இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 ஆக
2014
00:00

ஜாதக பயம்!
எனது நண்பரின் மகள், சமீபத்தில், தன் கூட படிக்கும் மாணவனோடு வீட்டை விட்டு சென்று விட்டாள். நல்லவேளையாக, உடனே புகார் கொடுத்து அன்றே கண்டுபிடித்து, வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர். நண்பரின் மகளிடம், 'ஏன் இப்படி நடந்து கொண்டாய்?' எனக் கேட்டேன்; அதற்கு அவள் சொன்ன பதில் வருத்தத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
'பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் நிலைக்காது...' என்று ஜாதகத்தில் இருப்பதாக கூறி நண்பரும், அவர் மனைவியும் மகள் முன்னிலையிலேயே அடிக்கடி புலம்புவார்களாம். அதுதான், 'நாமளே ஒருத்தன கணவனா தேர்ந்தெடுத்தா பிரச்னை இல்லையே'ன்னு நண்பரின் மகள் இந்த முடிவை எடுத்திருக்கிறாள்.
நண்பரிடம் இதுபற்றி கேட்டதற்கு, 'ஆமாம்; அவ ஜாதகத்துல இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா சொன்னாங்க; அத அவ இருக்கிறப்போ பேசி இருக்கிறோம்; ஆனா, அந்த பேச்சு இப்படி ஒரு விளைவை ஏற்படுத்தும்ன்னு நினைக்கல...' என்றார்.
ஜாதகம் பார்த்து அதில் உள்ள நன்மை, தீமைகளை பிள்ளைகள் முன் பெற்றோர் விவாதிப்பது தேவையற்றது; இம்மாதிரி தவறான முடிவை பிள்ளைகள் எடுக்க, பெற்றோரே உதாரணமாகி விடக் கூடாது.
— எஸ்.சுந்தரமூர்த்தி, பொன்னேரி.

திருந்துவரா!
அண்மையில், என் உறவினர் ஒருவரின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரை சென்றிருந்தேன். விழா முடிந்த மறுநாள் காலை, தேநீர் அருந்துவதற்காக அருகிலுள்ள டீக்கடைக்கு சென்றிருந்தேன்.
அப்போது, தள்ளுவண்டி ஒன்றில், நடக்க இயலாத வெண்படை நோயாளி ஒருவர் அமர்ந்திருக்க, அந்த வண்டியை நடுத்தர வயது பெண்மணி தள்ளிக் கொண்டு வந்து கடைக்கு அருகில் நிறுத்தி, ஒரு அலுமினிய குவளையை நீட்டி, 'ஒரு கப் டீ வேணும்...' என்று கையில் சில்லரையை வைத்துக் கொண்டு கேட்டார். கடைக்காரர் டீ கொடுக்க மறுத்து விட்டார். அங்கு நின்று கொண்டிருந்தவர்களில் சிலர், 'காசு வாங்கிட்டு டீ போட்டுக் கொடுக்க வேண்டியது தானே...' என்றனர்.
அதற்கு அந்தக் கடைக்காரர், 'இம்மாதிரி ஆளுங்களுக்கு டீ கொடுத்தா வாடிக்கையாளர்ங்க இங்கு வர மாட்டாங்க...' என்றார்.
எவ்வளவு தான் சமுதாயம் முன்னேறி இருந்தாலும், இப்படியும் மனிதநேயமே இல்லாத மனிதர்கள் இருக்கத் தான் செய்கின்றனர்.
இவரைப் போன்றோர் இனியாவது திருந்துவரா!
— போஸ்குமார், சென்னை.

