ஸ்வீட் சிக்ஸ்டீன் கூகுள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 அக்
2014
00:00

கூகுள், தான் 16 வயதை எட்டியதனை, சென்ற செப்டம்பர் மாதம் 27 அன்று கொண்டாடியது. பிறந்த நாளுக்கென வெட்டிய கேக்கில், மெழுகுவத்திகளுக்குப் பதிலாக, லாலிபாப்களை வைத்திருந்தது. இதனால், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் அடுத்த பதிப்பின் பெயர், ”ஆண்ட்ராய்ட் லாலிபாப்” ஆக இருக்கலாம். ஏனென்றால், தன் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் பெயர்களை, பல்வேறு ஸ்வீட்கள் கொண்டு கூகுள் பெயரிட்டு வருவதனை வழக்கமாகக் கொண்டுள்ளது. ஏற்கனவே, கப்கேக், டோநட், எக்ளேர், ப்ரையோ, ஜிஞ்சர் ப்ரெட், ஹனிகோம்ப், ஐஸ்கிரீம் சாண்ட்விச், ஜெல்லி பீன் மற்றும் தற்போதைய கிட்கேட் (cupcake, donut, éclair, froyo, gingerbread, honeycomb, ice cream sandwich, jelly bean and KitKat) எனப் பெயர்களைப் பயன்படுத்தியது.
ஜூன் மாதம் நடத்திய, கூகுள் டெவலப்பர் கருத்தரங்கில், ஆண்ட்ராய்ட் எல் என்ற சிஸ்டத்தினைத் தன் டெவலப்பர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்த எல், லாலி பாப்பினைக் குறிப்பதாக அனைவரும் கருத்து தெரிவித்தனர். ஆனால், கூகுள் இதனைக் கடைசி நேரத்தில் மாற்றினாலும் வியப்பில்லை.
அடுத்த மாதத்தில், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, கூகுள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பாதுகாப்பு குறித்த புதிய வசதிகள் தரப்படலாம். மேலும், குரல் உணர்ந்து செயல்பாடுகளை மேற்கொள்ளும் பிரிவிலும், புதிய முயற்சிகள் இருக்கும். இந்த புதிய சிஸ்டத்துடன் கூகுள் தன் புதிய நெக்சஸ் 9 டேப்ளட் மற்றும் நெக்சஸ் 6 ஸ்மார்ட் போனையும் வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X