Advertisement
அங்கிங்கெனாதபடி அனார்கலி!
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஆக
2014
00:00

ஒரு குறிப்பிட்ட கலாசாரத்தை, அதன் நாகரிகத்தின் குறியீடாக எடுத்துச் சொல்வதில், சில உடைகள் சிறப்பு பெறும். அப்படி ஓர் உடை தான் அனார்கலி.
முகலாய பேரரசு அக்பர் காலத்தில், சலீம் - அனார்கலியின் காதல் கதை, வரலாற்றில் புகழ் பெற்ற ஒன்று. அனார்கலி என்ற அந்தப் பெண் உடுத்தியிருந்த ஆடை, பலரையும் கவர்ந்து விட்டது. இப்போதும் அது போல் உடை அணிய பெண்கள் விருப்பம் தெரிவிப்பதால், அந்த உடையை அடையாளப்படுத்த, அதற்கு, அனார்கலி என்றே பெயராயிற்று. 1954 மற்றும் 1958ல் வந்த, இரண்டு வரலாற்று படங்களில், இந்த உடை இடம் பெற்றதாலும், புகழ் அடைந்ததாகத் தெரிகிறது.
பெண்கள் எந்த, 'ரெடிமேட்' உடை எடுக்கும் போதும் தன் உடல் நிறம், உயரம், எடை, இடை இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து, தேடித் தேடி தேர்வு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், இந்த அனார்கலி உடை, உடல் குறைகளை வெளிக்காட்டாமல், இதை அணியும் ஒவ்வொரு பெண்ணும், தன்னை ராணியாக, இளவரசியாக நினைக்கும்படி அமைந்து விடும்.
இடுப்புக்குக் கீழே பரந்து, விரிந்து குடை போல காட்சியளிப்பது தான், இதன் சிறப்பு. இந்த அனார்கலி, வட இந்தியாவில், பஞ்சாப் மாநிலத்தில் புகழ் பெற்றுள்ளது. கேரளாவில் கதகளி ஆடும்போது, ஆண், பெண் இரண்டு பேருமே, இதே பாணியில் உடை அணிவர்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் ஆண், பெண் இருபாலருமே, இந்த உடைகளை சாதாரணமாகவே அணிந்திருப்பர்.
தற்போதைய இந்தி படங்களின் கதாநாயகிகளால், இந்த உடை மீண்டும் மவுசு பெற்றுள்ளது.
ரெடிமேட் வகையில, 'ஹாப் ஸ்டிச்டு' என்று பாதி தைத்து, பாதி அப்படியே விட்டு வைக்கப்பட்டிருக்கும். நமக்கு எப்படி தேவையோ அந்த அளவிற்கு, விருப்பப்படி, இறுக்கமாக அல்லது தளர்வாக தைத்துக் கொள்ளலாம். காலர், வட்ட கழுத்து, 'வி' கழுத்து என, பல வகைகளில் அணியலாம்.
மணப்பெண்கள் கூட, வரவேற்பு நிகழ்ச்சியில், இந்த உடையை தற்போது அணிய விரும்புகின்றனர். அனார்கலி உடையுடன், துப்பட்டா போடுவது அவசியம். இல்லையெனில், தோற்றம் முழுமை பெறாது. அனார்கலி டிரஸ், அனார்கலி சூட், அனார்கலி அம்பர்லா, அனார்கலி திருமண உடை என, பல வகைப் பெயருடன், இந்த உடை சந்தையில் காணப்படுகிறது.
எந்த நாட்டு மக்களாக இருந்தாலும் அவர்களின் கலாசாரம், பண்பாடு, அவற்றின் அடையாளம் அந்த மக்கள் அணியும் உடைகளை வைத்து தான் முதலில் கணக்கிடப்படும். இந்த அனார்கலி உடையும், கலாசாரத்தோடு ஒத்துப் போவதாகவே அறியப்படுகிறது!

- ஆர்.சந்தியா

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.