வி.எல்.சி. பிளேயர் நூறு கோடிக்கு மேல் தரவிறக்கம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 அக்
2014
00:00

விண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டர்களில், ஆடியோ மற்றும் விடியோ பைல்களை இயக்க, பெரும்பாலானவர்களால், வி.எல்.சி. பிளேயர் பயன்படுத்தப்படுகிறது. இலவசமாக இதனைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த வகையில், இதுவரை நூற்றுப் பத்து கோடிக்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்டதாக, இதனைத் தயாரித்து வழங்கும் வீடியோலேன் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐ.ஓ.எஸ். சிஸ்டம் இயங்கும் சாதனங்களுக்காக, 13 கோடியே 40 லட்சம் முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அளவிற்கு இதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை வளர்வதற்கான காரணத்தை, வீடியோ லேன் நிறுவன அதிகாரிகளிடம் கேட்ட போது, வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் கூடுதல் வசதிகளுடன் கூடிய, எளிதில் இயக்கக் கூடிய மீடியா பிளேயராக வி.எல்.சி. இருப்பதே காரணம் என்று, இந்நிறுவனத் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். எளிமை மட்டுமின்றி, மிக அதிக எண்ணிக்கையில், (எ.கா. MPEG, DivX, MKV, WebM, WMV, and MP3) பலவகையான ஆடியோ மற்றும் விடியோ பார்மட் பைல்களை இந்த பிளேயர் கையாள்வதும் ஒரு காரணமாகும்.
வி.எல்.சி. மீடியா பிளேயர், திறவூற்று பயன்பாட்டுத் தொகுப்பு வகையைச் (free open source cross-platform) சேர்ந்தது. மல்ட்டி மீடியா பிரிவில், நாம் எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளையும் தரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் புகழுக்குக் காரணமாகும். பைல்கள் மட்டுமின்றி, டிஸ்க், வெப்கேம் மற்றும் பிற சாதனங்களில் உள்ள பைல்களையும் இது இயக்கும்.
ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் வி.எல்.சி. மீடியா பிளேயர் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. மிகச் சிறந்த முறையில் மீடியா பைல்களை இது கையாள்கிறது. மிகத் துல்லியமாக ஒலியைப் பிரித்துத் தருகிறது. பலவகையான பார்மட் பைல்களையும், ஸ்டோரேஜ் மீடியாவில் உள்ள பைல்களையும் இது கையாள்வதே இதன் பயன் தன்மைக்குக் காரணமாகும். அதனால் தான் கோடிக்கணக்கானவர்கள் இதனைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து இது மக்களின் மனங் கவர்ந்த மீடியா பிளேயராக இயங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X