சபையர் கிளாஸ் டிஸ்பிளேயுடன் ஐபோன் 6
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஆக
2014
00:00

ஆப்பிள் நிறுவனத்தின் வர இருக்கும் புதிய மொபைல் போன் ஐபோன் 6ல், சபையர் கிளாஸ் டிஸ்பிளே இருக்கும் என்று பலவித உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. சபையர் கிளாஸ் தொழில் நுட்பம் குறித்து முன்பே கம்ப்யூட்டர் மலரில் செய்தி வெளியாகியது. இது ஐபோன் 6ல் இருக்கும் என்ற செய்தியை அடுத்து அது குறித்து கூடுதலாகச் சிலவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.
சென்ற ஜூன் மாதம் இந்த கிளாஸ் திரை குறித்து இரண்டு வீடியோக்கள் வெளியாகின. 4.7 அங்குல அளவில், இந்த பொருளினால் ஆன திரை ஆப்பிள் ஐபோன் 6ல் இருக்கக் கூடும் என்று தெரிகிறது. இன்னொரு தகவல், கூடுதலாக வெளியிடப்படும் இன்னொரு மாடல் போனில், 5.5. அங்குல அளவில் ஒன்றும் இருக்கலாம். எப்படி இருந்தாலும், நிச்சயம் ஐபோன் 5 கொண்டுள்ள திரையைக் காட்டிலும், பெரியதாகவே இருக்கும். இதில் ஸ்கிராட்ச் ஏற்பட வழியே இல்லை. பலமான ஆணி மற்றும் சாவியைக் கொண்டு இதில் கீறல்களை ஏற்படுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்ததையே, வெளியிடப்பட்ட வீடியோக்கள் காட்டுகின்றன.
ஐபோன் 6 குறித்து ஆப்பிள் நிறுவனம், தன் உரிமை மையத்தில் சில காப்பீட்டு உரிமையைக் கோரியுள்ளது. அதன்படி, இந்த மாடல் போனின் தடிமன் இதுவரை வந்த போன்களின் தடிமனைக் காட்டிலும் குறைவாகவே இருக்கும். இதில், ஆப்பிள் நிறுவனம், 2010 ஆம் ஆண்டில் பெற்ற காப்புரிமையான LiquidMetal தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும். இந்த உரிமையினைச் சென்ற வாரம், ஆப்பிள் நிறுவனம் புதுப்பித்துள்ளது. அவ்வாறு புதுப்பிக்கும்போது, ஏற்கனவே உரிமம் பெற்ற தொழில் நுட்பத்தினை, சபையர் கிளாஸ் திரையுடன் இணைக்கும் உரிமையையும் பெற்றுள்ளது.
வர இருக்கும் ஐபோனின் ராம் மெமரி 1ஜி.பி. என்ற அளவிலேயே இருக்கும். இதே அளவு தான் ஐபோன் 5லும் இருந்தது. சாம்சங் காலக்ஸி எஸ் 5 மாடல் போனில் தரப்படும் ராம் மெமரியைக் காட்டிலும் இது குறைவாகும். ஐபோன் 6ன் பெரிய வகை மாடலில் தரப்படும் பேட்டரி 2915 mAh திறன் கொண்டதாக இருக்கும். சிறிய வகை மாடல் போனில், பேட்டரியின் திறன் 1800 and 1900 mAh இடைப்பட்டதாக இருக்கலாம்.
ஆப்பிள் நிறுவனம், 2012ல் வயர்லெஸ் சார்ஜிங் தொழில் நுட்பத்திற்கான உரிமம் பெற்றிருந்தது. இதனை, ஐபோன் 6ல், அநேகமாக ஆப்பிள் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சீன இதழ் தெரிவித்த தகவலின் படி, ஐபோன் 6ல், முன்பு வழங்கப்பட்ட 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமராவே வழங்கப் படும். ஆனால், இதில் மேம்படுத்தப்பட்ட இமேஜ் ஸ்டெபிலைசேசன் தொழில் நுட்பம் தரப்படுவதால், கேமராவின் திறன் கூடுதலாக இருக்கும்.
ஆப்பிள் நிறுவனத்தின் பயோமெட்ரிக் விரல் ரேகை தொழில் நுட்பமான TouchID, ஐபோன் 6ல் பயன்படுத்தப்படும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். கிடைத்த இன்னொரு தகவலின்படி, ஐபோன் 6ல் இருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் லோகோ, போனுக்கு நோட்டிபிகேஷன் எனும் அறிவிப்புகள் வரும்போது, ஒளிவிடும் வகையில் அமைக்கப்படும் எனத் தெரிகிறது. அத்துடன், வைப்ரேஷன் எனப்படும் அதிர்வு அறிவிப்புகள், முற்றிலும் புதியனவாகத் தரப்படும். இதுவரை எந்த நிறுவனமும் இதில் மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. எனவே, ஆப்பிள் தர இருக்கும் புதிய வகை வைப்ரேஷன், நிறுவனத்தை அடையாளம் காட்டும் வகையில் இருக்கும்.

Advertisement

 

மேலும் மொபைல் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X