நோக்கியா 130 டூயல் சிம் அறிமுகம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 அக்
2014
00:00

வீடியோ மற்றும் மியூசிக் பிளேயர் இணைந்த, இரண்டு சிம் இயக்கம் கொண்ட, நோக்கியா 130 டூயல் சிம் மொபைல் போனை, சென்ற வாரம் மைக்ரோசாப்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 1,750. ஸ்நாப்டீல் இணைய தளத்தில் இதனை வாங்கலாம். இதன் திரை 1.8 அங்குல அளவில் உள்ளது. சிரீஸ் 30+ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. எப்.எம். ரேடியோ மற்றும் புளுடூத் வசதி தரப்பட்டுள்ளது. புளுடூத் உள்ளதால், மொபைல் போன்களுக்கிடையே பைல்களைப் பரிமாறிக் கொள்ள இயலும். இதில் 2ஜி இணைப்பு இயங்குகிறது. ஆனால், பிரவுசர் இல்லை. மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் உள்ளது. 32 ஜி.பி. வரையிலான கார்ட்களைப் பயன்படுத்தலாம். எல்.இ.டி.ப்ளாஷ் லைட் பின்புறமாகத் தரப்பட்டுள்ளது. இதன் 1020 mAh பேட்டரி, 13 மணி நேரம் தொடர்ந்து பேசிக் கொள்ளும் திறனை அளிக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 26 நாட்களுக்கு மின் சக்தி தங்குகிறது. 46 மணி நேரம் தொடர்ந்து மியூசிக் பைல்களை இயக்கலாம். விடியோ பைல்களைத் தொடர்ந்து 16 மணி நேரம் இயக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிகப்பு, வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் இது வெளிவந்துள்ளது. நோக்கியாவின் விற்பனை மையங்களில், இதன் விலை ரூ.1,848 எனச் சற்றுக் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X