நோக்கியா லூமியா 730 டூயல் சிம் ஸ்மார்ட் போன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 அக்
2014
00:00

மைக்ரோசாப்ட், அக்டோபர் முதல் வாரத்தில், முன்பு அறிவித்தபடி, தன் நோக்கியா லூமியா 730 டூயல் சிம் ஸ்மார்ட் போனை, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது செல்பி வசதியை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. இதன் திரை 4.7 அங்குலத்தில் OLED டிஸ்பிளேயுடன் அமைந்துள்ளது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப் ட்ரேகன் 400 ப்ராசசர் தரப்பட்டுள்ளது. லூமியா டெனிம் அப்டேட் கொண்ட விண்டோஸ் போன் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. இதன் முன்புறக் கேமரா 5 மெகா பிக்ஸெல் திறனுடன், வைட் ஆங்கிள் லென்ஸ் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் focal length 24 மிமீ. இதனால், தானாகவே போட்டோ எடுக்கும் செல்பி வசதி, கூடுதல் திறனுடன் இயங்குகிறது. பின்புறக் கேமரா எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்து 6.7 மெகா பிக்ஸெல் திறனுடன் இயங்குகிறது.
இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். இதன் ராம் நினைவகத் திறன் 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை 128 ஜி.பி. வரை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு அதிகப்படுத்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, புளுடூத் 4.0., ஜி.பி.எஸ்., மற்றும் என்.எப்.சி. தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2,200 mAh திறன் கொண்டது.
நல்ல பச்சை, ஆரஞ்ச், கருப்பு கிரே மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கும் நோக்கியா லூமியா 730 டூயல் சிம் ஸ்மார்ட் போன், இந்தியாவில் ரூ.15,299 என விலையிடப்பட்டு அறிமுகமாகியுள்ளது. இதனை வாங்குவோருக்கு, முதல் ஆறு மாதங்களுக்கு மைக்ரோசாப்ட் ஒன் ட்ரைவில் ஒரு டெரா பைட் இடம் இலவசமாகக் கிடைக்கிறது. அதன் பின் தொடர்ந்து பயன்படுத்த மாதந்தோறும் ரூ.125 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X