இன்டர்நெட் எக்ஸ்புளோரர் கூடுதல் தகவல்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஆக
2014
00:00

சென்ற இதழில் மைக்ரோசாப்ட் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்கான சப்போர்ட் பைல்கள் தருவதனை நிறுத்த இருப்பதான தகவல் குறித்த கட்டுரை வெளியானது. பல வாசகர்கள், தாங்கள் பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் குறித்து எழுதி விளக்கம் கேட்டுள்ளனர். மைக்ரோசாப்ட் நிறுவனம் இது குறித்து வெளியிட்டுள்ள தெளிவான தகவல் தொகுப்பு இங்கு தரப்படுகிறது.
இந்த அறிவிப்பு மைக்ரோசாப்ட் மென்பொருட்களுக்கான துணை மென்பொருட்கள் தயாரிக்கும் டெவலப்பர்களுக்கென தரப்பட்டுள்ளது. விண்டோஸ் எக்ஸ்பியுடன் பயன்படுத்தக் கூடிய அதிக பட்ச மேபடுத்தப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8க்கான சப்போர்ட் நிறுத்தப்படுகிறது. உடனடியாக, பிரவுசர்கள் இயங்குவது நிறுத்தப்படும் என்பது பொருளல்ல. இதற்கான பாதுகாப்பிற்கான கூடுதல் பேட்ச் பைல்கள் தருவது நிறுத்தப்படும். இதனைப் பயன்படுத்துவதில் ஏற்படும் பாதகங்களுக்கு, விளைவுகளுக்கு மைக்ரோசாப்ட் பொறுப்பேற்காது. கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களிடமிருந்து இவற்றைப் பாதுகாக்கும் எந்தவித நடவடிக்கைகளிலும் மைக்ரோசாப்ட் ஈடுபடாது.
2016 ஜனவரி முதல் கீழே தரப்பட்டுள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், அதனுடன் குறிக்கப்பட்டிருக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்புகளே சப்போர்ட் செய்யப்படும். பாதுகாக்கப்படும்.
1. விண்டோஸ் விஸ்டா எஸ்.பி.2: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9
2. விண்டோஸ் சர்வர் 2008 எஸ்.பி. 2: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9
3. விண்டோஸ் 7 எஸ்.பி.1: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11
4. விண்டோஸ் சர்வர் 2008 எஸ்.பி. 1: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11
5. விண்டோஸ் 8.1: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11
6. விண்டோஸ் சர்வர் 2012: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10
7. விண்டோஸ் சர்வர் 2012: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11
மேலே தரப்பட்டுள்ள முடிவுகளுக்கு, பாதுகாப்பே காரணம் என்று மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இன்றைய நிலையில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8, 69% தான் பாதுகாப்பானது, ஆனால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11, 99% பாதுகாப்பானது. தர்ட் பார்ட்டி நிறுவனங்கள் வழங்கும் பாதுகாப்பிற்கான பேட்ச் பைல்களும் கிடைக்காது. அவை பாதுகாப்பினையும் தராது. ஏனென்றால், எப்படிப்பட்ட பைல்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படைத் தகவல்களை, இந்த நிறுவனங்களுக்கு மைக்ரோசாப்ட் தான் வழங்கி வந்த்து. அவை நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் புதிய பதிப்பு, தற்போதைய இணைய இயக்க தகுதி வரைமுறைகளுடன் இணைந்து இயங்கும்படி அமைக்கப்பட்டுள்ளது என்றும், அதனால், தற்போது இயங்கும் அனைத்து அப்ளிகேஷன்களும் இதில் இயங்கும் எனவும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. மேலும், இந்த புதிய பதிப்பினைப் பயன்படுத்துவதால், வரக்கூடிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை இயக்குவது எளிதாக இருக்கும் என்று நினைவு படுத்தியுள்ளது. ஏனென்றால், வரும் ஆண்டுகளில் விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களுக்கான சப்போர்ட் நிறுத்தப்பட இருக்கிறது.
உங்களுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர், தற்போதைய தேவைகளுக்கேற்ப அப்டேட் செய்யப்பட வேண்டும் எனில், அதனைத் தானாக அப்டேட் செய்திடும் வகையில் செட் செய்திடுதல் வேண்டும்.
அண்மையில் NetMarketShare அமைப்பு எடுத்த கணக்கெடுப்பின்படி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8, இணையத்தை வலம் வர 22% கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11 பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் 17% மட்டுமே. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 மற்றும் 9 ஆகியவை 15% கம்ப்யூட்டர்களில் இயங்குகின்றன. புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களுக்கு மாற விரும்பாதவர்கள், குரோம் அல்லது பயர்பாக்ஸ் பிரவுசர்களைப் பயன்படுத்துவதே நல்லது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X