பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 அக்
2014
00:00

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் தொழில் நுட்ப சோதனைப் பதிப்பு தான் வெளியாகியுள்ளது. ஆனால், அதன் அனைத்து சிறப்புக்களையும், விலாவாரியாகத் தந்துள்ளீர்கள். இந்தியாவில் வெளிவரும் எந்த ஒரு இதழும் இந்த அளவிற்கு விபரஙக்ளை அளிக்கவில்லை. தங்களுடைய கட்டுரையைப் படித்த பின்னர், விண்டோஸ் 10, நிச்சயம் மக்களிடையே வரவேற்பினைப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த டிப்ஸ் மற்றும் தகவல்களைத் தொடர்ந்து தரவும். தினமலர் வாசகர்கள், இந்த சிஸ்டத்தினைப் பயன்படுத்துவதில் முன்னோடிகளாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. தங்கள் சேவைக்கு நன்றி.
பேரா. டாக்டர். எஸ். சீனிச்சாமி, மதுரை.

சீனா தான் எதிர்பார்க்கும் வகையில் செயல்படாத நிறுவனங்கள், எத்தன்மையுடையதாக இருந்தாலும், அனுமதிப்பதில்லை. மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களை அது படுத்தும் பாடு இதனை உறுதிப்படுத்துகிறது. நம் அரசும், நம் மொழிகளை இந்த சாதனங்கள் கட்டாயம் கொண்டிருக்க வேண்டும் என தொடக்கத்திலேயே உத்தரவிட்டிருந்தால், இன்றைக்கு புதியதாக நம் மொழிகளைக் கொண்டு வருவதனையே ஒரு சாதனையாக எதிர்பார்க்கும் நிலை இருந்திருக்காது.
பேரா. கா. நஞ்சுண்டன், கோயம்புத்தூர்.

தொடர்ந்து அதிகரித்து வரும் பேஸ்புக் பயன்பாடு, பேஸ்புக் குறித்த தகவல் திருட்டு செய்திகளுக்கு நடுவே, நம்முடைய தகவல்கள் ரகசியமாக உள்ளதா என்று கேள்வி கேட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளீர்கள். இது ஏற்படாது என்று தெரிந்தாலும், சிறிது அச்சம் ஏற்படவே செய்கிறது.
உ. பால முருகன், கோவை.

பல்லாயிரக்கணக்கில் பணம் போட்டு வாங்கி, போன் வளைந்து போகிறதா? ஐபோன் ஏற்கனவே இந்தியாவில் எடுபடாமல் உள்ளது. இதில் இது போன்ற தகவல்கள், நிச்சயம் இதன் விற்பனையைக் கெடுக்கும். ஏன், இந்தக் குறையை ஆப்பிள் நிறுவனம் தனிக் கவனத்துடன் எடுத்துக் கொள்ளவில்லை என்று கவலைப்படத் தோன்றுகிறது.
கா.இளவரசி, திருச்சி.

விண்டோஸ் 10 ஸ்டார்ட் மெனு செயல்பாடுகள் குறித்த விளக்கங்கள் மிகத் தெளிவாக உள்ளன. இந்த சிஸ்டத்தினை அநேகமாக அனைவரும் விரும்புவார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஸ்டார்ட் மெனு மற்றும் ஸ்டார்ட் ஸ்கிரீன் இரண்டும் இணைப்பாகத் தரப்பட்டது, விண்டோஸ் வாடிக்கையாளர்கள் அனைவரின் அன்பைப் பெற மைக்ரோசாப்ட் எடுத்துக் கொண்ட முயற்சியே. ஸ்டார்ட் மெனுவினைச் சிறியதாகவும், பெரியதாகவும் அமைத்திட வழி தந்திருப்பதுவும் மிகச் சிறப்பான ஒரு வசதியாகும்.
டாக்டர் என். கார்த்திகேயன், பொள்ளாச்சி.

''விண்டோஸ் 10 மக்களுக்கானது” என்ற தங்களின் கட்டுரை, அடுத்து வர இருக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து அறிய ஆவலைத் தூண்டுகிறது. தன் விற்பனைக்கும் லாபத்திற்கும், மைக்ரோசாப்ட் இது போன்ற நடவடிக்கைகளை எடுத்துத்தான் ஆக வேண்டும் என்பது புலனாகிறது.
பேரா. எஸ். மணிவண்ணன், திருச்சி.

பேஸ்புக் நிறுவனர் மார்க் அவர்கள் கொடுத்த அறிவிப்பினை அனைவரும் அறியும் வண்ணம் வெளியிட்டமைக்கு நன்றி. தமிழ்நாட்டில் பல டிஜிட்டல் முனைவர்கள், மார்க் எதிர்பார்க்கும் அனைத்து சேவைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். எனவே, நிச்சயம் இந்த விருதுகள், தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கே கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி.
எஸ். செல்வ முரளிதரன், திருப்பூர்.

புதியதாக, ஆப்பிள் நிறுவனம் ஐபேட் ஏர் மற்றும் ஐபேட் சாதனங்களை வெளியிட்டுள்ளதே. அது குறித்த கட்டுரையை எதிர்பார்த்தேன். நீங்கள் அறிமுகம் குறித்து எழுதியுள்ளீர்கள். புதிய மாடல்கள், அவற்றின் தன்மை, வாங்கிப் பயன்படுத்தலாமா என்பது குறித்து ஒரு கட்டுரை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என். பிரகதீஷ் குமார், சென்னை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X