பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 அக்
2014
00:00

கம்ப்யூட்டர் இயக்கம் கற்றுக் கொள்ளத் தொடங்கிய போது, லோட்டஸ் 1-2-3 தான் ஸ்ப்ரெட் ஷீட் பணிகளுக்கான ஒரே புரோகிராமாக இருந்தது. அனைத்து டேட்டா பேஸ் பணிகளையும் அதில் தான் மேற்கொண்டோம். அதன் பயன்பாடு முடித்து வைக்கப்படுகிறது என்ற தகவல் கட்டுரையைப் படிக்கையில் மிகவும் வருத்தமாக இருந்தது.
-கா. சீனிவாசன், விழுப்புரம்.

ஐந்து மணி நேரம் என்ன, இணைய இணைப்பு இல்லை என்றாலே, உடனே உடலில் ஒரு பதற்றம் தொற்றிக் கொள்கிறது. இப்போதெல்லாம், அனைத்து பணிகளும், இணைய இணைப்பிலேயே மேற்கொள்ள கற்றுக் கொண்டோம். சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம், சரியான தகவல் பெற்று, உறுதி செய்திட இணையத்தினையே நாடுகிறோம். எனவே, ஐந்து மணி நேரம் இல்லை என்றால், நான் அவுட் என்ற உங்கள் கட்டுரை சரியான கோணத்தில் நாம் இணையத்தினைச் சார்ந்து இருப்பதனையே காட்டுகிறது.
ஆர். தயா லிவிங்ஸ்டன், காரக்கால்.

விண்டோஸ் 10 குறித்த தகவல்களைப் படிக்கையில், மைக்ரோசாப்ட் தன் தவற்றினை உணர்ந்ததோடு, அதனை ஒத்துக் கொண்டு, வாடிக்கையாளர்களை முதன்மைப் படுத்தி, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வடிவமைத்துள்ளது என்று அறிய முடிகிறது. வர்த்தகம் சரியாகி, லாபம் பார்க்க வேண்டும் என்றால், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளே முக்கியம் என்பது, இந்த விஷயத்தில், உலகளாவிய அளவில், விண்டோஸ் 10 வடிவமைப்பில் உறுதியாகிறது.
ஆர். செயபால், கோவை.

ஆப்பிள் மட்டுமல்ல, சாப்ட்வேர் துறையில் இயங்கும் எந்த ஒரு நிறுவனமும், தன் புதிய சாதனம், மற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளைத் தவறுதல்களுடனேயே வெளியிடுகின்றன. ஆனால், வெளியாகி ஒரு வாரத்தில் பிரச்னைகளைச் சந்தித்தது ஆப்பிள் என்று தெரிகையில், ஏன் இந்த அவசரம்? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. இதில் ஐ.ஓ.எஸ். 8.2 மீண்டும் சிஸ்டத்தைப் பின் நோக்கி செட் செய்திட தரப்பட்டது என்ற செய்தி கேலிக்குரியதாகவும் உள்ளது. ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் இது போன்ற தவறுகளைச் சந்திக்கையில், மக்களுக்கு அவற்றின் மீதுள்ள நம்பிக்கை போய்விடும்.
பேரா. டாக்டர் என். முத்துசாமி, மதுரை.

டெரா காப்பி குறித்த தகவல், கேள்வி பதில் பகுதியில் அதன் இணைய தளம் முதல் கொண்டு தந்தமைக்கு மிக்க நன்றி. உடன் அந்த தளம் சென்று, கம்ப்யூட்டரில் எளிதாகப் பதிவு செய்து பயன்படுத்தி வருகிறேன். இப்போது எதனையும் காப்பி செய்வது எளிதாக உள்ளது. குறிப்பாக, இடையே நின்று போனால், விட்ட இடத்தில் இருந்து தொடர்வது பெரிய உதவியாக உள்ளது.
எஸ். பிரியம்வதா, சென்னை.

மொபைல் சாதனங்களிலும், நாம் மேற்கொள்ளும் இணையத் தேடல்கள் குறித்த தகவல்களை அழித்துவிடலாம் என்பது புதிய செய்தியே. பலரும், இப்போது தங்கள் இணைய உலாவினை மொபைல் போன்களிலேயே மேற்கொள்வதால், இந்த தகவல்கள் அனைத்தும் நல்லதொரு தருணத்தில் தரப்பட்டுள்ளன. எழுதிய ஆசிரியருக்கு நன்றி.
என். காஞ்சனா, சென்னை.

சில சிறிய குறைகள் எப்போதாவது சொல்லப்பட்டாலும், மிக எளிய வகையில் யூசர் இண்டர்பேஸ் கொண்டு இயங்கும் வி.எல்.சி. பிளேயர், அடிக்கடி தான் இயக்கக் கூடிய ஆடியோ மற்றும் விடியோ பைல்களின் பார்மட் எண்ணிக்கையையும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. எனவே, நூறு கோடிக்கும் மேலான எண்ணிக்கையில் இது தரவிறக்கம் மேற்கொள்ளப்பட்டது என்பது வியப்பிற்குரிய செய்தியே அல்ல.
-என். காமாட்சிநாதன், திண்டுக்கல்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X