ஒரு சின்ன பெர்சனல் ப்ரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 அக்
2010
00:00

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பி னைக் கண்டு பயந்து ஓடிய எங்களுக்கு, நீங்கள் தந்த கட்டுரை, அதனை டவுண்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்கும் தைரியம் தந்தது.
–ஆர். கலாதரன்,  சென்னை
விண்டோஸ் எக்ஸ்பி உள்ளவர்களுக்கு, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 இயங்காது என்றால், இந்தியாவில் இது எடுபடாதே.
–சி. வாசுதேவன், விருதுநகர்
புதுப்புது பட்டாசுகளைக் காட்டிவிட்டு, எதையும் இங்கே வெடிக்கக் கூடாது என்பது போல, புதிய வசதிகளைப் பட்டியலிட்டு விட்டு, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பை, புதிய சிஸ்டத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது, மக்களை ஏமாற்றுவதாக உள்ளது. இப்படி எல்லாம், ஆப்ப ரேட்டிங் சிஸ்டத்தினை விற்பனை செய்ய முடியாது என்று எழுதுங்க சார்.
–சி. நாகராஜன், திருப்பூர்
டேப்ளட் பிசிக்களின் விலை குறைந்தால், பள்ளிக் குழந்தைகள் அந்தக் காலத்தில் ஸ்லேட் தூக்கிச் செல்வது போல அனைவரும் இதனைத் தூக்கிச் செல்வோம். அந்த நாள் விரைவில் வரட்டும்.
–ஆர். ப்ரீத்தி ராஜ், சென்னை
டேப்ளட் பிசி என்றால் என்னமோ என்று எண்ணி அது குறித்து அறியாமலேயே இருந்தோம். உங்களின் கட்டுரை, மிகத் தெளிவாக ஒரு ஐடியா கொடுத்தது. லேப்டாப்பிற்குப் பதிலாக, கூட்டாக இதற்கு மாறிக் கொள்ள எண்ணியுள்ளோம்.
–டி. கார்த்திக், பொறியியல் மாணவர்கள் சார்பாக,  கிருஷ்ணன் கோவில்
அபவுட் பிளாங்க் குறித்த தொழில் நுட்ப தகவல்கள் மிக எளிமையாகத் தரப்பட்டுள்ளன. இந்த  ஸ்பை வேரால் பாதிக்கப்பட்ட பலருகு இது உதவியாய் உள்ளது. எழுதியவருக்கு என் வாழ்த்துக்கள்.
–பேரா. டாக்டர் முத்துராஜ் சண்முகம், சிவகாசி
அட்ரஸ் டாக்டர் தளம் சென்று பார்த்தேன். மிகவும் பயனுள்ள தளம். எந்த அஞ்சல் குறியீடு எண் கொடுத்தாலும், ஊர் முகவரி, தெருப் பெயர்கள் என அனைத்தும் காட்டப் படுகின்றன. இந்த தளம் அமைக்க அதிகம் உழைத்திருக்க வேண்டும்.
–எஸ். முருகவேல், கம்பம்
ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் ஒரே நேரத்தில் பார்க்க என்ன செய்வது என்ற கேள்விக்கு பதிலாக உள்ளது நீங்கள் தந்துள்ள டிப்ஸ். நன்றி.
–என். ஜெய ப்ரீத்தி, தேனி
கேள்வி மிக மிக அடிப்படை பற்றியதோ, அல்லது புரியாத தொழில் நுட்பம் சார்ந்ததோ, அனைத்தையும் ஒரே மாதிரியாக எடுத்து, கவனமாகப் பதிலளிக்கும் உங்களுக்கு நாங்கள் மிகவும் கடமைப் பட்டுள்ளோம். உங்கள் பணி சிறக்க பிரார்த்திக்கிறோம்.
–சி. முருகவேல், காரைக்கால்
நான் ஒரு கணினி ஹார்ட்வேர் பொறியாளர். ஒரு மெகா பெரிய அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். உங்கள் கம்ப்யூட்டர் மலர் ஏழு வருட அனுபவம் கொண்ட எனக்கு ஒரு ஆசிரியராக உள்ளது. ஆனால் செட்டிங் ரெஜிஸ்ட்ரி எடிட் என்றெல்லாம் நீங்கள் சொல்வது ஆபத்தாக முடியும் என்பது என் கருத்து. உங்கள் தகவலை மிஸ் யூஸ் செய்திடும் வாய்ப்பு கள் அதிகமாகலாம். நன்றி.
–இணைய பதிப்பில் ஆசைத்தம்பி, வேளச்சேரி, சென்னை
என்னுடைய லொகேட் லிங்க் பிரவுசர் சந்தேகத்திற்கு, மிகவும் தெளிவாகப் பதில் தந்தமைக்கு நன்றி.
–எம். சக்திவேல் ராஜா, கோயம்புத்தூர்
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9, ""இணையத்தின் அழகு'' என்ற பெயரிட்ட இணைய தளத்தில் உள்ளது என்ற செய்தியே ஒரு கவிதையாக உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனமா இது போல கவினுறு பெயரைத் தந்துள்ளது என்ற ஆச்சரியம் இன்னும் என்னைவிட்டுப் போகவில்லை.
–சா. கா. கவிராஜா, திருத்தங்கல்
மொபைல் மணி பர்ஸ் அருமையான கான்செப்ட். நடைமுறைக்கு வந்தால், அனைவருக்கும் நலம் பயக்கும். ஏனென்றால், மொபைல் போன் இல்லாத ஆளே இல்லை. இதுவே பேங்க் ஆகவும் இருந்தால், திருட்டு பயம் இல்லாமல் செல்லலாம் அல்லவா.
–டி. உதயசூரியன், திருவண்ணாமலை

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X