பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 செப்
2014
00:00

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பும் கைவிடப் படுகிறது என்ற செய்தி, நாம் எப்படி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒப்பந்த அடிமைகளாக இயங்கி வருகிறோம் என்பதனையே காட்டுகிறது.
எஸ். கலாதரன், நாகப்பட்டினம்.

புதிய வசதிகளுடன் மட்டுமின்றி, கூடுதல் பாதுகாப்பு தரும் புதிய பதிப்புகளுக்கு மாறாமல், பழைய இன்டர்நெட் எக்ஸ்புளோரரையே இன்னும் கட்டிக் கொண்டு மாற மறுக்கும் வாடிக்கையாளர்களுக்கு, மைக்ரோசாப்ட் நல்ல பாடம் கற்றுக் கொடுக்க முன்வந்துள்ளது பாராட்டத்தக்கது. டிஜிட்டல் உலகில் ஏற்படும் மாற்றங்களை மேற்கொண்டால் தான், நாம் நம் வாழ்வில் சிறக்க முடியும். பழைய டெலிபோன் முறையிலேயே இருந்தால், ட்ரங்க் கால் புக் பண்ணி காத்திருக்க வேண்டியதுதான். அது போல் தான் இதுவும். செலவழிக்கின்ற பணத்திற்கேற்ப வசதிகள் கிடைப்பதால், புதிய தொகுப்புகளுக்கு மாறுவோம்.
டாக்டர் -என். ஸ்ரீராம், கோவை.

விண்டோஸ் 9 சிஸ்டம், மைக்ரோசாப்ட் தான் விண்டோஸ் 8 மூலம் கற்றுக் கொண்ட பாடங்களின் எதிரொலியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இருப்பினும், விண்டோஸ் 8 ல் தரப்பட்ட புதிய தொழில் நுட்ப வசதிகளைத் தவிர்த்து விடாமல், புதிய சிஸ்டத்தினை உருவாக்க வேண்டும் என்பதே பலரின் அவா. தங்கள் கட்டுரை அப்படியே புதிய சிஸ்டம் இருக்கும் என்ற நம்பிக்கையைத்
தருகிறது.
-என். பாரத் வசந்தன், மேலூர்.

டேபிள் இணைப்புகளில் செல்கள் குறித்த டிப்ஸ் மிகவும் உதவியாய் இருந்தன. வெகுநாட்களாக, இவற்றை எப்படி சரி செய்வது? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் இருந்தேன். உதவியமைக்கு நன்றி.
எஸ். பரமேஸ்வரன், தாம்பரம்.

மொபைல் போனில் ஏரோ பிளேன் நிலை என்பது, ஏதோ விமானத்தில் பயணம் செல்பவர்களுக்கு மட்டும் என எண்ணி இருந்தேன். இதில் இத்தனை வசதிகள் உள்ளன என்பது நீங்கள் கொடுத்துள்ள டிப்ஸ்களைப் படித்த பின்னரே தெரிந்தது. அதே போல, ஆண்ட்ராய்ட் போனுக்கு மாறியவர்களுக்குக் கூடுதல் டிப்ஸ்களைத் தொடர்ந்து கொடுக்கவும்.
-என்.கதிரேசன், தேனி.

''பேஸ்புக் மெசஞ்சர்” தலைப்பில் வெளியான கட்டுரையை முதலில் படிக்கும்போது, உண்மையிலேயே ஆபத்து உள்ளதோ என்று எண்ணி, சில பாரா படித்தவுடனேயே, என் சாம்சங் எஸ் 4 போனில் இருந்த மெசஞ்சர் அப்ளிகேஷனை அன் இன்ஸ்டால் செய்தேன். தொடர்ந்து படிக்கும்போதுதான், அது ஆபத்தானது இல்லை என்று தெரிய வந்தது. முழுமையாகப் படித்து முடித்த பின்னர், மீண்டும் இன்ஸ்டால் செய்தேன். உங்களுக்குக் கடிதம் எழுதிய வாசகர் உங்களையும் குழப்பி, எங்களையும் சற்று தடுமாற வைத்துவிட்டார். உங்கள் விளக்கங்கள் அருமை. நன்றி.
எஸ். சரவணக் குமார், மதுரை.

என்னதான், நாம் அனுமதி கொடுத்தாலும், தீங்கு விளைவிக்கும் வகையில் எந்த பெரிய நிறுவனத்தின் அப்ளிகேஷனும் செயல்படாது. இந்த அடிப்படை நம்பிக்கையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். பேஸ்புக் மெசஞ்சர், தொடர்ந்து இடம் மாறுபவர்களுக்கு வசதியான ஒன்று. பேஸ்புக் நிறுவனத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.
பேரா. என். ஸ்ரீலதா, சிதம்பரம்.

யு.எஸ்.பி. ட்ரைவ் குறித்த கட்டுரை மிகவும் அருமை. அனைத்து தகவல்களையும் உள்ளடக்கி, எப்படி அவை தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்பதனையும் ஆணித்தரமாக எழுதியுள்ளீர்கள். நல்ல பாடக் கட்டுரை போல உள்ளது.
கா. சுப்ரமணியம், காரைக்குடி.

யு.எஸ்.பி. சார்ந்த தகவல் தந்துள்ள கட்டுரையில் பயர்வயர் குறித்து கூடுதல் தகவல் தந்திருக்கலாம். ஒரு தனிக் கட்டுரை ஒன்று பயர்வயர் தொழில் நுட்பம் குறித்துத் தரவும்.
எம்.எஸ். தில்லை நாதன், புதுச்சேரி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X