பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 ஆக
2014
00:00

மைடாகுமெண்ட்ஸ் போல்டரில் நாம் ஒரே போல்டரில் அனைத்து பைல்களையும் வைப்பது நமக்குத்தான் சிரமம் தரும் வேலையாகும். ஒவ்வொரு முறையும் போல்டரில் மேலும் கீழும் சென்று பைல்களைத் தேட வேண்டும். நீங்கள் குறிப்பிடும் வகையில், நம் பணி செயல்பாட்டிற்கேற்ப துணை போல்டர்களை உருவாக்கி, அவற்றில் சேவ் செய்வது நம் நேரத்தை மிச்சப்படுத்தும்.
கே. உமா ராணி, புதுச்சேரி.

ஒரே பைலைப் பல பெயர்களில் வைத்திருப்பது தேவையற்ற ஒன்றுதான். இருப்பினும், ஏதேனும் ஒரு காரணத்திற்காக, அவ்வாறு உருவாக்குகிறோம். ஆனால், பின் நாளில் அவற்றைச் சரி செய்திட மறந்து போகிறோம். இந்த பிரச்னையை நன்றாக எழுதி, நீக்க வேண்டிய பைல்களை நீக்குவது எவ்வளவு முக்கியம் என்பதனை நன்கு விளக்கி இருக்கிறீர்கள்.
என். உமர் தம்பி, காரைக்கால்.

சுருக்குச் சொற்கள் தளத்தில், இன்றைய கம்ப்யூட்டர் உலகில், இளைஞர்களால் பயன்படுத்தப்படும் சுருக்குச் சொற்களும் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். இல்லை. யாரேனும் இவற்றைத் தனியாகத் தொகுத்து அமைக்கலாம்.
எஸ். மாலதி, கப்பலூர்.

ஸ்மார்ட் போன்கள் எப்படி ஜி.பி.எஸ். மூலம் வழி காட்டுகின்றன என்பது குறித்து தனியே ஒரு கட்டுரை எழுதவும். நீங்கள் தந்துள்ள சென்சார்கள் குறித்த அனைத்து தகவல்களும் மிகவும் பயனுள்ளவையே. ஜி.பி.எஸ். குறித்து சுருக்கமாகவே தந்திருப்பதால், மேலே சொன்ன வேண்டுகோள். அடுத்த வாரம் இதனை எதிர்பார்க்கிறேன்.
கா. பரத்குமார், பழனி.

தன் மக்கள் எண்ணிக்கையை ஒரு கேடயமாகக் கொண்டு, சீன அரசு மைக்ரோசாப்ட் நிறுவனத்தினைப் பயமுறுத்துகிறது. விண்டோஸ் 8 மற்றும் ஆபீஸ் தொகுப்புகளை வேண்டாம் என்று அந்நாட்டு அரசு தந்துள்ள அறிவிப்புகள் இதனையே காட்டுகின்றன. இருப்பினும், மைக்ரோசாப்ட், தான் ஒரு வர்த்தக நிறுவனம் என்ற முறையில், இந்த மிரட்டல்களை நயமாகச் சந்தித்து தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.
தே. பெ. கவுதமன், மதுரை.

விண்டோஸ் 7 பயன்படுத்தி, விண்டோஸ் 8 மாறியவர்களுக்கென புதிய பகுதி ஒன்று தொடங்கி, நிறைய டிப்ஸ்களைத் தரவும். கேள்வி - பதில் பகுதியில் வாரா வாரம் இது குறித்த நிறைய கேள்விகள் வருகின்றனவே.
கா. கணேஷ், சிவகாசி.

மிகப் பயனுள்ள கட்டுரை “வைரஸ் தாக்குதலைக் காட்டும் நிகழ்வுகள்”. நம்மை அறியாமலேயே, நம் கம்ப்யூட்டரில் தங்கி, சின்ன சின்ன அச்சுறுத்தல்களை, மாற்றங்களை முதலில் காட்டும் வைரஸ்களை, நாம் முதலிலேயே தெரிந்து கொண்டால், பாதிப்பின் விளைவுகள் குறைவாகவே இருக்கும். எதிர் நடவடிக்கை எடுப்பதும் எளிதாகும். அந்த வகையில், நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள அனைத்தும், பயனாளர்கள் அனைவரும் அனுபவப்பட்ட மற்றும் கேள்விப் பட்டவையே. தெளிவாகவும் கோர்வையாகவும் எடுத்துத் தந்தமைக்கு நன்றி.
பேரா. செ. மாணிக்க ராஜ், மதுரை.

இப்போதெல்லாம், பிரவுசர் எக்ஸ்டன்ஷன்கள் மற்றும் டூல்பார்கள் என்ற போர்வையில் வைரஸ்கள் அல்லது மால்வேர்கள் நம் கம்ப்யூட்டரில் நுழைவது வாடிக்கையாகிவிட்டது. நாம் ஆர்வத்தில் மேற்கொள்ளும் தவறுகள் இவற்றை அனுமதிக்கின்றன. இவற்றின் செயல்பாடுகள் குறித்து நீங்கள் கொடுத்துள்ள எச்சரிக்கைகள் நூற்றுக்கு நூறு உண்மையே. எழுதியவருக்கு நன்றி.
-என்.கோகிலம், சென்னை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X