இரண்டு திரை மொபைல் போன் அறிமுகம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 அக்
2014
00:00

உலகின் முதல் இரண்டு ஸ்கிரீன் கொண்ட மொபைல் போன் , யோட்டா போன், இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இதனை, ஐக்கிய அரபு நாடுகளில், தொலை தொடர்பு, தகவல் தொழில் நுட்பம் மற்றும் நுகர்வோர் மின்னணு சாதனங்கள் விற்பனைப் பிரிவில் இயங்கி வரும், ஜம்போ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், இந்தியாவில் இயங்கும் ப்ளிப்கார்ட் இணைய வர்த்தக தளத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு விற்பனை செய்கிறது. எப்போதும் இயக்கத்திலேயே இருக்கும் இந்த ஆண்ட்ராய்ட் இயக்க இரு திரை மொபைல் போனின் ஒரு பக்கத்தில், எல்.சி.டி.திரையும், இன்னொரு பக்கத்தில் எலக்ட்ரானிக் பேப்பர் டிஸ்பிளே திரையும் இயங்கும். சென்ற வாரம் முதல் ப்ளிப்கார்ட் வர்த்தக இணைய தளத்தில் இது விலையிடப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 23,499.
யோட்டா மொபைல் போன், யோட்டா டிவைசஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் அண்மையில் மிகப் பெரிய அளவில் பேசப்படும் எல்.டி.இ. சாதனங்களை (ஸ்மார்ட் போன், மோடம், ரெளட்டர் போன்றவை) தயாரித்து வருகிறது.
இருதிரை இருப்பதால், இதனைப் பயன்படுத்துவோர், தாங்கள் விரும்பும் தகவல்களுக்காக, போன் பயன்பாட்டினை நிறுத்த வேண்டுவதில்லை. அதே போல, போனை தகவல் பெறுவதற்காக இயக்கவும் தேவை இல்லை. இந்த தொழில்நுட்பம், மொபைல் போனின் பேட்டரி திறனையும் மிச்சப்படுத்துகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X