இந்த வார இணையதளம் - லட்சக் கணக்கில் இலவச படங்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 நவ
2014
00:00

கம்ப்யூட்டரில் ஓர் இணைய தளம், லெட்டர் பேட், பிரசண்டேஷன் பைல், இதழ்கள், சிறு பத்திரிக்கைகள் மற்றும் வலைமனைகள் எனப் பலவற்றைத் தயாரிக்கும்போது, படங்கள், சிறிய அளவில் கிராபிக் படங்கள், ஐகான்கள், அடையாளங்கள் எனப் பலவகையான படங்கள் தேவையாய் இருக்கும். இவற்றை இணைய தளங்களில் தேடி, அலைந்து பெறுவதைக் காட்டிலும், இவை அனைத்தையும் கொண்டிருக்கும் இணைய தளம் ஒன்றிலிருந்து பெறுவது எளிதல்லவா! அந்த பணியைத் தான் http://www.freepik.com/ என்ற இணைய தளம் மேற்கொண்டுள்ளது. இதில் ஏறத்தாழ 14 லட்சம் படங்கள் அடங்கிய பைல்கள்
உள்ளன. Free Pik (இலவசமாக எடுத்துக் கொள்) என்பது இதன் பெயர். இந்த தளம் சென்று,
நம் தேவைக்கேற்ப படங்களைக் கண்டு, தேர்ந்தெடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த தளத்தில் நுழைந்தவுடன், நம்மை பொருள் சார்ந்த பட்டியல் வரவேற்கிறது.
அத்துடன் தேடல் கட்டம் ஒன்றும், நாம் தேடி அறியக் கிடைக்கிறது. தளத்தின் மேலாக, Vectors, Stock Photos, PSD Files, and SVG icons என வகைகள் கிடைக்கின்றன. இவற்றுடன் See All Resources என்ற பிரிவும் உள்ளது. இந்த தளம் எத்தகையது என அறிந்து கொள்ள, What is FreePik? என்னும் லிங்க் தரப்படுகிறது. இதில் கிளிக் செய்தால், கேள்வி பதில் போல, இந்த தளம் குறித்த தகவல்கள் தரப்படுகின்றன.
இந்த தளத்தில் எப்- கனக்ட் அல்லது பேஸ்புக் வழியாக அக்கவுண்ட் ஒன்று அமைத்துக் கொள்ளலாம். படிவத்தில் நம் மின் அஞ்சல் முகவரி, பெயர், யூசர் நேம், பாஸ்வேர்ட் ஆகியவற்றைத் தர வேண்டும். இதன் மூலம், நாம் என்னவெல்லாம் இந்த தளத்திலிருந்து டவுண்லோட் செய்தோம் என்பதை எந்த ஒரு நிலையிலும் அறிந்து கொள்ளலாம். நாம் பின்னாளில் பயன்படுத்த என சில படங்களைக் குறித்தும் வைக்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X