பட்ஜெட் விலையில் செல்கான் சிக்னேச்சர் மொபைல்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 ஆக
2014
00:00

மொபைல் போன் வாங்குவோர் அனைவரும், தற்போது ஸ்மார்ட் போன்களையே நாடுகின்றனர். இவர்கள் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன் வசதிகளைக் கொண்ட போன்களை எதிர்பார்க்கின்றனர். இவர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப, செல்கான் நிறுவனம், அண்மையில் ரூ. 5,999 என்று விலையிட்டு, புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயர் Signature Two A500. இது வர்த்தக இணைய தளமான ப்ளிப் கார்ட் நிறுவனத்துடனான ஒப்பந்த்த்தின் கீழ் வெளியாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்களாக, 5 அங்குல அளவிலான கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே, 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் MediaTek MT6572M ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், இரண்டு சிம் இயக்கம், 5 எம்.பி. திறனுடன் ப்ளாஷ் இணைந்த பின்புறக் கேமரா, -0.3 எம்.பி. திறனுடன் முன்புறக் கேமரா ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இதன் தடிமன் 9.9. மிமீ. எடை 147 கிராம். ராம் மெமரி 1 ஜி.பி. தரப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை 32 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை- பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். ஆகியவை தரப்பட்டுள்ளன. 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் எப்.எம். ரேடியோ இயங்குகின்றன. இதன் பேட்டரி 2000 mAh திறன் கொண்டது.
கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதனுடன் இலவசமாக ப்ளிப் கவர் ஒன்று தரப்படுகிறது. சென்ற வாரம் முதல் ப்ளிப் கார்ட் இணைய தளத்தில் விற்பனைக்கு உள்ளது.
இந்த மாடல் மொபைல் போன், ஏற்கனவே விற்பனையில் உள்ள ஸென்போன் 4, மோட்டோ இ ஆகிய மொபைல் போன்களோடு விற்பனையில் போட்டியிடும் என செல்கான் நிறுவன இயக்குநர் முரளி தெரிவித்துள்ளார்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
12-ஆக-201409:48:14 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே எல்லாம் சரி ஆனால் நார்மல் சிம் பயன்படுத்த முடியாது என்று ஏன் தெரிவிக்க கூடாது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X