ஐந்து மணி நேரம் இல்லை என்றால் நான் அவுட்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 அக்
2014
00:00

இணையத்தைத் தொடர்ந்து ஐந்து மணி நேரம் தொடர்பு கொள்ளாமல் என்னால் இருக்க முடியாது” என 56% இந்திய இணையப் பயனாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துவோரில் 46% பேர், நாள் ஒன்றுக்குக் குறைந்தது 6 மணி நேரம் இணையத்துடன் தொடர்பு கொண்டுள்ளனர். இவர்களில், 82% பேர் இணைய இணைப்பு கிடைக்கவில்லை என்றால், தாங்கள் எங்கோ தொலைந்துவிட்ட உணர்வினைக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.
மேற்படி தகவல்களை, டாட்டா கம்யூனிகேஷன் நிறுவனம் 'Connected World II' என்னும் சமீபத்திய அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா (2117 பேர்), சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளில் 9,417 பேரைத் தொடர்பு கொண்டு தகவல் திரட்டி தயாரிக்கப்பட்டது.
சந்தித்த இந்தியர்களில் 56% பேர், தங்களால், ஐந்து மணி நேரத்திற்கு மேல், இணைய இணைப்பு இல்லாமல் இருக்க இயலாது என்ற கருத்தைத் தெரிவித்தனர்.
இந்தியாவில், இணையத்தை, ஆண்களைக் காட்டிலும் குறைவாகவே, பெண்கள் பயன்படுத்தி வந்தாலும், இணைய இணைப்பு இல்லாத போது, அதிகம் பரிதவிப்பவர்கள் பெண்களே (21%) என்று தெரிய வந்துள்ளது. பாதிக்கப்படும் ஆண்கள் 16% தான்.
இவர்களில் 43% இந்தியர்கள், தொலைக் காட்சிப் பெட்டிக்குப் பதிலாக, டேப்ளட் பி.சி.க்களையும், ஸ்மார்ட் போன்களையும் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தொலைக் காட்சி நிகழ்ச்சிக்குப் பதிலாக, இணையத்தை விரும்புபவர்களாக இவர்கள் உள்ளனர்.
இதே கருத்தினை அமெரிக்காவில் 17% பேர் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 22% தெரிவித்துள்ளனர்.
“இணையமானது நம் வாழ்க்கைச் செயல்பாட்டினை முற்றிலும் மாற்றிவிட்டது. தொழில் நுட்பங்கள் தொடர்ந்து உருவாகி, நம் பயன்பாட்டிற்கு வருவதால், இணையத்தால் நம் வாழ்க்கை, பொருளாதார நிலை மற்றும் நம் சமூகத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன” என்று டாட்டா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத் தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
சந்தித்த இந்தியர்களில் 61% பேர், நம் ஒவ்வொருவருக்கும் இணையம் சொந்தம் என்ற உணர்வினை வெளிப்படுத்தியுள்ளனர். இது உலக அளவில் 70% ஆகும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X