கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 செப்
2014
00:00

கேள்வி: மொபைல் போன் பயன்பாட்டில், அப்ளிகேஷன் மற்றும் விட்ஜெட் என வேறுபடுத்தி அழைக்கப்படுபவை எவை? ஆனால், அடிப்படையில் எந்த வேறுபாடும் தெரியவில்லையே? நான் சாம்சங் கேலக்ஸி எஸ் 4 பயன்படுத்தி வருகிறேன். இதில் சில அப்ளிகேஷன்களை நீக்கிய பின்னரும் அவை இயக்கப்படுகின்றனவே, ஏன்? இதன் தொடர்பான விட்ஜெட் எதுவும் இருக்குமா?
-கா.தீனதயாளன், மரக்காணம்.
பதில்:
அப்ளிகேஷன்கள் (App) மற்றும் விட்ஜெட்டுகள் (Widget) குறித்து விளக்கம் கேட்டு மிகப் பெரிய கடிதம், பல எடுத்துக் காட்டுகளுடன் அனுப்பியமைக்கு நன்றி. இந்த சந்தேகம் பலரின் மனதில் நிச்சயம் இருக்கும். கம்ப்யூட்டர் மலருக்கும் பல கடிதங்கள் இரண்டின் தன்மை குறித்து வந்துள்ளன. இரண்டிற்குக்ம் இடையிலான வேறுபாட்டினைப் பார்க்கலாம்.
எடுத்துக்காட்டாக, சீதோஷ்ணநிலையைக் காட்டும் விட்ஜெட் (weather widget) அப்போதைய சீதோஷ்ணநிலையைக் காட்டிக் கொண்டிருக்கும். நீங்கள் அதில் டேப் செய்தால் தான், மேலும் பல விபரங்களைக் காட்டும். உங்களுடைய கேள்வியின் அடிப்படைக்கு வருவோம். விட்ஜெட் என்பது உங்கள் மொபைல் போனின் திரையில் தங்கி, எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும். இதனால், அதனை ஜஸ்ட் ஒரு பார்வை பார்த்து நீங்கள் அது தரும் தகவலைப் பெறலாம். இந்த தகவலுக்காக, நீங்கள் ஓர் அப்ளிகேஷனத் திறக்க வேண்டியதில்லை. பல வேளைகளில், இந்த விட்ஜெட்கள், அவற்றை நீங்கள் டேப் செய்திடும் வரை, மினிமைஸ் செய்யப்பட்டே இருக்கும். மிகப் பிரபலமான விட்ஜெட் குறிப்பிட வேண்டும் என்றால், நேரம் காட்டும் கடிகாரம் மற்றும் சீதோஷ்ண நிலை காட்டும் விட்ஜெட் ஆகியவற்றைக் கூறலாம். இவற்றை டேப் செய்தால் மட்டுமே கூடுதல் தகவல்களைத் தரும்.
ஆனால், ஓர் அப்ளிகேஷன் என்பது, அதன் தகவல்களைப் பெற வேண்டும் எனில், அதனை டேப் செய்திட வேண்டியதிருக்கும். இனி, உங்கள் சந்தேகத்திற்கு வருவோம். விட்ஜெட்டுகள் சற்று கூடுதலான மெமரி மற்றும் பேட்டரி சக்தியைப் பயன்படுத்தும். ஏனென்றால், நீங்கள் போனை எடுத்தவுடனேயே, ஸ்கிரீன் உயிர் பெற்று, அதன் தகவல்கள் காட்டப்படுகின்றன. ஆனால், அப்ளிகேஷன்கள், நீங்கள் அவற்றைத் திறக்கும் போதுதான், பேட்டரி, ராம் மெமரி ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றன. இறுதியாக, நீங்கள் நீக்கிய பின்னும், ஓர் அப்ளிகேஷன் இயக்கத்திற்கு வருவதற்குக் காரணம், அவை வேறு ஒரு இயக்கத்துடன் இணைக்கப்பட்டிருப்பதுதான். எனவே, இவை தாமாக இயக்கத்திற்குத் தயாராக இருக்கின்றன.

