ஐந்தில் ஒருவர் அதிக இணையப் பயன்பாடு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 அக்
2014
00:00

இணையத்தைப் பயன்படுத்துதல் குறித்த அறிக்கை ஒன்று அண்மையில், Internet and Mobile Association of India (IAMAI) என்னும் அமைப்பினால் வெளியிடப்பட்டது. நகரங்களில் வாழும் 15 வயதிற்கு மேற்பட்டவர்களில், இணையம் பயன்படுத்தும் 9 கோடியே 87 லட்சம் பேரிடம் தகவல் திரட்டி, இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இணையம் பயன்படுத்துவோரில், 20% பேர் மிக அதிகமாக இதனைப் பயன்படுத்தியுள்ளனர். ஒரு மாதத்தில் 25 நாட்கள் இணையத்தில் இவர்கள் தகவல்களைத் தேடிப் பெற்றுள்ளனர். 20 முதல் 24 நாட்கள் பயன்படுத்தியவர்கள் 18% பேர். 12% பேர் நடுநிலையாக, 16 முதல் 19 நாட்கள் பயன்படுத்தியுள்ளனர். 16% பேர் சற்று குறைவாக, 10 முதல் 15 நாட்கள் இணையத்தை நாடியுள்ளனர். எப்போதாவது 8 அல்லது 9 நாட்கள் இணையத்தைப் பயன்படுத்துவோர் 5% ஆக உள்ளனர்.
இவர்கள் அனைவரின் இணையத் தேடலைக் கவனிக்கையில், வார இறுதி நாட்களைக் காட்டிலும், வார நாட்களிலேயே அதிகமாக இணையத்தை நேசித்துள்ளனர் என்பது தெரிகிறது. இதிலிருந்து, இணையத்தை பொழுது போக்கிற்காக இல்லாமல், முக்கிய பணிகளுக்காகவே இணையத்தைத் தேடி உள்ளனர் என்பது தெளிவாகிறது.
இணையப் பயன்பாடு, பிற்பகலில் நடுவேயுள்ள காலத்தில் அதிகம் உள்ளது. இளம் வயதுக்காரர்களும், குறைந்த வருவாய் உடையவர்களும், தங்கள் மதிய உணவு வேளையின்போது இணையத்தை அதிகம் நாடியுள்ளனர்.
இணையத்தை தகவல் தேடல், மின் அஞ்சல், செய்தி அனுப்புதல், சமூக இணைய தளங்களைப் பயன்படுத்தல், இணைய வீடியோ காட்சிகளைக் கண்டு ரசித்தல் ஆகியவற்றிற்கே இணையம் அதிகம் பயன்பட்டுள்ளது. இவை அனைத்திலும், ஆண் / பெண் பயன்பாட்டில் மிகுந்த வேறுபாடு காணப்படுகிறது. இணையத்தை நாடியவர்களில் 60% பேர் ஆண்களாகவும், 34% பேர் பெண்களாகவும் இருந்துள்ளனர். மின் அஞ்சல் அனுப்பிப் பெறுவதிலும், ஏறத்தாழ இதே சதவீதம் இருந்து வருகிறது. மற்ற பிரிவுகளில், இரு பாலாருக்கான வேறுபாடு இப்படியே உள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X