இந்தியாவில் சாம்சங் கெலக்ஸி எஸ் 5 மினி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஆக
2014
00:00

சாம்சங் நிறுவனம் தன்னுடைய காலக்ஸி எஸ்4 மினி ஸ்மார்ட் போனுக்குக் கிடைத்த வரவேற்பினை அடுத்து, தன் எஸ்5 ஸ்மார்ட் போனின் மினி மாடலையும் வெளியிட்டது. விரைவில் இது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இத்தகவல், சாம்சங் நிறுவன இணைய தளத்தில் தரப்பட்டுள்ளது. காலக்ஸி எஸ்5 மினி டூயோஸ் (SM-G800H) என இது அழைக்கப்படுகிறது. இதில் இரண்டு சிம் இயக்கம் தரப்பட்டுள்ளது.
இதன் 4.5 அங்குல அளவிலான திரை AMOLED டிஸ்பிளே கொண்டதாக உள்ளது. இதன் ப்ராசசர் 1.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கு குவாட் கோர் ப்ராசசராகும். ஆண்ட்ராய்ட் 4.4.2 கிட்கேட் சிஸ்டம் இயங்குகிறது. எல்.இ.டி. ப்ளாஷ் கொண்ட 8 மெகா பிக்ஸெல் கேமரா பின்புறமாக இயங்குகிறது.
முன்புறத்தில், 2.1 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. இதனை டி.வி. ரிமோட் ஆகச் செயல்படுத்தலாம். அதற்கென இன்ப்ரா ரெட் எல்.இ.டி. இயங்குகிறது. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0., ஜி.பி.எஸ். மற்றும் என்.எப்.சி. ஆகியவை தரப்பட்டுள்ளன. S Health மற்றும் Heart rate ஆகியவை தரப்பட்டுள்ளன. இதில் தூசு மற்றும் நீர் புகாது என்ற சான்றிதழைப் பெற்றுள்ளது.
காலக்ஸி எஸ்5 மொபைல் போனில் தரப்பட்டுள்ள Finger Scanner மற்றும் Heart rate sensor தரப்பட்டுள்ளன. இதன் ராம் மெமரி 1.5 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை அதிகப்படுத்த ஸ்லாட் போர்ட் தரப்பட்டுள்ளது. இதன் பேட்டரி 2,100 mAh திறன் கொண்டது. இதன் பரிமாணம் 131.1 x 64.8 x 9.1 மிமீ. எடை 120 கிராம். கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் தங்க நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை விரைவில் வெளியிடப்படும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X