பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 செப்
2014
00:00

சாம்சங் நிறுவனத்தின் கல்வி சார்ந்த முயற்சி நமக்குத் தேவையான ஒன்றாகும். சி.பி.எஸ்.சி. மட்டுமின்றி மற்ற மாநிலப் பாடத்திட்டங்களுக்கும் இதனை விரிவு படுத்த வேண்டும். அதே போல கட்டணத்தையும் குறைக்க வேண்டும். அல்லது நீக்க வேண்டும். சாம்சங் இந்தியாவில் பெரிய அளவில் தன் சாதனங்களைச் சந்தைப்படுத்தி லாபம் ஈட்டி வருகிறது. எனவே, இலவசமாகவே இதனை வழங்கலாம். அரசிடமிருந்து இந்த கோரிக்கை வைக்கப்பட்டால், ஒருவேளை சாம்சங் இதனை வழங்கலாம். அரசு முன்வருமா?
டாக்டர் எம். மரிய அற்புதம், நாகர்கோவில்.

பைல்களின் பார்மட்டுகள் எவை என்பதனைத் தெளிவாக விளக்கி எழுதப்பட்ட கட்டுரை, அனைத்து தகவல்களையும் தந்துள்ளது. விஷயங்களைப் புரியும் வகையில் விளக்கிய ஆசிரியருக்குப் பாராட்டுகள்.
டாக்டர் பெ. முருகேசன், சென்னை.

போட்டோ மிக்ஸ் புரோகிராம், போட்டோ சார்ந்த நம் கற்பனைகளுக்கு நல்ல உரு தருகிறது. மிக எளிதாகவும், விரைவாகவும் நாம் விரும்பும் வகையில் போட்டோக்களை அமைக்க முடிகிறது. தகவலுக்கு நன்றி.
என். கலையரசன், தஞ்சாவூர்.

ஒன்றுக்கு மேற்பட்ட, மாறுபட்ட கம்ப்யூட்டர் சிஸ்டங்களை ஒரே நேரத்தில் இயக்குபவர்களின், தலையாய பிரச்னை கீ போர்ட் தான். அதனை தீர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கீ போர்ட் பல சிக்கல்களுக்குத் தீர்வு தரும். இந்தியாவில் இந்த கீ போர்ட் பயன்பாட்டிற்கும், விற்பனைக்கும் வரும் நாளை எதிர்பார்க்கிறேன்.
எஸ். தியாகராஜன், திருப்பூர்.

தொடர்ந்து ஆண்ட்ராய்ட் போன் பயன்பாடு குறித்த தகவல்களைத் தந்து வழிகாட்டும் தங்கள் ஆசிரியர் குழுவிற்கு மனங்கனிந்த நன்றி. அப்டேட் குறித்து தெளிவான கருத்துரை தேவை. பொதுவாக எழுதுவதைக் காட்டிலும், எந்த புரோகிராம்களை அப்டேட் செய்திட வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொல்லவும்.
ஆ. செல்வராஜன், கனகசெட்டிகுளம், புதுச்சேரி.

கிறிப்டோவால் வைரஸ் கம்ப்யூட்டர்களையே பணயம் கொள்வது விசித்திரமானதாக உள்ளது. இருப்பினும், பணயத் தொகையைப் பெறும் வழிகள் அவ் வளவு எளிதானதாகவா இருக்கின்றன? இதைக் கொண்டு பயனாளர்களைப் பிடித்துத் தண்டிக்க முடியாதா?
என்.கலாராணி, திண்டுக்கல்.

கேள்வி பதில் பகுதியில் தந்துள்ள வைரஸ் டோட்டல் டாட் காம் குறித்த தகவல்கள் மிகவும் பயனுள்ள தகவல் ஆகும். இப்போதெல்லாம், அஞ்சல் உடன் வரும் பைல்களை இந்த தளத்திற்கு அனுப்பி, சந்தேகத்தை நிவர்த்தி செய்த பின்னரே, செயல்படுகிறேன். நம் பைலை பெரும்பாலான, புகழ் பெற்ற ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் கொண்டு சோதனை செய்து, முடிவுகளைத் தரும் முறை மிக நேர்த்தியாக உள்ளது. தகவலுக்கு மிக்க நன்றி.
கா. இளவழகன், சென்னை.

மைக்ரோசாப்ட் தன் ஒன் ட்ரைவிற்கு வரும் பைல்களின் உச்ச கட்ட அளவினைக் கை விட்டது உண்மையிலேயே நல்ல வசதி ஆகும். இப்போது எந்த தயக்கமும் இல்லாமல், பைல்களை ஒன் ட்ரைவிற்கு அனுப்பி சேவ் செய்திட முடிகிறது.
எஸ். உமா மஹேஸ்வரி, தாம்பரம்.

எக்ஸெல் தொகுப்பிலும் சொற்களைத் திருத்தலாம் என்ற தகவல், இத்தனை ஆண்டுகளாக தெரியாமல் இருந்துள்ளது எனக்கு. இது போன்ற சாதாரணமான, ஆனால், மிகவும் பயனுள்ளதகவல்களைத் தொடர்ந்து அதிகமாகத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
டே. சாமுவேல் மாணிக்கம், சோழவந்தான்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X