கேள்வி: என்னிடம் அதிகக் கொள்ளளவு (32 ஜி.பி.) கொண்ட ப்ளாஷ் ட்ரைவ் இருக்கிறது. இதனை எப்போதும் என் பெர்சனல் கம்ப்யூட்டரில் செருகி வைத்து, பேக் அப் எடுக்க பயன்படுத்தி வருகிறேன். ஒரு சில நண்பர்கள், இது தேவை இல்லை என்றும், வேலை முடிக்கையில், ஒரே முறை பேக் அப் எடுக்கும்போது, செருகி, பைல்களை சேவ் செய்த பின்னர், எடுத்துவிடுவது நல்லது என்றும், இல்லை என்றால், ஹார்ட் ட்ரைவில் சிக்கல் ஏற்படுவது போல, பிரச்னை ஏற்பட்டு ப்ளாஷ் ட்ரைவ் கெட்டுப் போய்விடும் என்றும் எச்சரிக்கின்றனர். ஆனால், இதுவரை பிரச்னை ஏற்படவில்லை. உங்களின் அறிவுரை என்ன?
என். சியாமளா, திருப்பூர்.
பதில்:
நல்ல கேள்வி. நம் கம்ப்யூட்டரில் இயங்கும் ஹார்ட் ட்ரைவ் கெட்டுப் போவதைக் கேள்விப் பட்டு இந்த பயம் ஏற்பட்டிருக்கலாம். எந்த அளவிற்கு அதிகமாக நாம் ஹார்ட் ட்ரைவினைப் பயன்படுத்துகிறோமோ, அந்த அளவிற்கு விரைவில் கெட்டுப் போய்விடும் என்பது உண்மையே. அதிகம் பயன்படுத்துவதால் ஹார்ட் ட்ரைவின் ஹெட் மற்றும் எழுதப்படும் ப்ளாட்டர்கள் பரப்பு பழுதாகும் வாய்ப்புகள் ஏற்படும். அதனாலேயே, ப்ளாஷ் ட்ரைவும் அதே போல அதிகம் பயன்படுத்தினால், பழுதடைந்துவிடும் என உங்கள் நண்பர்கள் கூறி இருக்கலாம். ஆனால், இந்த ஒப்பீடு சரி அல்ல. ஏனென்றால், அது ஹார்ட் ட்ரைவினைப் போல வடிவமைக்கப்பட்டு செயல்படவில்லை. ஆனாலும், தேவைப்படாத நேரத்தில், ப்ளாஷ் ட்ரைவ்களைக் கம்ப்யூட்டரிலிருந்து நீக்கிவிடுதல் நல்லதுதான். கம்ப்யூட்டருக்குச் செலுத்தப்படும் மின் சக்தியில் அதிக ஏற்றம் இறக்கம் ஏற்பட்டால், கம்ப்யூட்டரின் பாகங்களை மட்டுமின்றி, ப்ளாஷ் ட்ரைவினையும் அது பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். இத்தகைய சூழ்நிலைகளில், ஹார்ட் ட்ரைவும் கெட்டுப் போய், பேக் அப் எடுக்கப்படும் ப்ளாஷ் ட்ரைவும் பழுதாகிப் போனால், நம் விலை மதிப்பற்ற டேட்டாவினை எங்கிருந்து பெறுவீர்கள்? ஹார்ட் ட்ரைவினயும், ப்ளாஷ் ட்ரைவினையும் வேறு புதியதாக வாங்கிக் கொள்ளலாம். நம் டேட்டாவினை எங்கிருந்து பெறுவது? எனவே, அவ்வப்போது கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் ப்ளாஷ் ட்ரைவ்களை, தேவையில்லாதபோது, நீக்கிப் பயன்படுத்துவதே நல்லது.

கேள்வி: நான் வர இருக்கின்ற ஆப்பிள் நிறுவனத்தில் ஐபோன் 6 வாங்கலாம் என்று விரும்புகிறேன். என் நண்பர், ஆண்ட்ராய்ட் போனில் இருக்கிற சில வசதிகள், ஐபோனில் என்றுமே கிடைக்காது என்று கூறுகிறார். மேலும், இந்தியாவில், ஆப்பிள் மொபைல் போன்கள் அவ்வளவாகப் பயன்பாட்டில் இல்லை என்றும் கூறுகிறார். இது உண்மையா? ஐபோனில் இருக்கவே முடியாத, ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களின் வசதிகள் எவை?
-என். சம்பந்த ராஜ், சென்னை.