புகைப்படங்கள் மூலம் உறவுகளை பலப்படுத்தலாமே!
என் நண்பர் வீட்டுக்கு சென்றிருந்தேன்; பழைய புகைப்படங்களை துடைத்து சுவற்றில் மாட்டிக் கொண்டிருந்தார். 'இப்போதெல்லாம் யார் பழைய புகைப்படங்களை மாட்டுகின்றனர்; எதற்கு இந்த வீண் வேலை...' என்றேன்.
அதற்கு அவர், 'அப்படி சொல்லாதே... நம் பெற்றோர் மற்றும் முன்னோர், உறவினர் புகைப்படங்களை இப்படி மாட்டி வைப்பதன் மூலம், குழந்தைகளுக்கு அவர்களோட வேர்களை அறிமுகப்படுத்துறோம். வெளியே செல்லும் போது நம் தாய், தந்தையரின் படங்களை வணங்கிச் செல்ல வலியுறுத்துவதுடன், பெற்றவர்கள் நம்மை வளர்க்க எப்படியெல்லாம் கஷ்டப்பட்டனர் என்று குழந்தைகளிடம் எடுத்துச் சொல்லணும். படங்களில் உள்ள உறவினர்களை சுட்டிக் காட்டி, யார் யார் என்ன உறவு முறைன்னு சொல்லிக் கொடுக்கணும். நாம, நம்ம வீட்டு பெரியவங்க படங்கள மூலையில் தூக்கிப் போடுறதால தான், நம்ம குழந்தைகளும், வயசான காலத்தில நம்மள மூலையில் தூக்கிப் போடுறாங்க; புகைப்படங்கறது பழைய சம்பவங்கள் நினைவுபடுத்துற ஒரு அழியாத நினைவுச் சின்னம்...' என்றார்.
நண்பரின் பதில் என்னை சிந்திக்க வைத்தது.
வி.ஜீவானந்தம், மதுரை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sicario - La Jolla,யூ.எஸ்.ஏ
01-செப்-201405:40:58 IST Report Abuse
Sicario ஜாதகம் என்ற கற்பனையில் இருந்து இந்த உலகம் எப்போது விடுபடுமோ தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
vazhi pOkkan - madurai ,இந்தியா
31-ஆக-201407:45:18 IST Report Abuse
vazhi pOkkan போஸ்குமார், இரண்டு கேள்விகள் - நீங்கள் அந்த தேனீர் கடை உரிமையாளரை தட்டி கேட்டீரா இல்லை அங்கு அங்கு தேனீர் வாங்கினீர்களா? அடுத்த கேள்விக்கு முன்னர், இது வன்கொடுமை சட்டத்தின் கீழ் கடும் தண்டனைக்கு உள்ளாக கூடிய குற்றம். தயவு செய்து, இதனை படித்தால், அந்த தேனீர் கடைகாரருக்கு சொல்லவும். அந்த மனிதர் காவல் துறையில் புகார் தந்தால் டீ கடைகாரர், ஜாமீன் பெற முடியாத சட்டமாகிய இதனால் சிறைக்கு போக நேரிடும். ஜாமீன் கிடையாது, கைது வாரண்ட் தேவை இல்லை. வெறும் புகாரின் பெயரில் ஒரு எஸ்.ஐ. கைது செய்யலாம் அடுத்தது இது தொற்று நோய் அல்ல - இவர்களை எப்படி அழைக்க கூடாது என்று அரசு குறிப்பிட்டு சொல்லி இருக்கிறது. இரண்டாவது கேள்வி. இவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என்று அடையாளம் சொல்லி இருக்கலாம். எங்கள் மதுரைக்கு இழுக்கு சேர்த்த இவரை ஒரு முறை விஸிட் செய்து "அறிவுரை" சொல்லி இருப்போமே.
Rate this:
Share this comment
Ravi - Kumbakonam,இந்தியா
05-செப்-201416:16:30 IST Report Abuse
Ravi வெண்புள்ளி ஒரு வியாதிதான் ,இதற்க்கு எப்படி வன்கொடுமை சட்டம் வரும்...
Rate this:
Share this comment
Cancel
sulochana kannan - sydney,ஆஸ்திரேலியா
31-ஆக-201405:06:23 IST Report Abuse
sulochana kannan 1) தன் செயலுக்கு பெற்றோரை காரணம் காட்டும் பெண் கண்டிப்புக்கு உரியவள். 2) டீ கேட்டவர்கள் என்ன பசியுடன் வந்தார்களோ. அவர்களுக்கு மறுப்பதை விட டி யை அவர்கள் குவளையிலெயெ ஊற்றி தரலாம் அல்லது disposable கப் ல் தரலாமே. (அதுவும் அவர்களை வேதனை ப்படுத்தும் தான்) 3)நண்பரின் கருத்துகள் அருமை. வேண்டுமானால் புகைப்படங்ககளை பிரேம் செய்து டேபிள் களில் வைக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X