பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஆக
2014
00:00

தெரிந்தே செய்திடும் தவறுகள்” என்று நீங்கள் பட்டியலிட்டுள்ள பத்து தவறுகளில், நாம் ஒவ்வொருவரும் நிச்சயம் ஐந்து தவறுகளையாவது தொடர்ந்து செய்து கொண்டு வருவோம். ஏன், திருந்தக் கூடாதா என்று கேட்டால், அதற்கெல்லாம் நேரமில்லை என்று ஒரே நொடியில் பதில் சொல்வோம். இறுதியில் கம்ப்யூட்டர் முடக்கப்பட்ட பின்னர், பதற்றமும் ஆத்திரமும் கொள்வோம். இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டவற்றைப் பின்பற்றினால், நிச்சயம் கம்ப்யூட்டரின் வாழ்நாள் கூடும். நமக்கும் நிம்மதி கிடைக்கும்.
கா. சிரஞ்சீவி நாதன், சென்னை.

ஆண்ட்ராய்ட் போனுக்கு மாறினாலும், அதன் முழுமையான பயன்களை அனைவரும் அனுபவிப்பதில்லை என்றுதான் கூற வேண்டும். இது குறித்த தங்களின் கட்டுரை மிகவும் பயனுள்ளது. ஆனால், இன்னமும் நிறைய இதில் தேவைப்படும். தொடர்ந்து தொடர் கட்டுரையாக கூடுதல் வசதிகள் குறித்து எழுதவும்.
எஸ். மகேஸ்வரன், உசிலம்பட்டி.

ப்ளாடா வைரஸ் குறித்து மட்டுமல்ல, புதிதாய் வந்து கொண்டே இருக்கும் அனைத்து வைரஸ்களுமே நமக்கு இடையூறு விளைவிப்பவையாகவே இருக்கும். இதற்கான சரியான பேட்ச் பைல் கிடைக்காவிட்டால், நம் பாடு திண்ட்டாட்டம் தான். இதனை உணர்ந்து தேவையற்ற நடவடிக்கைகளில் நாம் ஈடுபடக் கூடாது.
என். சுந்தர மகாலிங்கம், ராஜபாளையம்.

விண்டோஸ் 7 சிஸ்டம் கொண்டுள்ள சில முக்கிய மாற்றங்களையும், அதன் வசதிகளையும் பட்டியலிட்ட கட்டுரை, இதற்கு மாறலாமா வேண்டாமா என்ற மனப் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைப்பதாக உள்ளது. குறிப்பாக, சிஸ்டத்திற்கான ஸ்டார்ட் அப் சிடி தயாரித்து பயன்படுத்துவது குறித்த டிப்ஸ் மிகவும் உதவியாக உள்ளது. இது போன்ற மற்ற புதிய கூடுதல் வசதிகள் குறித்தும் தொடர் கட்டுரைகள் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என். ரவிச்சந்திரன், மதுரை.

பல ஆண்டுகளாக விண்டோஸ் 7 பயன்படுத்தி வருகிறேன். சிஸ்டத்தில் ஏற்படும் பிரச்னைகளைக் கண்டறிய நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள வழி குறித்து எதுவும் அறியாதவனாகவே இருந்துள்ளேன். ஆனால், நீங்கள் தெளிவாகவும், எளிதில் புரியும் வகையிலும் அந்த வழியைக் காட்டியுள்ளீர்கள். மிக்க நன்றி.
என். கலா ராணி, திருமங்கலம்.

விண்டோஸ் கால்குலேட்டர், முதல் தோற்றத்தில் ஏதோ சிறிய, குறைவான வசதிகளைக் கொண்டதாகவே காட்சி அளிக்கிறது. ஆனால், அனைத்து செயல்பாடுகளையும் கொண்டுள்ளது என்பது அதன் சிறப்பே. எடுத்துக் காட்டிய தங்களுக்கு நன்றி.
கா. மயில்ராஜன், தாம்பரம்.

ஜிமெயில் பயன்படுத்தும் போதெல்லாம், ஆர்க்கிவ் என்று ஒன்று உள்ளது என எண்ணிக் கொண்டு அதன் பக்கமே போவதில்லை. ஆனால், அதனை சேமிப்புக் கிடங்கு என்று தலைப்பிட்டு, மிக அழகாக அனைத்து வசதிகளையும், இயக்கத்தினையும் எடுத்துக் காட்டியுள்ளீர்கள். இந்தக் கட்டுரையை எழுதிய உங்கள் துணை ஆசிரியருக்கு நன்றியும் பாராட்டுதல்களும்.
எஸ். மீனா பிரதாப், உத்தமபாளையம்.

நம் பூமியை விண்வெளியில் இருந்து பார்க்கும் அனுபவம் எத்தனை பேருக்குக் கிடைக்கும். நிச்சயம் எண்ணிவிடலாம். அப்படி இல்லாமல், சாட்டலைட் மூலம் அவற்றை போட்டோ எடுத்து, அனைவருக்கும் அவை பார்க்கக் கிடைக்கும் வகையில் இணையதளத்தில் பதிந்து வழங்கும் பணியை மேர்கொண்டுள்ளவர்களைப் பாராட்ட வேண்டும். குறிப்பிட்ட இணைய தளம் சென்று நான் அந்தப் பணியைச் செய்தேன்.
எஸ். கீர்த்திவாசன், மதுரை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X