இணையம் தான் இனி சாதிக்கும்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 ஆக
2014
00:00

வங்கிகள் தேசியமாக்கப்பட்டு 40 ஆண்டுகளில் ஏற்படாத முன்னேற்றமும், லாபமும் இணையம் வழியாகவும், ஸ்மார்ட் போன்கள் வழியாகவும் ஏற்பட உள்ளது.
இந்தியாவில் இயங்கும் அமெரிக்க வங்கியான சிட்டி பேங்க், கடந்த ஐந்து ஆண்டுகளில், புதியதாக எந்த கிளையையும் திறக்கவில்லை. ஆனால், இக்காலத்தில், வங்கியின் இலாபம் 60% உயர்ந்துள்ளது. அதனால் தான், ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் ஆக்சிஸ் வங்கிகள், தங்களுக்கான தொழில் நுட்பத்தில் அதிகக் கவனம் செலுத்தி வருகின்றன. இதன் மூலம் இன்னும் வங்கிச் சேவையினைப் பெற முடியாத நிலையில் உள்ள 50% மக்களைத் தங்கள் பக்கம் கொண்டு வர முடியும் என இந்த வங்கிகள் நம்புகின்றன. இதற்கான இணைய வழி வர்த்தகக் கட்டமைப்பினை அமைக்க முற்படுகின்றன.
இந்திய மக்கள் அனைவரும் வங்கிச் சேவைகளைப் பெற வேண்டும் என்ற இலக்குடன் தான், வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. ஆனால், கடந்த நாற்பது ஆண்டுகளில், அந்த இலக்குகள் முழுமையாக வெற்றி பெறாத நிலையில், இணைய வழி அணுக்கம் அவற்றை அடைந்துவிடும் என்று தோன்றுகிறது.
இந்த சூழ்நிலை வங்கிகளுக்கு மட்டுமின்றி, மக்களுக்கும் பயனளிப்பதாக இருக்கும்.
இதற்கு முக்கிய அடிப்படையை இணையம் மட்டுமின்றி, ஸ்மார்ட் போன்களும் தருகின்றன. தொலை தூரக் கிராமங்களில், இந்த வகையில், வங்கிகளை, மக்களின் உள்ளங்கைகளில் கொண்டு வரும் பணியை ஸ்மார்ட் போன்கள் செய்கின்றன.
வங்கிகளுக்கு லாபம் வருவதைக் காட்டிலும், டாகுமெண்ட் எதுவுமின்றி, வரிசையில் நின்று நேரத்தை வீணாக்காமல், மூலையோரக் கிராமத்தில் இருக்கும் ஒரு குடிமகன் வங்கிச் சேவையினைப் பெற முடியும் என்ற தகவல், வளரும் பொருளாதாரத்திற்கு வளம் சேர்க்கும். எனவே, வங்கிகளின் கிளைகள் வழி வர்த்தகம் இனி புதிய பரிணாமத்தை அடைய இருக்கிறது என ஆக்சிஸ் வங்கியின் தலைவர் ராஜீவ் ஆனந்த் கூறியுள்ளார்.
மும்பை பல்லடியம் என்ற வணிக வளாகத்தில் இயங்கும் சிட்டி வங்கியின் கிளை, இனி வருங்காலங்களில் வங்கி ஒன்று எப்படி செயல்படும் என்பதற்கு எடுத்துக் காட்டாய் உள்ளது. இந்த கிளையில் வழக்கமான வங்கி ஒன்றில் காணப்படும் கவுண்ட்டர்கள், டெல்லர்களைக் காண முடியாது. வாடிக்கையாளர்களை வரவேற்பது மிகப் பெரிய கம்ப்யூட்டர் தொடு திரைகளே. இவற்றை இயக்குவதன் மூலம், அவர்கள் தங்கள் நிதி பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். உங்களுக்குச் சந்தேகம் எதுவும் இருந்து, அதனைத் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும் எனில், அங்குள்ள தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். உங்களுடன் பேசுபவர், எங்கோ இயங்கும் வாடிக்கையாளர் மையத்தில் இருக்கலாம்.
இந்த பெரிய தொடு உணர் திரைகள், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளின் நிதித் திட்டங்கள் மற்றும் அவர்கள் பெறக்கூடிய சலுகைகளைக் காட்டுகின்றன. வழக்கமான வங்கிக் கிளைகளில் காணப்படும் வரிசைகள் எல்லாம் இனி இருக்காது.
வங்கிப் பிரிவு இனி டிஜிட்டல் மயமாக உள்ளது. விரைவாக இதனை மேற்கொள்ளும் வங்கி, அதிக வாடிக்கையாளர்களையும், லாபத்தினையும் பெற இருக்கிறது. இது இப்போது நிரூபிக்கப்பட்டு வருகிறது. சென்ற ஜனவரியில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, மொபைல் போன்களின் வழியாக ரூ.600 கோடிக்கு வர்த்தகம் மேற்கொண்டுள்ளது. சென்ற 2009 ஆம் ஆண்டில், சிட்டி வங்கியில் டிஜிட்டல் வழி நிதி வர்த்தகம் மேற்கொண்ட வாடிக்கையாளர்கள் 25% தான். தற்போது இது 50% ஆக உயர்ந்துள்ளது. 80% நிதி பரிவர்த்தனைகள் மொபைல் போன்கள் வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நான்கு வாடிக்கையாளர்களில் ஒருவர், இணையம் வழியாக வங்கியில் இணைகிறார். இதே போல, ஆக்சிஸ் வங்கியின் வர்த்தகத்தில் 35% இணையம் வழியாகத்தான் நடைபெறுகிறது. இது இன்னும் இரண்டு ஆண்டுகளில் 50% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில், தனியார் பிரிவில் மிகப் பெரிய வங்கியாக இயங்கும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 33 நகரங்களில், தன் நூறு கிளைகளில் தொடு உணர் திரைகளை அமைத்து வர்த்தகத்தினை நடத்தி வருகிறது. இந்த கிளைகள் அனைத்தும் முழுமையாக டிஜிட்டல் சாதனங்கள் வழியே தான் நடத்தப்படுகின்றன. விடுமுறை ஏதும் இன்றி வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் இயங்குகின்றன.
பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க், ”ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கிளை இப்போது உங்கள் பாக்கெட்டில்” என்ற முழக்கத்துடன் வாடிக்கையாளர்களை இணைய தள வழி வங்கிச் செயல்பாட்டிற்கு அழைத்து வருகிறது. இந்த வங்கியின் நெட் பேங்கிங் வசதி கொண்டவர்கள், தற்போது மொபைல் போன் வழியாகவே, இந்த வசதியைப் பயன்படுத்தி, ட்ரெயின் மற்றும் விமான டிக்கட்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ள காரணங்களால் தான், பல வங்கிகள் தங்கள் தொழில் நுட்ப வசதிகளைப் பெருக்க, கோடிக்கணக்கில் செலவழிக்க முன்வந்துள்ளன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X