நோக்கியா லூமியா 830 / 930 இந்தியாவில் அறிமுகம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 அக்
2014
00:00

கேமரா செயல்பாட்டினை மையச் சிறப்பு அம்சமாகக் கொண்ட இரண்டு லூமியா வரிசை ஸ்மார்ட் போன்களை, அண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இவற்றில் நோக்கியா லூமியா 830ல், 10 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட ஆட்டோ போகஸ் பியூர் வியூ (PureView) கேமரா தரப்பட்டுள்ளது. இந்த கேமரா, Optical Image Stabilization என்னும் சிறப்பு தொழில் நுட்பம் கொண்டது. இதனுடன் முன்புறமாக 1 மெகா பிக்ஸெல் திறனில் இயங்கும் இரண்டாவது கேமராவும் உள்ளது. அத்துடன் நவீனத் தொழில் நுட்பத்தில் இயங்கும் Nokia Rich Recording திறன் கொண்ட மூன்று மைக்குகள் இதில் உள்ளன. இதன் மூலம் 5.1 surround sound பதிவு கிடைக்கிறது.
இதன் திரை 5 அங்குல அளவில், 1280 x 720 பிக்ஸெல்களுடன், ஓரங்களில் வளைவாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 தரப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை 128 ஜி.பி. வரை, மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு அதிகப்படுத்தலாம். 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால்காம் ஸ்நாப்ட்ரேகன் 400 ப்ராசசர் இதில் இணைக்கப்பட்டுள்ளது. போனின் தடிமன் 8.5 மிமீ. எடை 150 கிராம். நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி எல்.டி.இ., 3ஜி, புளுடூத் 4.0., ஜி.பி.எஸ். மற்றும் என்.எப்.சி. ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதில் தரப்பட்டுள்ள பேட்டரி 2,200 mAh திறனுடன், வயர்லெஸ் சார்ஜிங் நுட்பமும் கொண்டது.
ஆரஞ்ச், பச்சை, வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் இது அக்டோபர் 8 முதல் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.28,799. இரண்டாவது ஸ்மார்ட் போனாகச், சற்று உயர் நிலையில், நோக்கியா லூமியா 930 வெளியிடப்பட்டுள்ளது. அதே அளவிலான திரை AMOLED டிஸ்பிளேயுடன், கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் தரப்பட்டுள்ளது. இதில் 2.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ஸ்நாப் ட்ரேகன் 800 ப்ராசசர் உள்ளது. கேமரா 20 எம்.பி. திறன் கொண்டு டூயல் எல்.இ.டி. ப்ளாஷ் மற்றும் ஆட்டோ போகஸ் வசதியுடன் இயங்குகிறது. முன்புறக் கேமரா 1.2 மெகா பிக்ஸெல் திறனுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வைட் ஆங்கிள் லென்ஸ் தரப்பட்டுள்ளது. முதல் மாடலில் தரப்பட்டுள்ள, அதே தன்மையுடன் கூடிய மைக்குகள் நான்கு இதில் தரப்பட்டுள்ளன.
இதன் கூடுதல் சிறப்பு, இதில் தரப்படும் ஒரு டெரா பைட் ஒன் ட்ரைவ் ஸ்டோரேஜ் வசதியாகும். முதல் ஆறு மாதங்களுக்கு இலவசமாகவும், பின்னர் மாதம் ஒன்றுக்கு ரூ.125 கட்டணமாகவும் செலுத்த வேண்டும். இதன் ராம் மெமரி 2 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 32 ஜி.பி. ஆப்பரேட்டிங் சிஸ்டமாக, விண்டோஸ் போன் 8.1 ஓ.எஸ். இயங்குகிறது. இதன் பரிமாணம் 137 x 71 x 9.8 மிமீ. எடை 167 கிராம்.
எப்.எம். ரேடியோ, கிராபிக் ஈக்குவலைசர், டோல்பி ஹெட்போன் ஆகியவை உள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 3.0., ஜி.பி.எஸ்., மற்றும் என்.எப்.சி. ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2420 mAh திறன் கொண்டது. இதனை வயர்லெஸ் முறையிலும் சார்ஜ் செய்து கொள்ளலாம். நோக்கியா லூமியா 930, ஆரஞ்ச், பச்சை, வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில், அக்டோபர் 15 முதல் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 38649.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X