ஹைக் மெசஞ்சர் பயன்படுத்தும் 2 கோடி பயனாளர்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2014
00:00

இந்தியாவில் உருவாக்கப்பட்டு இயக்கப் படும் Hike messenger என்னும் மொபைல் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் புரோகிராம், தற்போது 2 கோடிப் பேருக்கும் மேலானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சென்ற 2012 டிசம்பரில் இந்த புரோகிராம் பயனாளர்களுக்கு அளிக்கப்பட்டது. தொடங்கிய ஒன்பது மாதங்களிலேயே, இதன் பயனாளர்களின் எண்ணிக்கை 50 லட்சத்திலிருந்து ஒரு கோடியே 50 லட்சமாக உயர்ந்த்து. அடுத்த மூன்று மாதங்களில் மேலும் 50 லட்சம் கூடியது. இதனைப் பயன்படுத்துபவர்களில் 90% பேர் இந்தியர்களாவார்கள். இவர்களில் 80% பேர், 25 வயதிற்கும் குறைந்தவர்கள்.
இந்தியாவில் ஏறத்தாழ 10 கோடி பேர் மொபைல் வழி இணையம் பயன்படுத்துபவர்களாக உள்ளனர். எனவே தான் ஹைக் மெசஞ்சரை இதற்கென உருவாக்கி தந்து வருகிறோம் என இந்நிறுவன இயக்குநர் கவின் பார்தி மிட்டல் தெரிவித்துள்ளார்.
இந்த இன்ஸ்டண்ட் மெசஞ்சர் புரோகிராம் வழியாக எந்த பைலையும் அனுப்பலாம். ஒரு பைலின் அளவு அதிகபட்சமாக 100 எம்பி வரை இருக்க அனுமதிக்கப்படுகிறது. மற்ற இன்ஸ்டண்ட் மெசஞ்சர் புரோகிராம் எதுவும் இந்த அளவிலான பைல்களை அனுப்ப அனுமதிக்கவில்லை. மின் அஞ்சல் புரோகிராம்கள் கூட இந்த வரையறையை தங்கள் அதிகபட்ச அளவாகக் கொண்டிருக்கவில்லை.
அண்மையில், ஹைக் மெசஞ்சர் புரோகிராமில் 'Hidden Mode' என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், மற்றவர்கள் அறிந்து கொள்ளாமல் ஒருவர் தகவல்களைத் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
ஹைக் புரோகிராம் iOS, Android and Blackberry ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கும் வகையில், உலகெங்கும் கிடைக்கிறது. இது இந்தியாவில் உருவாக்கப்பட்டு வழங்கப்படும் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் புரோகிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

 

மேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X