மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் நைட் கேமியோ ஏ 290
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 செப்
2014
00:00

கேன்வாஸ் வரிசையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன் புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை Canvas Knight Cameo A290 என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 11,490. ஸ்நாப் டீல் வர்த்தக இணைய தளத்தில் தற்போதைக்கு இதனைப் பெற்றுக் கொள்ளலாம். விரைவில் விற்பனை மையங்களிலும் இதனை வாங்கலாம். இதன் திரை 4.7 எச்.டி. டிஸ்பிளே கொண்டது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் கிட் கேட் 4.4. இதன் பின்புறக் கேமரா எல்.இ.டி. ப்ளாஷ் உடன், 8 எம்.பி. திறன் கொண்டதாக உள்ளது. கேன்வாஸ் நைட் போனில் 16 மெகா பிக்ஸெல் கேமரா தரப்பட்டது நினைவிருக்கலாம். ஆனால், முன்பக்கமாக, அதே 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது.
இந்த மாடல் ஏறத்தாழ Canvas Knight Cameo A350 மாடல் போனைப் போன்ற வடிவமைப்பினைக் கொண்டுள்ளது. இதில் இரண்டு சிம்கள் இயங்குகின்றன. ஒரு ஜி.பி. ராம் மெமரி, 8 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரியுடன், மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் உள்ளன. இதன் பேட்டரி 2,000 mAh சக்தியுடன் உள்ளது. Cube 26, amazon,Book my show, clean master, hike, MAD, Opera mini, Savan, Spuul, swiftkey, thrill, truecaller, Yatra, Zaper போன்ற பல அப்ளிகேஷன்கள் பதியப்பட்டே கிடைக்கின்றன. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0. மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. கருப்பு, தங்க நிறம் கலந்த கருப்பு, வெள்ளை நிறம் கலந்த கருப்பு என மூன்று வண்ணங்களில் இது கிடைக்கிறது. இணைய வர்த்தக தளத்தில் ரூ. 11,490க்கு இதனை வாங்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X