பழந்தமிழ் இலக்கியச் சொல் அடைவு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2014
00:00

பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்றுக் கொள்பவர்களுக்கும், அவற்றில் ஆய்வினை மேற்கொள்பவர்களுக்கும், அவற்றின் சொல் அடைவு (Concordance) எனப்படும் சொற்களின் பட்டியல் ஓர் அவசியத் தேவையாகும். மேல் நாடுகளில், குறிப்பாக ஆங்கில இலக்கிய நூல்களில் பெரும்பாலானவற்றிற்கு இந்த சொல்லடைவுகள், தற்போது கணினியில் பயன்படுத்தும்படி அமைக்கப்பட்டுக் கிடைக்கின்றன. தமிழில் இந்த அரிய முயற்சியினை, மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் பாண்டியராஜா மேற்கொண்டு தந்துள்ளார். இவரின் சொல்லடைவுகள் http://sangamconcordance.in/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் பதியப்பட்டு அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கிறது.
இந்த தளத்தில் சென்றவுடன், முதல் அறிமுகப்பக்கத்தினை அடுத்து, நாம் எதிர்கொள்ளும் மெனுவில் சொற்பிரிப்பு நெறிகள், தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் கம்பராமாயணம் ஆகிய பிரிவுகள் கிடைக்கின்றன. இவற்றில் எது நமக்குத் தேவையோ, அதன் மீது கிளிக் செய்து, உள்ளே செல்லலாம். எடுத்துக் காட்டாக, சங்க இலக்கியம் என்பதில் கிளிக் செய்திட, தொடரடைவு சங்க இலக்கியம் என்பதின் கீழ் அனைத்து தமிழ் எழுத்துக்களும் கட்டமிடப்பட்டுள்ளன. நமக்கு எந்த சொல் தேடி அறிய வேண்டுமோ அதன் முதல் எழுத்தில் கிளிக் செய்தால், அந்த எழுத்தில் தொடங்கும் அனைத்து சொற்களும், அனைத்து சங்க நூல்களிலும் (பத்துப்பாட்டு + எட்டுத் தொகை) உள்ள வரிகள் காட்டப்படும். பின்னர் இதில் Alt+F கீகளை அழுத்தி, நமக்கு வேண்டிய சொல் மட்டும் தேடிப் பெறலாம். எடுத்துக் காட்டாக “பே” என்ற எழுத்தை அழுத்த, நமக்கு “பே” என்று தொடங்கும் சொற்கள் உள்ள வரிகள் அனைத்தும் காட்டப்படும். இதில் “பேயும் அறியா” என்று தேடல் கட் ட த்தில் அமைத்துத் தேடினால், அந்த சொற்கள் உள்ள வரிகள் மட்டும் கிடைக்கும். வரிகளின் முடிவில், அந்த வரி எந்த நூல், எந்த பாடல் எனக் காட்டப்படும். எடுத்துக் காட்டாக, அகம், குறுந்தொகை 304 என நூல், பாடல் எண் காட்டப்படும்.
சங்க இலக்கிய நூல்கள் அனைத்தின் பாடல்கள் டெக்ஸ்ட்டாக வேண்டும் எனில், முகப்பு பக்கத்தின் வலது கட்டத்தில் அவை பட்டியலிடப்பட்டிருக்கும். அவற்றில் கிளிக் செய்து பாடல்களுக்கான டெக்ஸ்ட்டினைப் பெறலாம். எடுத்துக்காட்டாக, தொல்காப்பியம் என்பதில் கிளிக் செய்தால், மூன்று அதிகாரப் பிரிவுகளும், அவற்றின் கீழ் ஒன்பது இயல் பிரிவுகளும் இருப் பதனைக் காணலாம். தேவையானதைக் கிளிக் செய்து, டெக்ஸ்ட்டினக் காணலாம்.
இந்த அடைவினைத் தயாரிப்பது எளிமையான செயல் திட்டம் அல்ல. தனியொரு மனிதராய், பழந்தமிழ் இலக்கியத்திற்கு இதனைத் தயாரித்து வழங்கிய பேராசிரியர் பாண்டியராஜா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கணிதத்துறைப் பேராசிரியராகச் செயல்பட்டவர். தமிழ் இலக்கியத்தின் மேல் உள்ள ஆர்வம் காரணமாக, தமிழ் இலக்கியத்தினைக் கற்று, பின்னர் கணினியியல் கற்று, இதனைத் தயாரித்து வழங்கியுள்ளார்.
பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்றுக் கொள்ளும் மாணவர்கள், ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் மற்றும் பாடம் நடத்தும் பேராசிரியர்களுக்கு இந்த சொல்லடைவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பேராசிரியரைத் தொடர்பு கொள்ள விரும்புபவர்கள், தளத்தின் முகப்பு பக்கத்தில் தரப்பட்டுள்ள அவர் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement

 

மேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X