விண்டோஸ் 8 மறக்கப்படும்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 அக்
2014
00:00

விண்டோஸ் 8 அறிமுகமாகிய பின்னர், கடந்த இரண்டு ஆண்டுகளில், மைக்ரோசாப்ட், விண் 8 சிஸ்டத்தால் தனக்கு ஏற்பட்ட அவப்பெயரைத் தவிர்க்கும் பல முயற்சிகளில் இயங்கி வந்தது. இப்போது சென்ற வாரம் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 10 சிஸ்டத்தினை அறிமுகப்படுத்தி, முற்றிலும் புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளது. இதன் மூலம், விண்டோஸ் 8 அப்படியே மறக்கப்பட்டு, மறைக்கப்படும் நிலைக்குத் தள்ளப்படும் எனத் தெரிகிறது.
விண்டோஸ் 7 சிஸ்டம் தந்த இமாலய வெற்றிக்குப் பின்னர், பயனாளர்கள் தன்னுடைய புதிய இடைமுகத்துடன் கூடிய விண்டோஸ் 8 சிஸ்டத்தை நிச்சயம் விரும்பி ஏற்பார்கள் என்று தப்புக் கணக்கினை மைக்ரோசாப்ட் மேற்கொண்டது. ஆனால், விண்டோஸ் வாடிக்கையாளர்கள், குறிப்பாக தனி நபர் நுகர்வோர்கள், சற்று தள்ளி நின்று வேடிக்கை பார்த்தனர். விண்டோஸ் 7 சிஸ்டத்திலிருந்து வெளி வர மறுத்தனர். நிறுவன நிர்வாகிகள், விண்டோஸ் 8க்கு மாறினால், தங்கள் வாடிக்கையாளர்களிடம் அது குழப்பத்தினை ஏற்படுத்தும் என்றும், அதனால், தங்களின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படும் என கணக்கிட்டு, தொடர்ந்து விண்டோஸ் 7 சிஸ்டத்திலேயே இயங்கி வந்தனர்.
2013 ஆம் ஆண்டின் முடிவில், உலகெங்கும் வர்த்தக நிறுவனங்களில், 71.5 கோடி கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கி வந்தது. இதில் 36.1 கோடிக்கும் மேலான கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 7 இயங்கியது. 22.4 கோடி விண்டோஸ் எக்ஸ்பியைக் கொண்டிருந்தன. 4 கோடி கம்ப்யூட்டர்கள் விஸ்டாவினை இயக்கின. விண்டோஸ் 8, வெறும் 1.6 கோடி கம்ப்யூட்டர்களில் மட்டுமே இருந்தது. இந்த தகவலை, ஐ.டி.சி. அமைப்பு தெரிவித்தது.
மக்களிடம், விண்டோஸ் 8, நிறுவனங்களுக்கானது அல்ல என்ற எண்ணம் மேலோங்கி வளர்ந்தது. இதற்கு முதன்மைக் காரணம், விண் 8 கொண்டிருக்கும் புதிய இடைமுகம், எங்கு தொட்டால் என்ன கிடைக்கும் என்று அறியாத தொடு உணர் திரை, ஸ்டார்ட் மெனு இல்லாமை எனப் பல அறியப்பட்டன.
எனவே, விண்டோஸ் 10 சிஸ்டத்தில், இவை அனைத்தும் சரி செய்யப்பட்டு கிடைப்பதுடன், விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 7 இயக்குபவர்களுக்கு, விண் 10க்கான மாற்றம், எளிமையானதாக, எந்த இடர்ப்பாடும், தயக்கமும் இல்லாததாக இருக்க வேண்டும் என மைக்ரோசாப்ட் முனைந்துள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X