மொபைல் போனில் ஏரோ பிளேன் நிலை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஆக
2014
00:00

ஸ்மார்ட் போன்கள் அனைத்திலும், ஏரோ பிளேன் மோட் என்று ஒரு ஆப்ஷன் தரப்படுகிறது. பலர் இதனைப் பயன்படுத்துவது இல்லை. எனவே இது குறித்து கவலைப் படுவதில்லை. ஆனால், சில வேளைகளில், இந்த ஆப்ஷனை இயக்கிவிட்டு, பேச முடியாத நிலை உருவாகும்போது, மற்றவர் சொல்லி, இதனை இயங்கா நிலையில் வைக்கின்றனர். இந்த நிலை இயக்கப்படுகையில் என்ன நடக்கிறது என்று இங்கு பார்க்கலாம்.
ஸ்மார்ட் போனை ஏரோ பிளேன் மோடில் வைக்கையில், அதன் செல்லுலர் ரேடியோ, வை பி, புளுடூத் ஆகியவை செயல்படுவதில்லை. செல் டவர்களுடன் போனால் தொடர்பு கொள்ள முடியாது. பேச அழைப்பு விடுக்க முடியாது. எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியாது. அதாவது செல் டவர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் எந்த பணியையும் மேற்கொள்ள முடியாது.
போன் வை பி நெட்வொர்க்கில் இணைய முடியாது. இதனால், அந்த நெட்வொர்க் வழியே எந்த சாதனத்தையும் தொடர்பு கொள்ள இயலாது. ஏற்கனவே, வை பி செயல்பாட்டை இயக்க நிலையில் வைத்திருந்தால், ஏரோ பிளேன் மோடில், அது தானாகவே செயல் இழக்கும்.
ஏரோபிளேன் மோடில், புளுடூத் இயங்காது. பெரும்பாலானவர்கள், புளுடூத் இயக்கி தங்களுடைய ஹெட் செட்டினை இயக்குவார்கள். இது செயல்படாது. ஆனால், மவுஸ் மற்றும் கீ போர்ட் ஆகியவற்றை இயக்க முடியும்.
இந்நிலையில் ஜி.பி.எஸ். எனப்படும் நம் போன் இயங்கும் இடத்தை அறியும் தொழில் நுட்பம் இயங்காது. பொதுவாக விமான நிறுவனங்கள் இதனை இயக்குவதைத் தடை செய்துள்ளன. இந்த நிலை இயக்கப்படுகையில், ஸ்மார்ட் போனில், உள்ள ஏரோபிளேன் மோட் ஐகான் இயக்கப்பட்டிருக்கும் நிலையில் ஒளி விட்டபடி இருக்கும். ஐபோன், ஐபேட் மற்றும் ஸ்மார்ட் போன்களில் இது மேலாகக் காட்டப்படும்.
பொதுவாக மொபைல் போன்கள் செல் டவர்களை தங்கள் சிக்னல்களுக்காக சிரமத்துடன் தேடுவதால், விமானப் பயணங்களில், அதன் சாதனங்கள் இயக்கம் பாதிக்கப்படும். எனவே, ஏரோ பிளேன் மோடில், போன்களை அமைக்க வேண்டியதிருக்கும். பொதுவாகவே, செல் டவர்களிலிருந்து சிக்னல்கள் கிடைக்காததால், நாம் போனைப் பயன்படுத்துவது இல்லை. மேலே செல்லாமல், விமான நிலையத்தினுள் உள்ள விமானங்களில் அமர்ந்திருக்கையில், போன்கள் செல் டவர்களைத் தொடர்பு கொள்ள முடியும். இது போன்ற சூழ்நிலைகளில், நாம் நம் செல் போன்களை இயக்கக் கூடாது என விமான ஊழியர்கள் தடுத்துவிடுவார்கள்.
நீங்கள் விமானத்தில் இல்லாத போதும், இந்த நிலை உங்களுக்கு உதவிடும். உங்கள் போனில் உள்ள பேட்டரி சக்தியைக் காப்பாற்ற இதனை இயக்கலாம். ஏரோ பிளேன் மோட் இயக்கப்படுவதால், பல வயர்லெஸ் நெட்வொர்க் பணிகள் மேற்கொள்ளப்படாது.
எனவே, பேட்டரியின் மின் சக்தி மிச்சமாகிறது. ஆனால், இதனை இயக்கினால், நமக்கு அழைப்புகளும் கிடைக்காது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.
சில பயணியர் விமான நிறுவனங்கள், தங்கள் விமானங்களில் பயணம் செய்வோரிடம், கட்டணம் பெற்றுக் கொண்டு, வை பி இயக்க அனுமதிக்கின்றனர். அப்போது அழைப்புகளை இயக்க முடியாது. ஆனால், வை பி இயக்க முடியும். அதன் மூலம் சில சாதனங்களைத் தொடர்பு கொள்ள முடியும். குறிப்பாக இன்டர்நெட் சேவையினைப் பயன்படுத்த முடியும்.
விரைவில், பயணிகள் கட்டணம் செலுத்தி, மொபைல் போன்களுக்கான அழைப்புகளையும் மேற்கொள்ளக் கூடிய வசதியினை விமான நிறுவனங்கள் தரும் காலம் வரும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
satheesh babu - Chennai  ( Posted via: Dinamalar Android App )
18-ஆக-201421:01:46 IST Report Abuse
satheesh babu you can use alarm in this mode
Rate this:
Share this comment
Cancel
Jaiganesh Tamilmani - Chennai,இந்தியா
18-ஆக-201419:13:35 IST Report Abuse
Jaiganesh Tamilmani Gud information
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X