ஆர்குட் சமூக இணைய தளம் மூடப்படுகிறது
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2014
00:00

கூகுள் நிறுவனத்தின் ஆர்குட் சமூக இணைய தளம், வரும் செப்டம்பர் 30 முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக இணைய தளப் பிரிவில், கூகுள் நிறுவனத்தின் முதல் முயற்சியாக, பத்து ஆண்டுகளுக்கு முன் ஆர்குட் இணைய தளம் தொடங்கப்பட்டது. இதில் தற்சமயம் சந்தாதாரர்களாக உள்ளவர்கள், கூகுள் டேக் அவுட் (Google Takeout) என்ற டூல் மூலம், வேறு ஒரு சமூக இணைய தளத்திற்கு, செப்டம்பர் 2016 வரை மாற்றிக் கொள்ளலாம். இருப்பினும், புதியதாக யாரும் இதில் அக்கவுண்ட் தொடங்க இயலாது. 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சமூக இணைய தளம் பிரேசில் மற்றும் இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்தது. பேஸ்புக் தளம் இயக்கத்திற்கு வரும் வரை, இதுவே அனைவரின் பிரியமான சமூக இணைய தளமாக இருந்தது.
இதன் மூலம் பழைய நண்பர்கள் சந்தித்துக் கொண்டனர். புதிய பல நண்பர்கள் உருவாகினர். பலர் காதல் வயப்பட்டு மணம் முடித்தனர்; சிலர் பழகிப் பின் பிரிந்தனர். சிலர் முகமறியா நட்பினை இன்றும் தொடர்ந்து வருகின்றனர்.
இன்றும், ஆர்குட் தளத்தில் உள்ள 50% பேர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்கள்; 20% இந்தியர்கள். 18% பேர் பிற நாடுகளில் உள்ளவர்கள். குறிப்பாக அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள். கடந்த பத்தாண்டுகளில், பல சமூக இணைய தளங்கள் தொடங்கப்பட்டு, அவரவர் விருப்பங்களின் அடிப்படையில் குழுக்களை அமைத்து இயக்க வழிகள் தந்து வருகின்றன.
இதனால், ஆர்குட் வளர்ச்சி தேய்பிறையாகிவிட்டது.எனவே, இதன் இயக்கத்தினை நிறுத்துகிறோம் என கூகுள் பொறியியல் பிரிவின் இயக்குநர் பாலோ தன் ஆர்குட் வலைமனையில் தெரிவித்துள்ளார்.

Advertisement

 

மேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X