.
6. Windows Key + M - டெஸ்க்டாப் நிலையைத் தருவதுடன், அதில் அப்போது திறந்து இயங்கிக் கொண்டிருக்கும் விண்டோக்களை மினிமைஸ் செய்வதற்கான திறனைத் தருகிறது.
7. Windows Key + Tab - மேற்கொள்ளும் பல்வேறு அப்ளிகேஷன் பணிகளை மாற்றிக் கொள்ளும் வசதியைத் தரும் பாப் அப் கட்டம் கிடைக்கும்.
8. Windows Key + W - அனைத்து தேடும் பயன்பாட்டினை இயக்குகிறது. search settings அமைத்துத் தருகிறது. இதன் மூலம் பயனாளர் விண்டோஸ் 8 சிஸ்டத்தின் குறிப்பிட்ட அமைப்பினை எளிதாகக் கையாளலாம்.
9. Windows Key + F - அனைத்து தேடும் பயன்பாட்டினை இயக்குகிறது. இங்கு அனைத்து பைல்களைத் தேடும் வாய்ப்பு தரப்படுகிறது. இதன் மூலம் பயனாளர் டாகுமெண்ட், இமேஜஸ், ஆடியோ மற்றும் பிற பைல்களைத் தேடி அறிந்து சேவ் செய்திடலாம்.
10. Windows Key + E - மை கம்ப்யூட்ட ரில் பைல் எக்ஸ்ப்ளோரர் பிரிவைக் காட்டுகிறது. இதன் மூலம் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள அனைத்து ட்ரைவ்களையும் கையாளலாம்.
11. Windows Key + R - ரன் மெனு இதன் மூலம் திறக்கப்படும். இதில் பைல் பெயரை டைப் செய்து அதனை நேரடியாக இயக்கலாம்.
12. Windows Key + Number Key 1......9 - பயனாளர், டெஸ்க்டாப் நிலையில், டாஸ்க்பாரில் வைக்கப்பட்டுள்ள இயங்கும் அப்ளிகேஷன்களை, அவை வரிசையாக இடம் பெற்றுள்ள நிலை எண் அடிப்படையில் இயக்குவதற்கு வசதி தருகிறது. எடுத்துக்காட்டாக, இயக்கப்படும் கூகுள் பிரவுசர், டாஸ்க் பாரில் நான்காவது இடத்தில் இருந்தால், விண்டோஸ் கீயுடன் எண் 4 கீயை அழுத்தினால், பிரவுசர் டெஸ்க்டாப்பில் கிடைக்கும்.
13. Windows Key + H - அப்போது திறக்கப்பட்டுள்ள அப்ளிகேஷனுடைய ஷேர் மெனு பாப் அப் ஆகிக் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, நீங்கள் கூகுள் மேப்ஸ் இயக்கத்தினை அப்போது திறந்து வைத்திருந்தால், அதனை இமெயில் அல்லது நெட்வொர்க் வழியாக மற்றவருடன் ஷேர் செய்து கொள்ள முடியும்.
மேற்கண்ட ஷார்ட் கட் கீ தொகுப்புகளுடன், இன்னும் பல புதிய கீ தொகுப்புகள் உள்ளன. இவற்றைத் தயாராகப் பயன்படுத்தும் வகையில் அறிந்து வைத்திருப்பதன் மூலம், நம் விண்டோஸ் 8 சிஸ்டம் செயல்பாடு, கூடுதல் வசதிகளைத் தரும் வகையில் இயக்கப்படும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X