சின்ன பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2014
00:00

பலரும் தங்கள் நிறுவனம் குறித்து சமூக வலைத் தளங்களில் எழுதுவது பழக்கமாகியுள்ள நிலையில், அது தவறு எனக் காரணத்தோடு சுட்டிக் காட்டியுள்ளது மிகச் சிறப்பான அறிவுரை. அதே போல மற்ற எச்சரிக்கைகளும் பயனுள்ளவையாக உள்ளன.
-டாக்டர் என். தேவபிச்சை, சென்னை.

நூறு கோடிப் பேர் இதுவரை ஜிமெயிலை ஆண்ட்ராய்ட் போனில் பயன்படுத்த இறக்கி உள்ளனர் என்ற தகவல், ஆண்ட்ராய்ட் போன் பயன்பாட்டின் பெருக்கத்தைக் காட்டுகிறது. இனி தகவல் மற்றும் பைல் பரிமாற்றம் எளிமையான ஒரு செயலாக மாறிவிடும். சிறுவர்கள் கூட இதனை மேற்கொள்ளலாம். கூகுள் நிறுவனத்திற்கு நாம் இந்த வகையிலும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.
-எஸ். கரன்சந்திரன், திண்டுக்கல்.

பேமிலி சேப்டி புரோகிராம் குறித்த தங்கள் பதில் மற்றும் தகவல்களுக்கு நன்றி.
-என். நீலவேணி, கும்பகோணம்.

மைக்ரோசாப்ட் ஒன் ட்ரைவ் நமக்கெல்லாம் சரிப்பட்டு வராது என்று ஒதுங்கி இருந்த எனக்கு அதன் இயக்கம் மற்றும் பயன்கள் குறித்து தாங்கள் எழுதிய கட்டுரை அதனைப் பயன்படுத்த வைத்துள்ளது. மிக்க நன்றி.
-செ. கிருஷ்ணன், தாம்பரம்.

மொபைல் போன் பயன்பாடு பெருகி வரும் நேரத்தில், சரியான பாதுகாப்பிற்கான வழிகளைத் தந்திருப்பது, காலத்தே செய்த உதவியாகும். குறிப்பாக, கிராம மக்களுக்கும் புரியும் வகையில் எளிய மொழியில் குறிப்புகள் பயனுள்ள வகையில் உள்ளன.
-பேரா. எஸ். சகாய தேவன், மதுரை.

யூசர் அக்கவுண்ட் கண்ட்ரோல் குறித்த விளக்கமான கட்டுரை எழுதிய உங்கள் ஆசிரியருக்கு என் பாராட்டுதல்கள். மிக விரிவாக அதன் தன்மை, இயக்கம், நோக்கங்களை தந்துள்ளீர்கள். இதே போல மற்ற கம்ப்யூட்டர் கண்ட்ரோல் அம்சங்கள் குறித்தும் எழுதவும். நன்றி.
-கே. சேகரன், திருவனந்தபுரம்.

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இன்னும் புரியாத ஒரு விஷயமாகவே, அதன் ஷட் டவுண் இயக்கம் உள்ளது. உங்களுடைய வழி காட்டுதல்கள் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளன. தெளிவாகவும் உள்ளன.
-எஸ். பூமா தேவி, சிவகாசி.

நாம் உருவாக்கும் ஆட்டோ கரெக்ட் விஷயங்களை நாம் இழக்காமல் இருக்க அதனை அவ்வப்போது பேக் அப் செய்திடுவது நல்லது. இதற்கான நடைமுறைச் செயலாக்க வழிகளை கட்டுரையில் தந்தது உதவியாக உள்ளது. நன்றி.
-என். மாறன், திருமங்கலம்.

ஒரு படத்தினை இணையத்தில் இருந்து டவுண்லோட் செய்கையில் என்ன நடக்கிறது என்று விளக்கியது புதிய தகவலாகும். இதுவரை பைல் அளவு பற்றியே கணக்கிட்டிருந்தேன். கூடுதல் டேட்டா விபரங்களுடன் இது பதிவாகும் என்பதனை உங்கள் பதிலிலிருந்து அறிந்து கொண்டேன். தகவலுக்கு நன்றி.
-எஸ். பூபதி மாணிக்கம், சென்னை.

மைம் குறித்த விளக்கம் படத்துடன், கூடுதல் தகவல்களைத் தருவதாக அமைந்துள்ளது. கேள்விகளுக்குப் பதில் தர தாங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளுக்கு எங்கள் நன்றி.
-என். சிகாமணி, திருச்சி.

இனி க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையிலான இயக்கம் தான் நடைமுறையாக இருக்கும் என்ற நிலையில், தங்களின் ஒன் ட்ரைவ் குறித்த கட்டுரை, கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் நல்லதொரு வழிகாட்டியாக உள்ளது.
-எஸ். சுடலைராஜன், சென்னை.

இணையத்தில் சர்வே எடுக்கக் கூட ஒன் ட்ரைவினைப் பயன்படுத்தலாம் என்பது பயனுள்ள தகவல். இது போல பலருக்கும் பரவலாகத் தெரியாத புதிய தகவல்களைத் தரவும். கல்லூரிகளிலும், கம்ப்யூட்டர் குறித்த நூல்களில் கூட இது போன்ற குறிப்புகள் கிடைப்பதில்லை.
-ஆ. பாண்டியன், மதுரை.

இன்ஸெர்ட் கீயுடன் ஓவர் டைப் நிலை இயக்கம் முடிந்துவிடுகிறது என்று தான் இதுவரை வேர்ட் தொகுப்பினை இயக்கிக் கொண்டிருந்தோம். கூடுதல் தகவல்களை அறிய வைத்ததற்கு நன்றி.
-சி. காஞ்சன மாலா, கோவை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X