சாம்சங் தரும் இரண்டு சிம் மாடல்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 அக்
2010
00:00

3ஜி மற்றும் 2ஜி அலைவரிசைகளில் இயங்கும் இரண்டு சிம் டச் திரை கொண்ட மொபைலாக சாம்சங் தன் குரு டூயல் 25 (இ 1225)  மற்றும் குரு டூயல் இ1252 போன்களைக் கொண்டு வந்துள்ளது. மொபைல் சந்தையில் இந்த வகையில் இதுவே முதல் போனாகும். இத்துடன் சாம்சங் பி–7722 மொபைல் போன் ஒரு பிசினஸ் நோக்களுக்கான போனாக வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது.  சாம்சங் பி–7722 ஒரு மொபைல் ஆபீஸ் போனாக இரண்டு சிம் இயக்கத்தில் வடிவமைக்கப்பட்டு வெளிவந்துள்ளது. போன்கள்  இயங்கும் போதே, இரண்டு சிம்களுக் கிடையே மாறிக் கொள்ள முடிகிறது.   WAP/MMS/  மற்றும் இமெயில் சப்போர்ட் செய்திடும் சாப்ட்வேர், இதனைப் பயன்படுத்து பவரை எப்போதும் இணைப்பில் வைத்துள்ளது. தொடுதிரை இருப்ப தனால், மொபைல் அப்ளிகேஷன்ஸ், இன்ஸ்டண்ட் மெசேஜிங் மற்றும் வர்த்தகம் சார்ந்த வசதிகளை எளிதாக மேற்கொள்ள முடிகிறது. இதில் தரப்பட்டுள்ள டச்விஸ் 2.0 பயனுள்ள இன்டர்பேஸ் வசதியை அளிக்கிறது. போன் புக் 2000, இமெயில்களைக் கம்ப்யூட்டருடன் இணைக்கும் வசதி, எம்.எஸ். ஆபீஸ், பி.டி.எப். மற்றும் டெக்ஸ்ட் பைல்களைப் படிக்கும் வசதி, மல்ட்டி மீடியாவிற்காக சவுண்ட் அலைவ் தொகுப்பு, ஆட்டோ போகஸ் கொண்ட 5 எம்பி திறன் கேமரா, பவர் எல்.இ.டி., புதிய பாடல்களைக் கண்டறிந்து டவுண்லோட் செய்திட வழி தரும் பைண்ட் மியூசிக் வசதி, வயர்லெஸ் ஹெட்செட்டில் இசையை ரசிக்க A2DP  இணைந்த புளுடூத், 250 எம்.பி. நினைவகம், 16 ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய மெமரி கார்ட் ஸ்லாட், சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களுக்கான நேரடி இணைப்பு என அதிநவீன வசதிகள் அனைத்தையும் கொண்டுள்ள இந்த சாம்சங் ஜி.டி.  பி 7722 மொபைல் விலை ரூ.12,300 எனக் குறிக்கப் பட்டுள்ளது.  குரு டூயல் 25 மற்றும் டூயல் 26 ஆகிய போன்களில், இரண்டு சிம் ஸ்லாட்டுடன், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ,டார்ச், 9 மாநில மொழிகளை இயக்கும் திறன், 1000 முகவரிகள் கொள்ளும் அதிக கொள்திறன் கொண்ட அட்ரஸ் புக் ஆகியவை தரப்பட்டுள்ளன. டூயல் 25 போனில், இரண்டு சிம்களில் ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே இயக்க முடியும்.  இதன் திரை 1.8 அங்குல அகலம் கொண்டது. 9 மணி நேரம் தொடர்ந்து பேச திறன் தரும் 800 எம்.ஏ.எச். பேட்டரி இணைக்கப் பட்டுள்ளது. பயன்படுத்தாத நேரத்தில் மின்சக்தி 420 மணி நேரம் பாதுகாக்கப்படுகிறது.  குரு டூயல் 26 மொபைலில் 1000 எம்.ஏ.எச். பேட்டரி தரப்பட்டுள்ளது. இதன் திரை இரண்டு அங்குல அகலம் உடையது. தொடர்ந்து 11 மணிநேரம் பேசலாம். 620 மணி நேரம் பேட்டரி திறன் தாக்குப் பிடிக்கிறது. குரு டூயல் 25 ரூ. 2,020 மற்றும் குரு டூயல் 26 ரூ.2,240க்கும் கிடைக்கிறது. இந்த மூன்று இரண்டு சிம் போன்களுடன், சாம்சங் இரண்டு சிம் மொபைல் வகையில் பத்து மாடல்களைக் கொண்டுள்ளது. இவற்றின் விலை ரூ.2,020 முதல் ரூ. 12,300 வரை உள்ளன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X