கம்ப்யூட்டருக்குப் புதியவரா ! - ஐபேட், லேப்டாப், டேப்ளட், ஐபேட் ஏர்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 அக்
2014
00:00

பல வாசகர்களிடமிருந்து லேப்டாப் மற்றும் ஐபேட், அல்லது ஐபேட் ஏர் மற்றும் டேப்ளட் ஆகியவற்றிற்கிடையே உள்ள வித்தியாசங்கள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் கேள்விகள் கொண்ட கடிதங்கள் கம்ப்யூட்டர் மலர் பிரிவிற்கு வருகின்றன. இங்கு சுருக்கமாக இவற்றின் தன்மை குறித்தும், செயல்பாட்டில் உள்ள வேறுபாடுகள் குறித்தும் காணலாம்.
1. முதலில் லேப்டாப் மற்றும் டேப்ளட் பி.சிக்கும் இடையே உள்ள வேறுபாட்டினைக் காணலாம். லேப்டாப் பி.சி. அல்லது நோட்புக் கம்ப்யூட்டர் என்பது, கையில் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடிய முழுமையான பெர்சனல் கம்ப்யூட்டரின் செயல்பாடுகளைத் தரக்கூடிய சாதனமாகும். இதில் பெர்சனல் கம்ப்யூட்டர் மட்டுமின்றி, மேக் கம்ப்யூட்டர் வகையும் உண்டு. விண்டோஸ் மற்றும் ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை, இவை முழுமையாக இயக்கும். இவற்றை இணையத்துடன் இணைத்தோ, இணைக்காமலோ இயக்கலாம். இவற்றில் டச் ஸ்கிரீன் இயக்கம் இருக்கலாம். இல்லாமலும் இவை செயல்படும்.
நெட்புக் என்பது விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் ஒரு சிறிய சாதனம். இதில் இணைய இணைப்பு பெற்று இயக்க ஒரு கீபோர்ட் இணைந்தே கிடைக்கும். குரோம்புக் (Chromebook) என்பது கூகுள் குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்தி, இணைய இணைப்பினைப் பெற்று செயல்படுத்தும் சிஸ்டம் ஆகும். இது கூகுள் தளத்திலிருந்து கிடைக்கும் அப்ளிகேஷன்களைக் கொண்டே பெரும்பாலும் செயல்படுவதால், இணைய இணைப்பில் இருந்தால் தான், முழுமையான இயக்கமும் பயனும் கிடைக்கும். குரோம் புக்கிலும் கீ போர்ட் ஒன்று இணைக்கப்பட்டே கிடைக்கும்.
டேப்ளட் பி.சி. என்பது டச் ஸ்கிரீன் கொண்ட ஒரு சாதனமாகும். இதில் கீ போர்டை இணைத்துச் செயல்படுத்த வசதி தரப்பட்டுள்ளது. டேப்ளட் பி.சி.க்கான பிரபலமான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களாக ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். சிஸ்டங்களைக் கூறலாம். நெக்சஸ், கிண்டில் பயர் மற்றும் நூக் கலர் (Nexus, Kindle Fire and Nook Color) ஆகியவற்றை, பலவகையான ஆண்ட்ராய்ட் டேப்ளட்களாகக் காணலாம்.
நீங்கள் ஓர் ஆண்ட்ராய்ட் டேப்ளட்டினைப் பயன்படுத்துகையில், இதற்கான அப்ளிகேஷன்கள் அல்லது புரோகிராம்களை கூகுள் ப்ளே ஸ்டோரில் காணலாம். கிண்டில் மற்றும் நூக் ஆகியவை, இவற்றிற்கென வடிவமைக்கப்பட்ட ஆண்ட்ராய்ட் சிஸ்டங்களில் இயங்குகின்றன. இவற்றில் இயங்கும் வகையில், அப்ளிகேஷன்கள், நூல்கள், இசை மற்றும் வீடியோ கோப்புகள் முறையே அமேஸான் மற்றும் பார்னஸ் அண்ட் நோபிள் ஸ்டோர் தளங்களில் கிடைக்கின்றன. டேப்ளட் இணைய இணைப்பில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல வகைகளில் பார்த்தால், இது ஒரு வை-பி இயக்க சாதனமாகும். உங்களால், ஒரு வை-பி இணைப்பு, அல்லது 3ஜி அல்லது 4ஜி இணைப்பினைப் பெற முடியாது என்றால், டேப்ளட் பயன்படுத்தும் எண்ணத்தினை விட்டுவிடலாம்.
ஐபேட் சாதனம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. இதற்கான ஆடியோ, விடியோ மற்றும் புத்தகங்களுக்கான பைல்களை, ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-ட்யூன் ஸ்டோரில் பெறலாம்.
ஐபேட் ஏர் என்பது, அண்மைக் காலத்தில் வெளிவந்த சாதனமாகும். இது எடை குறைவாகவும், இயக்க வேகம் விரைவாகவும் கொண்டது. ஆண்ட்ராய்ட் டேப்ளட் போல, இதனுடனும் கீ போர்ட் ஒன்றை இணைத்துப் பயன்படுத்தலாம். டேப்ளட் பி.சி.க்களின் வரிசையில், அதிக விலையுள்ளவை ஐபேட் சாதனங்களாகும்.மைக்ரோசாப்ட் நிறுவனமும் விண்டோஸ்
ஆர்.டி. என்ற பெயரில் டேப்ளட் பி.சி.க்களை வழங்குகின்றன. இவை விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகின்றன. விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் புரோகிராம்களை ஆண்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ் மற்றும் குரோம்புக்களில் இயக்க முடியாது. ஆனால், விண்டோஸ் ஆர்.டி.யில் இயக்கலாம்.
டேப்ளட் மற்றும் லேப்டாப்களுக்கு இடையேயான சாதனமாக இது கருதப்படுகிறது. விண்டோஸ் ஆர்.டி. மற்றும் விண்டோஸ் டேப்ளட்கள் வித்தியாசங்கள் அதிகம் கொண்டவை. ஆர்.டி., விண்டோஸ் அப்ளிகேஷன் ஸ்டோரில் கிடைக்கும் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துகிறது. ஆனால், விண்டோஸ் புரோகிராம்களை முழுமையாகப் பயன்படுத்த முடியாது. ஆபீஸ், போட்டோ ஷாப் அல்லது இது போன்ற விண்டோஸ் புரோகிராமின் முழு பதிப்பும் பயன்படுத்த வேண்டும் என்றால் உங்களிடம் விண்டோஸ் 8.1ல் இயங்கும் டேப்ளட் தேவை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X