ஏர்டெல் சந்தாதாரர் எண்ணிக்கை 30 கோடி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 ஆக
2014
00:00

பன்னாட்டளவில், தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 30 கோடியைத் தாண்டியுள்ளதாக, ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. மொபைல், தரை வழி தொடர்பு, டி.எஸ்.எல். மற்றும் டி.டி.எச் ஆகிய பிரிவுகள் அனைத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் இதில் அடக்கம்.
ஏர்டெல் தன் சேவையினை 1995 ஆம் ஆண்டு தொடங்கியது. 2009 ஆம் ஆண்டு, இதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 10 கோடியாகவும், 2012ல், 20 கோடியாகவும் உயர்ந்தது. இறுதியாகக் கிடைத்த 10 கோடிப் பேர், இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திலேயே கிடைத்துள்ளனர்.
இந்தியாவில் ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 2008ல் 6 கோடியாக இருந்தது. 2009ல் இது 10 கோடியாக உயர்ந்தது. உலக அளவில், அதிக மொபைல் சந்தாதாரர்களைக் கொண்ட நிறுவனங்களின் பட்டியலில், ஏர்டெல் நான்காவது இடம் கொண்டுள்ளது. சீனா நீங்கலாக, மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
ஏர்டெல் தன் 4ஜி அலைவரிசை தொடர்பினைச் சென்ற 2012 ஆம் ஆண்டில் இந்தியாவில் தொடங்கியது. தற்போது 14 நகரங்களில், இந்த சேவையினை வழங்கி வருகிறது. இந்தியாவிற்கு வெளியே, 20 நாடுகளில், வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் நிறுவனமாக ஏர்டெல் பெயர் பெற்றுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X