வேர்ட் டிப்ஸ்...
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 அக்
2014
00:00

டேபிளை நகர்த்தும் வழி: வேர்ட் டாகுமெண்ட்டில் அமைக்கப்படும் டேபிள்களை எளிதாக, மொத்தமாக இன்னொரு இடத்திற்கு நகர்த்தி அமைக்கும் வழி தரப்பட்டுள்ளது. எப்படி டாகுமெண்ட்டில் உள்ள கிராபிக்ஸ் படங்களை நகர்த்துகிறோமோ, அதே போல, டேபிளையும் நகர்த்தலாம்.
இதற்கு, டேபிள் உள்ளாக, கர்சரை நிலை நிறுத்தவும். கிளிக் செய்திட வேண்டாம். அங்கு கர்சரை நிறுத்தினால் போதும். இப்போது, டேபிளின் இடது மேல் மூலையில், ஒரு சிறிய ஐகான் தோன்றும். இது சிறிய சதுரம் ஒன்றில், நான்கு திசையிலும் அமைக்கப்பட்டிருக்கும் அம்புக் குறிகளைக் கொண்டிருக்கும். இந்த ஐகான் மீது கிளிக் செய்து, அப்படியே இழுத்தால், டேபிளை முழுமையாக இழுத்துச் செல்லலாம். நீங்கள் விருப்பப்படும் இடத்தில் கொண்டு போய், டேபிளை அமைக்கலாம்.

டாகுமெண்ட்டில் பயணம்: டாகுமெண்ட் ஒன்றைத் திறந்து பல இடங்களில் எடிட் செய்து கொண்டிருக்கிறீர்களா? இடையே ஓய்வு எடுத்து மீண்டும் வருகையில், இறுதியாக எங்கு எடிட் செய்தோம் என்று தெரியவில்லையா? கவலையே வேண்டாம். Shift+F5 கீகளை அழுத்துங்கள். இறுதியாக எடிட் செய்த இடத்திற்குச் செல்லலாம். தொடர்ந்து அடுத்தடுத்து அழுத்தினால், அடுத்தடுத்து பின்னோக்கி எடிட் செய்த இடத்திற்குச் செல்லலாம்.

டாகுமெண்ட்டின் இடையே பிரிக்க: வேர்ட் புரோகிராமில் உருவாக்கப்படும் டாகுமெண்ட்டில், பலவகையான இடைவெளிகளை (breaks) உருவாக்கலாம். நாம் தொடர்ந்து டாகுமெண்ட் ஒன்றில் டைப் செய்கையில், வேர்ட் நாம் ஒரு பக்கத்தின் எந்த இடத்தில் டைப் செய்து கொண்டிருக்கிறோம் என்பதனைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் முழுமையானவுடன், தானாக அடுத்த பக்கத்தினை உருவாக்கி, நாம் டைப் செய்வதனை தொடர்ந்து மேற்கொள்ள உதவிடுகிறது. டாகுமெண்ட் Normal வியூவில் இருந்தால், இந்த இடைவெளி சிறிய இடைக்கோடாகக் காட்டப்படும். ஆனால், இது அச்சிடப்பட மாட்டாது. ஆனால், சில வேளைகளில், பக்கம் இறுதிவரை செல்லாத போதும், அந்த பக்கத்தினை முடித்து, அடுத்த பக்கம் செல்ல விரும்புவோம். இதற்கு நாமே பேஜ் பிரேக் அமைத்திட, வேர்ட் வழிகளைத் தருகிறது. வேர்ட் தரும் வேறு சில பிரேக் வசதிகளையும் இங்கு காணலாம்.
1. Page break: தொடரும் டெக்ஸ்ட்டினை அடுத்த புதிய பக்கத்தில் அமைத்திட இது உதவும்.
2. Column break: தொடர்ந்து டைப் செய்திடும் டெக்ஸ்ட்டை, அடுத்த நெட்டு பத்தியில் முதல் வரியில் அமைத்திட இதனைப் பயன்படுத்தலாம்.
3. Section break: நம் டாகுமெண்ட்டில், புதிய தொரு பிரிவில் டெக்ஸ்ட் அமைத்திட இந்த பிரேக் உதவும். இதில் நான்கு வகை Section break உள்ளன.
4. Text-wrapping break: இது ஏறத்தாழ லைன் பிரேக் போல அமையும். இது டெக்ஸ்ட்டினைப் பிரித்து அடுத்த வரியில் புதிய டெக்ஸ்ட் அமைக்க உதவும். பொதுவாக கிராபிக்ஸ் கலந்து டெக்ஸ்ட் அமைக்கும்போது, அதனைச் சுற்றி அமைக்கபடும் டெக்ஸ்ட் பிரித்து சரியாக அமைக்க இது உதவும்.
5. நீங்கள் வேர்ட் 2007 பயன்படுத்துபவராக இருந்தால், பிரேக் அமைக்க கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.
6. எந்த இடத்தில் பிரேக் அமைக்க விரும்புகிறீர்களோ, அந்த இடத்தில் கர்சரை அமைக்கவும்.
7. ரிப்பனில் Page Layout டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
8. Page Setup குரூப்பில்ல் Breaks டூலின் மீது கிளிக் செய்திடவும். இங்கு வேர்ட் பலவகையான பிரேக் அமைத்திட ஒரு பட்டியலைத் தரும்.
9. எந்த வகை பிரேக் அமைக்க வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X