பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 அக்
2014
00:00

மொபைல் சாதனங்களிலும், இணையத் தேடல் குறித்த நம் தடங்களை அதில் பதியாமல் மேற்கொள்ளலாம் என்ற தகவலைத் தந்தது, ஒரு புதிய செய்தியாகவே இருந்தது. இத்தனை நாள் இது போல ஒன்று உள்ளது என அறியாமல் இருந்தேன். மிக விரிவாக, அனைத்து பிரவுசர்கள் குறித்தும் தகவல்களைத் தந்துள்ள இந்தக் கட்டுரை மிகப் பயனுள்ளதாகவும் உள்ளது. எழுதிய ஆசிரியருக்கு நன்றி.
சே. சுப்ரமணிய சிவா, கரந்தை.

டால்பின் மற்றும் டால்பின் ஸீரோ பிரவுசர்களை என் மொபைல் ஸ்மார்ட் போனில் இன்ஸ்டால் செய்து பார்த்தேன். மிக எளிமையாகவும் விரைவாகவும் நடந்தேறியது. நாம் பார்க்கும் இணைய தளங்கள் சார்ந்த தகவல்களை மறைக்கலாம் என்பதுவும், மொபைல் போனில் புதுமையாக இருந்தது. பயன்படுத்திப் பார்த்தேன். ஆனால், இணைய தளங்களின் பெயர்கள் இருப்பது நமக்கு அதனை டைப் செய்திடும் நேரத்தைக் குறைத்திடுமே. இது மொபைல் போனில் மிக முக்கியமான ஒன்றாகும். எனவே, தடங்களைப் பதியவிட்டே, நாம் மொபைல் போனில் இணையத்தைப் பார்க்கலாம் என்பது என் கருத்து.
எஸ். பிரகாஷ் குமார், சென்னை.

வி.எல்.சி. பிளேயர் தொடர்ந்து தான் இயக்கும் ஆடியோ மற்றும் வீடியோ பைல்களின் பார்மட்டினை அதிகப்படுத்திக் கொண்டே செல்வது இதன் சிறப்பாகும். அதனால் தான், உலகின் பல நாடுகளில், வி.எல்.சி. பிளேயர் நூறு கோடி முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து புதுப்பித்து வருவதும் இதன் சிறப்பாகும்.
எஸ். உமா ராணி, கோவை.

பேஸ்புக் அக்கவுண்ட் குறித்த நம் தனிப்பட்ட தகவல்களை அறியும் நபர்கள் குறித்த தணிக்கைக்கான வழியைக் காட்டியதற்கு நன்றி. பேஸ்புக் தகவல்களைத் திருடுவதாகக் குற்றம் சாட்டப்படும் இந்த நேரத்தில் இந்த தகவல் அவசியமான ஒன்றாகும்.
கா. பிரேம்குமார், திருப்பூர்.

ஜிமெயில் போல, பேஸ்புக் ரசிகர்கள் தொடர்ந்து பெருகி வருகின்றனர். இவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில், நம் ரகசியம் அறிந்து கொள்ளும் டூல்களைக் காட்டியது காலத்தே செய்த உதவியாகும். நன்றி.
என்.கே. பசுங்கிள்ளி, தேனி.

ஐபோன் வளையும் தன்மை கொண்டதா? கேட்கவே ஆச்சரியமாக உள்ளது. அநேகமாக இந்த சிக்கலை ஆப்பிள் எதிர்பார்த்திருக்காது. தற்போது தரப்படும் விளக்கங்கள், இந்த இக்கட்டான நிலையைப் பூசி மெழுகத்தான் என்பது கண்கூடாகத் தெரிகிறது. மிக மிக உயர்ந்த விலையில் இதனை விற்பனை செய்திடும் ஆப்பிள் நிறுவனம், நிச்சயம் இதற்குச் சரியான பதில் சொல்லியாக வேண்டும்.
என். காசிநாதன், தாம்பரம்.

சீனாவிற்கு அடுத்தபடியாக இணையப் பயன்பாடு, கம்ப்யூட்டர் பயன்பாடு, மொபைல் பயன்பாட்டில் நாம் தான் முன்னணியில் இருக்கிறோம் என்ற தவறான எண்ணத்தினை, உங்கள் இந்திய இணையம் குறித்த கட்டுரை தெளிவாக்கியது. பரந்து விரிந்த நம் நாட்டில், இணையத் தொடர்பு மிக முக்கியமானதும், பயன் தருவதுமான ஒன்று என அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, இணைய சேவையில் ஈடுபடும் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப, வாடிக்கையாளர்களுக்கு இணைப்பிற்குப் பின் சேவையினை வழங்க வேண்டும்.
செ.கரிகாலன், காரைக்கால்.

வேர்ட் தொகுப்பில், நமக்கென ஒரு அகராதியை உருவாக்கிப் பயன்படுத்தலாம் என்ற குறிப்பு, மிகவும் உதவியானதாக உள்ளது. ஆய்வுக் கட்டுரைகள் டைப் அடித்து தரும் என் போன்றவருக்கு இந்த கஸ்டமைஸ்டு டிக் ஷனரி அமைப்பது மிகவும் தேவையான ஒன்றும் கூட. தகவலுக்கு நன்றி.
எஸ். ராஜலஷ்மி, சிதம்பரம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X