இந்திய ரயில்வேயின் புதிய டிக்கட் வழங்கும் தளம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2014
00:00

இந்திய ரயில்வேயின் டிக்கட் வழங்கும் இணைய தளம் தான், இந்தியாவிலேயே அதிகம் பயன்படுத்தப்படும் இணைய தளம் என்று பெயர் பெற்றதாகும். இதனை நிர்வகிக்கும் IRCTC நிறுவனம் தற்போது அந்த தளத்தினை புதுமைப் படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்திற்கு இதனை வடிவமைத்துக் கொடுத்த்து Centre for Railway Information Systems (CRIS) என்னும் நிறுவனமாகும்.
இந்த புதிய தளம் கூடுதல் திறனுடனும், வசதிகளுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு நிமிட த்தில் 7,200 டிக்கட்களை இத்தளம் வழங்கும். ஏற்கனவே இயங்கி வந்த தளம், நிமிட த்திற்கு 2,000 டிக்கட்களையே வழங்கும் திறன் கொண்டிருநத்து.
பயனாளர், டிக்கட் ஒன்றை புக் செய்கையில், ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், விடுபட்ட இடத்திலிருந்து மீண்டும் அவர் தொடங்க முடியும். முடிவடையாமல் போன முயற்சி குறித்து டெக்ஸ்ட் மெசெஜ் ஒன்றை இப்போதைய இணைய தளம் அனுப்பும்.
பயனாளர் இத்தளத்தில் பதிவு செய்து செயல்படுத்துவது, இன்னும் பல கூடுதல் சோதனை முறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதனால், திருட்டுத்தனமாகப் பதிவு செய்பவர்கள் அறவே ஒழிக்கப்படுவார்கள் என்று ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்துள்ளது.
பழைய இணைய தளம் தட்கல் டிக்கட் புக் செய்திடும் காலை 10 முதல் 12 மணி வரை அடிக்கடி செயல் இழந்து போய் நின்றது. இனி, அந்தப் பிரச்னை ஏற்படாது.
இனையம் வழி ரயில் பயண டிக்கட் வாங்குவதனையே மக்கள் விரும்புகின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி. வருமானத்தில், இணைய டிக்கட் புக்கிங் மூலமாக 27% வருமானம் கிடைக்கிறது. 201112 ஆம் ஆண்டில், புக் செய்யப்பட்ட டிக்கட்களின் எண்ணிக்கை 11.6 கோடியாக இருந்தது. இது அடுத்த ஆண்டில், 14.1 கோடியாக உயர்ந்தது. சராசரியாக தற்போது நாள் ஒன்றுக்கு 4 லட்சம் டிக்கட்கள் பதிவு செய்யப்படுகின்றன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X