பதில்:
ஐபோன் 6 மொபைல் போனில் என்ன வசதிகள் தரப்படும் என்பது குறித்து நமக்கு சில ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்களே கிடைத்துள்ளன. அவற்றையும், தற்போது ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கொண்ட மொபைல் போன்களில் தரப்படும் தொழில் நுட்ப வசதிகளையும் கொண்டு பார்க்கையில், உங்கள் நண்பர் கூறுவது போல, ஆண்ட்ராய்ட் தரும் சில வசதிகள், ஐபோனில் இப்போதைக்குக் கிடைக்காது என்றே தெரிகிறது. ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே தன்னுடைய முதல் ஐபோன் முதல் ஐபோன் 5 வரை கொடுத்து வந்தவற்றை, மீண்டும் ஒருங்கிணைத்துத் தருவதிலும், விண்டோஸ் மொபைல் தரும் சில வசதிகளை, எளிதாகப் பயன்படுத்தும் வகையில், சீரமைத்துத் தருவதிலும் முயற்சிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆப்பிளின் புதிய போன், வழக்கமான திரையைக் காட்டிலும் சற்றுப் பெரிய திரையுடன் வர உள்ளதாகத் தெரிகிறது. இதுவரை இந்த வகையில், ஆண்ட்ராய்ட் போன்களுடன், ஆப்பிள் போட்டியிட்டதே இல்லை. ஆனால், இது ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு விஷயமே இல்லை. ஏன், ஆண்ட்ராய்ட் போனில் மட்டுமே கிடைக்கும் சில வசதிகளைக் கூட, ஆப்பிள் வாடிக்கையாளர்கள் லட்சியம் செய்ததே இல்லை. அந்த அளவிற்குத் தன் தொழில் நுட்ப திறமையினால், ஆப்பிள் வாடிக்கையாளர்களைக் கட்டிப் போட்டுள்ளது. அந்த வசதிகள் என்னவென்று இங்கு பார்க்கலாம்.
கீழே சுட்டிக் காட்டப்பட்டுள்ள வசதிகள் அனைத்து ஆண்ட்ராய்ட் போன்களிலும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், ஆப்பிள் இவற்றை வழங்கவில்லை என்பது உறுதி.
1. வாய்ஸ் ஓவர் எல்.டி.இ. (VoLTE): டி மொபைல் நிறுவனம் இந்த வாய்ஸ் ஓவர் எல்.டி.இ. வசதியைத் தருகிறது. இதே போன்ற எச்.டி. வாய்ஸ் வசதியை சாம்சங் காலக்ஸி எஸ்5 மற்றும் எச்.டி.சி. ஒன் போன்கள் கொண்டுள்ளன. இது ஒரு வயர்லெஸ் இணைப்பு தொழில் நுட்பம். ஆப்பிள் எப்போதும், இந்த வகை வயர்லெஸ் இணைப்பு தொழில் நுட்பத்தில் மிகவும் பின் தங்கியே உள்ளது. எனவே, இந்த வகையில், உங்களுக்கு மொபைல் இணைப்பு வழங்கும் நிறுவனங்கள், வசதிகளைத் தந்தால், அவற்றை அனுபவிக்க, உங்களுக்கு ஆண்ட்ராய்ட் போன்களே சரியாக இருக்கும்.
2. இன்ப்ரா ரெட் ரிமோட் கண்ட்ரோல் (Infrared for remote control): வெளியூர்களுக்குச் சென்று விடுதிகளில் தங்குவோருக்கு, அந்த விடுதிகளில் தரப்படும் ரிமோட் கண்ட்ரோல் கொண்டு டிவி மற்றும் பிற சாதனங்களை இயக்குவது பிரச்னையைத் தரும். இந்த வகையில், ஆண்ட்ராய்ட் போன்களில் தரப்படும் இன்ப்ரா ரெட் ரிமோட் வசதி பயன்படும். நம் வீடுகளிலும், இதனைப் பயன்படுத்தலாம். ஏனென்றால், டி.வி. ரிமோட் சாதனத்தை அதற்கு மட்டுமே பயன்படுத்துவதால், ஏதேனும் ஓர் இடத்தில் வைத்துவிட்டு, வைத்த இடம் நினைவில் வராமல் தவிப்போம். அதே நேரத்தில், அழைப்புகளை எதிர்பார்த்து நாம் போன்களை நம்மிடமே வைத்துக் கொள்வதால், அதனை டிவிக்கான ரிமோட் கண்ட்ரோல் ஆகப் பயன்படுத்தலாம்.
3. மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் (MicroSD expansion card slot): ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் போன் தயாரிப்பாளர்கள், ஸ்டோரேஜ் மெமரியை அதிகப்படுத்த, மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட்களைப் பயன்படுத்தும் வகையில் போர்ட்களுடன் வடிவமைத்து வருகின்றனர். ஸ்டோரேஜ் கார்டுகளும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஆனால், ஆப்பிள் இது குறித்து சிந்திப்பதே இல்லை. எனவே, குறைந்த பட்ச மெமரியாக 32 ஜி.பி. கொண்டு, தன் ஐ போன்களை ஆப்பிள் தயாரிக்குமா என்பதே இப்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இருப்பினும், மைக்ரோ எஸ்.டி. கார்ட் போல வசதி கிடைக்குமா என்பது அனைவரின் வாதமாகும்.
4. நீண்ட நாள் உழைக்கும் பேட்டரி: ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் தொடர்ந்து கூடுதல் வசதிகள் இணைக்கப்படுவதால், போன்கள் நாள் முழுவதும் பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளன. எனவே, அதற்கு ஈடு கொடுக்கும் வகையில், போன்களின் பேட்டரிகளின் திறனும், வாழ்நாள் உழைப்பும் அதிகமாக உள்ள பேட்டரிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், ஆப்பிள் இதுவரை இந்த வகையில், எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. ஆனால், வர இருக்கும் 5.5 அங்குல திரையுடன் கூடிய ஐபோன்களில் பேட்டரி கூடுதலான திறனுடன் தரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5. என்.எப்.சி. (NFC -: Near Field Communication): அண்மைக் கள தகவல் தொடர்பு தொழில் நுட்பம், விரைவில் பிரபலமாக உள்ளது. மொபைல் போன்களை, அசைத்து, வர்த்தக நிலையங்களில் வாங்கும் பொருட்களுக்கு பணம் செலுத்தும் வழியை இந்த தொழில் நுட்பம் தருகிறது. ஆனால், இதனை தன் புதிய ஐபோன் 6ல், ஆப்பிள் தருமா என்பது சந்தேகமே. அப்படிக் கொடுக்க முன்வந்தால், நிச்சயம் அது உயர்ந்த வகையிலேயே இருக்கும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கேள்வி: நான் விண்டோஸ் 7 மற்றும் ஆபீஸ் 2007 பயன்படுத்தி வருகிறேன். இதில் வேர்டில் தயாரிக்கப்படும் டாகுமெண்ட்டில், ஒரு பக்கத்திற்கு மட்டும், பக்கம் முழுமைக்குமாக, பார்டர் ஒன்று அமைக்க முடியுமா? வழிகளைக் கூறவும்.
செ. முத்தமிழன், மதுரை.
பதில்:
இதற்கான வசதியினை வேர்ட் தருகிறது. அனைத்து பக்கங்களுக்குமாக இல்லாமல், குறிப்பிட்ட பகுதி அல்லது பக்கத்திற்கு மட்டும் எனில், அந்த பகுதியில் கர்சரைக் கொண்டு வைக்கவும். அடுத்து, ரிப்பனில், Page Layout டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். Page Background என்னும் குரூப்பில் உள்ள Page Borders டூலினைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது வேர்ட், Borders and Shading என்னும் டயலாக் பாக்ஸில் உள்ள, Page Border என்னும் டேப்பினைக் காட்டும். இந்த டயலாக் பாக்ஸில், பார்டர் எவ்வாறு காட்டப்பட வேண்டும் என அமைப்பதற்கான டூல்கள் இருக்கும்.
இவற்றை, உங்கள் விருப்பப்படி பயன்படுத்தவும். Art என்னும் கீழ்விரி பட்டியலில் காட்டப்படும் டூல்களைக் கொண்டு பார்டர்களுக்குக் கலை அம்சம் நிறைந்த ஒரு அமைப்பினைத் தேர்ந்தெடுக்கலாம். அடுத்து பாராவின் எந்த பகுதியில் இந்த தேர்வு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதனை Apply To என்பதனைப் பயன்படுத்தி அமைக்கவும். இறுதியாக ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X