பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஆக
2014
00:00

பாதிப்பு ஏற்பட்டு, ஹார்ட் டிஸ்க் முடங்கிப் போன பின்னர் தான், நாம் கைகளைப் பிசைந்து கொண்டு, செய்வதறியாது விழிக்கிறோம். அந்த வகையில், ஹார்ட் டிஸ்க்கினைப் பாதுகாக்க நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை மிக அழகாக பட்டியலிட்டுள்ளீர்கள். குறிப்பாக, வெப்பம் அதிகமானால், ஹார்ட் டிஸ்க் கெட்டுப் போகும்; நீண்ட பயன்பாடு, வெப்பத்தைத் தரும் என்பதனை யாரும் உணர்வதில்லை. இதனை எடுத்துக் காட்டிய கட்டுரை சிறப்பானது.
-எம். சுப்ரமணியம், செங்கல்பட்டு.

மாதாமாதம் வரும் ஸ்மார்ட் போன்களின் புதிய மாடல்களில், திரைகள் பெரிதாவது ஏதோ வியாபார தந்திரம் என்று எண்ணியிருந்தேன். அத்துடன் அதற்கு வேறு காரணங்கள் இருப்பதனையும் எடுத்துக் கூறியுள்ளீர்கள். இறுதியில் தரப்பட்ட கவிஞர் ஒருவரின் வரிகள் எனக்குச் சிரிப்பினையே வர வழைத்தன. ஒவ்வொரு ஸ்மார்ட் போனும், ஒரு முறம் போல ஆகிக் கொண்டு வருகிறது என்பது உண்மையே. அது தேவையாகவும் உள்ளது.
-டாக்டர் ஆர். சுந்தரம், மதுரை.

கம்ப்யூட்டருக்கான சிஸ்டம் ஹெல்த் ரிப்போர்ட் ஒரு நல்ல செக் அப் ரிப்போர்ட் போல. தங்கள் பதிலில் மிகக் குறைவாகவே தகவல் தரப்பட்டுள்ளது. இது குறித்து இன்னும் விளக்கங்களுடன் ஒரு கட்டுரை தரவும்.
சி.ஆறுமுகம், பெரம்பூர்.

மிடில்வேர் என்று இப்போதுதான் நான் கேள்விப் படுகிறேன். நம் வாசகர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும், தகவல்களைத் தேடி பதில் தரும் உங்களுக்கு என் பாராட்டுதல்கள்.
எஸ். ஸ்ரீலதா, சென்னை.

அனைத்து சாதனங்களுக்கும் ஒரே விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்பது நல்ல முயற்சியே. அதே போல ஒருவர் தன்னிடம் உள்ள கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் சாதனங்களுக்கும் சேர்த்து ஒரே சிஸ்டத்திற்குக் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் பழக்கத்தினையும் கொண்டு வர வேண்டும்.
ஆர்.கிருஷ்ணன், கோவை.

நீங்கள் விளக்கமாகக் குறிப்புகள் அளித்துள்ள அனைத்து பிரவுசர்களில், ஒயிட் ஹேட் ஏவியேட்டர் பிரவுசர் மிகச் சிறப்பாக செயலாற்றுகிறது. நிச்சயமாய், உங்கள் கட்டுரை பலரை கூகுள் குரோமிலிருந்து வெளியேறச் செய்திடும். ஏனென்றால், எந்த அப்ளிகேஷன் போனாலும், தகவல்களை எல்லாம் எடுத்துக் கொள்ளட்டுமா என்றே மைக்ரோசாப்ட் நிறுவனமும், கூகுள் நிறுவனமும் கேட்கின்றன. அச்சமாகவே இருக்கிறது. தகவல்களுக்கு நன்றி. அனைவருக்கும் பயன்படும்.
பேரா. கெ.இராமமூர்த்தி, கோவை

பாதுகாப்பு ஒன்றுதான், இன்றைய இணைய உலாக்களில் பிரச்னையாக உள்ளது. எனவே, புதியதாக நீங்கள் சுட்டிக் காட்டியிருக்கும், அனைத்து பிரவுசர்களும், சிறந்த முழுமையான பாதுகாப்பினைத் தரும் பட்சத்தில், பலர் இவற்றுக்கு மாறுவார்கள். எப்போது எந்த வழியில் மால்வேர்கள் வருமோ, நம் பேங்க் அக்கவுண்ட் மற்றும் பாஸ்வேர்டைத் திருடுமோ என்ற பயம் இருக்கும் வரை நாம் இது போன்ற பிரவுசர்களைக் கையாள வேண்டியதுதான்.
-எஸ். தேவிப் பிரியா, ஹோசூர்.

''இணையம் தான் இனி சாதிக்கும்” என்ற தலைப்பில், எழுந்து வரும் டிஜிட்டல் பொருளாதார மாற்றம் குறித்து அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள். நீங்கள் எடுத்துக் காட்டியிருக்கும் வங்கிகளின் செயல்பாடு, உங்கள் கூற்று உண்மையென்றே எண்ண வைக்கிறது. நிச்சயம் பன்னாட்டளவில் இதனால் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்ப்போம்.
-எஸ்.கிருஷ்ணன், சென்னை.

வாட்ஸ் அப் மட்டுமின்றி, இன்று பெண்கள் தான், அதிகம் இணையம் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக இணைய தளங்களைப் பயன்படுத்துகின்றனர். இதற்குக் காரணம், பெண்கள் வெளியேறி வர்த்தகம் போன்றவற்றில் ஈடுபட்டால், தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தால், அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதே. இந்த நிதர்சனமான உண்மையை நீங்கள் நன்றாக விளக்கி இருக்கலாம். இருப்பினும், நல்ல கருத்தினை எடுத்துத் தந்ததற்கு நன்றி.
கே. சுதா ராணி, மதுரை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X