இணைய போதை ஒழிப்பு மையம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 செப்
2014
00:00

சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், எந்நேரமும் இணையத்தில் பொழுதைக் கழிப்பதனையே தங்கள் முழு நேரப் பணியாகக் கொண்டு வருகின்றனர். ஸ்மார்ட் போன்களில் கிடைக்கும் வசதிகளால், சமூக இணைய தளங்களிலேயே தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதி நேரத்தைச் செலவழித்து வருகின்றனர். இதனால், இவர்களின் கல்வி கற்கும் மற்றும் பணியாற்றும் நேரம் வீணாகிறது. அமெரிக்காவில் பல ஆண்டுகளாகவே இந்த போதை உள்ளது. தற்போது, இந்த வரிசையில் இந்தியாவும் சேர்ந்துள்ளது.
இவர்களைத் திருத்தி, இணையத்தினை நம் தேவைக்கு மட்டும், நம்மை மேம்படுத்திக் கொள்ள மட்டும் பயன்படுத்த பழக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் அண்மையில், பெங்களூரு நகரில், இணைய போதை ஒழிப்பு மையம் ஒன்று தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. தொடந்து மும்பை, புனே, சென்னை மற்றும் ஹைதரபாத் நகரில் இவை தொடங்கப்பட இருக்கின்றன.
NIMHANS என்னும் அமைப்பின் கணிப்புப்படி, பருவ வயது உள்ள இளைஞர்களில், 73% பேர், இந்த இணைய போதையில் சிக்கியுள்ளனர். இதனால், உள் மன அழுத்த பிரச்னைக்கு (“psychiatric distress”) ஆளாகியுள்ளனர். இதற்குக் காரணம், இவர்கள் தொழில் நுட்பத்தினை அதிகம் பயன்படுத்துவதுதான். இவர்களை இப்படியே விட்டுவிட்டால், சமுதாயத்திற்கு எதிரானவர்களாக மாறும் பயம் உள்ளது. எனவே, இந்த மையங்கள் மூலம், இவர்களை இணைய போதை இளைஞர்கள் நிலையிலிருந்து மீட்டு, இணைய பயனாளர்களாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என இந்த மைய நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X