வேர்ட் டேபிள் : செல் உயரம் மாற்ற
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 அக்
2010
00:00

வேர்ட் தொகுப்பில் டேபிள்களை அமைக்கையில், சிலவற்றை அதிக இடத்துடன் அமைப்போம். சிலவற்றைச் சுருக்கி சிறியதாக அமைத்திட ஆசைப்படுவோம். வேர்ட் மாறா நிலையில் தந்துள்ள, டேபிள் செல்களின் உயரத்தை எப்படி மாற்றுவது என இங்கு காணலாம். இந்த செட்டிங்ஸ் அமைப்பு, வேர்ட் தொகுப்பிற்கேற்றபடி மாறுபடும். நீங்கள் வேர்ட் 97 அல்லது வேர்ட் 2000 பயன்படுத்துபவராக இருந்தால்,
1. டேபிளின் எந்த படுக்கை வரிசையின் உயரத்தை மாற்ற வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2.டேபிள் மெனுவிலிருந்து Cell Height and Width  என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Cell Height and Width  என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.  இதில் Row  என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இந்த பாக்ஸில் உங்கள் டேபிளின் படுக்கை வரிசை எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதனை அமைக்கலாம். இதில்  Auto row height, At Least row height,   Exactly row height என மூன்று பிரிவுகள் இருக்கும். இதனைப் பயன்படுத்தினால் தானாக, அல்லது குறைந்த பட்சம் அல்லது சரியான ஒரு அளவில் என செல்லின் உயரத்தை அமைக்கலாம்.
4. இவற்றில் At Least row height  அல்லது  Exactly row height  என்பதைத் தேர்ந்தெடுத்தால், அதில் கட்டாயம் ஓர் அளவினை அமைக்க வேண்டும்.
5.ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
நீங்கள் வேர்ட் 2002 அல்லது வேர்ட் 2003 பயன்படுத்துபவராக இருந்தால், இந்த செட்டிங்ஸை சற்று வேறு வகையில் அமைக்க வேண்டும்.
1. டேபிளின் எந்த படுக்கை வரிசையின் உயரத்தை மாற்ற வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2.  டேபிள் மெனுவில் Table Properties  என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதனைத் தேர்ந்தெடுத்தவுடன், வேர்ட், உங்களுக்கு  Table Properties   என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும்.
3. இதில்  Row என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
4. பின்னர் Specify Height  ஐத் தேர்ந்தெடுக்கவும்.
5. நீங்கள் விரும்பியபடி செல்லிற்கான உயரத்தைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இந்த உயரத்திற்கு  குறைந்த பட்சம் அல்லது சரியாக (At Least or Exactly)  என்ற வரையறையை அமைக்கலாம்.
5. ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.  நீங்கள் வேர்ட் 2007 தொகுப்பினைப் பயன்படுத்துபவராக இருந்தால், கீழே குறிப்பிட்டுள்ளபடி அமைப்பை மேற்கொள்ளவும்.
1. டேபிளின் எந்த படுக்கை வரிசையின் உயரத்தை மாற்ற வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2.அடுத்து ரிப்பனில் Layout    டேப்பினைக் காட்டவும்.
3. பின்னர்  Cell Size   குரூப்பில், உயரத்திற்கான செட்டிங்ஸை நீங்கள் விரும்பிய படி அமைக்கவும்.  இப்போது வேர்ட்  Table Properties  என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4. உயரம் அமைக்க அதிகமான ஆப்ஷன்ஸ் தேவை என்றால்,   Table Properties  என்ற ஐகானில்  கிளிக் செய்திடவும். இது செல் சைஸ் குரூப்பில், கீழாக வலது பக்கம் இருக்கும்.
5.இதில் Row    என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் நீங்கள் விரும்பும் உயரத்தினை அமைக்கலாம்.
6. பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X