சுருக்குச் சொற்கள் தெரிந்து கொள்ள
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2014
00:00

இன்றைய நடப்பில், பல நிறுவனங்கள் அவற்றின் சுருக்குச் சொற்களாலேயே (acronyms) ஆங்கில மொழியில் அழைக்கப்படுகின்றன. ஏன், பல பொருட்கள், பல கருத்துருக்கள், பல இடங்களும் சுருக்குச் சொற்களாலேயே சுட்டிக் காட்டப்படுகின்றன. பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுருக்குச் சொற்கள் நம் அனைவருக்கும் தெரிந்தவையாகவே இருக்கின்றன. ஆனால், இவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைவு. நாம் நூல்களைப் படிக்கையிலும், இணையத்தில் சில கட்டுரைகளைப் படிக்கையிலும் பல விஷயங்களை அவற்றின் சுருக்குச் சொற்களாலேயே தெரிந்து கொள்கிறோம். அவற்றின் விரிவாக்கம் என அந்த நூல்களில் தரப்படுவதில்லை. வாசகர்களுக்குத் தெரியும் என அவற்றை எழுதியவர்கள் விட்டுவிடுகிறார்கள். அல்லது விரிவாக்கம் தெரிந்து என்ன ஆகப் போகிறது. விஷயம் தெரிந்தால் போதும் என்றும் விட்டுவிடுகிறார்கள். அப்படி ஒன்றை நாம் சந்திக்கும்போது, அவற்றின் விரிவாக்கத்தினை அறிந்து கொள்ள உதவும் வகையில் இணைய தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் All acronyms. இது கிடைக்கும் முகவரி http://www.allacronyms.com/.
இந்த தளத்தில் சென்றவுடன் இதில் கிடைக்கும் சுருக்குச் சொற்களின் எண்ணிக்கையும் அவற்றின் விரிவாக்கமும் தான். 28 லட்சத்து 84 ஆயிரம் சுருக்குச் சொற்கள், ஏறத்தாழ 2,000 தலைப்புகளில் தரப்பட்டுள்ளன. இதனைப் பார்த்தவுடனேயே, அதனை புக்மார்க் செய்திடும் ஆவல் ஏற்படும்.
இதன் தலைப்பில் நாம் தேடிப் பெறுவதற்கான தேடல் கட்டம் தரப்படுகிறது. இடது பக்கம், Topics, Popular, Random, and Suggest என நான்கு தலைப்புகளில் நாம் இவற்றைப் பெற வழி வகுக்கப்பட்டுள்ளது. இவை போக, அன்றைய தினத்தில் அதிகம் தேடப்பட்டது என ஐந்து சுருக்குச் சொற்கள் தரப்படுகின்றன. இவை ஒவ்வொன்றின் கீழாக அகர வரிசையில் தேடி அறியும் வழிகளும் கிடைக்கின்றன. இன்னும் பல வசதிகள் நம் தேடலை எளிமையாகவும் விரைவாகவும் அமைக்கின்றன. இன்றே இந்த தளம் சென்று பார்த்து உங்கள் குழந்தைகளுக்கும் இதனைப் பயன்படுத்தக் கற்றுத் தரவும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X