சீன அரசு ஐபோனுக்குத் தடை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 அக்
2014
00:00

சீன அரசு அலுவலர்கள் யாரும், ஐபோன் உட்பட, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தக் கூடாது என அரசு தடை விதித்துள்ளது. சென்ற வாரம், பெய்ஜிங் பல்கலையில் நடைபெற்ற பொருளாதாரவியல் கருத்தரங்கு ஒன்றில் இந்த தடை அறிவிக்கப்பட்டது. பாதுகாப்பு மற்றும் நெட்வொர்க் காரணங்களினால், சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்திடும் ஸ்மார்ட் போன்களை, அரசு அலுவலர்கள் யாரும் பயன்படுத்தக் கூடாது.
இவர்கள் Huawei நிறுவனம் தயாரித்து வழங்கும் ஸ்மார்ட் போன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக, உலகில் அதிக ஸ்மார்ட் போன்களைத் தயாரிக்கும் நிறுவனமாக ஹுவேய் நிறுவனம் விளங்குகிறது. cecb2b.com என்ற சீன இணைய தளத்திலும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அமெரிக்க நிறுவனங்கள் தயாரிக்கும் சாதனங்கள், குறிப்பாக ஆப்பிள் நிறுவன சாதனங்கள், சீன நாட்டின் பாதுகாப்பிற்கு பிரச்னை அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஜூலை மாதம், சீன அரசின் தொலைக்காட்சியில், ஐபோன் பயன்படுத்துபவர்கள் நடமாடும் இடங்கள், போனால் கண்காணிக்கப்பட முடியும் என்றும், இது நாட்டின் பாதுகாப்பிற்கு உகந்தது அல்ல என்றும் அறிவிக்கப்பட்டது.
சீனாவின் இந்த அறிவிப்பு, ஆப்பிள் நிறுவனத்திற்கு நிச்சயம் கவலையைத் தரும். ஏனென்றால், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, சீனாவில் தான் அதிக அளவில் ஆப்பிள் போன்கள் விற்பனையாகின்றன. சென்ற ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில், ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் 16%, சீனாவில் இருந்துதான் கிடைக்கப் பெற்றது. இது ஆண்டு தோறும் 28% உயர்ந்து வருகிறது.
தற்போது தடை விதிக்கப்பட்டிருப்பதால், இதனை ஆப்பிள் இழக்க வேண்டியதிருக்கும். ஆனால், அதே நேரத்தில் சீன மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களின் வருமானம் உயரும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X