கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 நவ
2014
00:00

கேள்வி: இரு வாரங்களுக்கு முன், மொபைல் சாதனங்களுக்கான பிரவுசர்கள் குறித்து, அருமையான கட்டுரை தந்தீர்கள். அதில், பிரைவேட் பிரவுசிங் நிலையில் மட்டுமே இயங்கும் பிரவுசர்கள் குறித்து எழுதி இருந்தீர்கள். நான் பெர்சனல் கம்ப்யூட்டரில் பயர்பாக்ஸ் பயன்படுத்துகிறேன். இதனை, எப்போதும் பிரைவேட் பிரவுசிங் நிலையில் செயல்படும்படி அமைக்க முடியுமா? அதற்கான வழிகள் இருந்தால், அவை என்ன?
-கா. சுப்ரமணியம், காரைக்குடி.
பதில்:
தங்கள் விருப்பப்படி அமைத்துவிடலாம். பயர்பாக்ஸ் பிரவுசர் அதற்கான செட்டிங்ஸ் அமைப்பினை ஏற்படுத்த வழிகளைக் கொண்டுள்ளது. பிரவுசரைத் திறந்தவுடன், டூல்ஸ் பிரிவு செல்லவும். இதில் Options என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து எட்டு டேப்களுடன் விண்டோ ஒன்று காட்டப்படும். இந்த விண்டோவில், Always use private browsing mode என்று ஒரு பிரிவு இருக்கும். இதன் செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தி வெளியேறவும். இனி, மீண்டும் மாற்றும் வரை, உங்கள் பயர்பாக்ஸ் பிரவுசர், பிரைவேட் பிரவுசிங் முறையிலேயே இயங்கும்.

கேள்வி: டாஸ்க் பாரில், வலது பக்கம், கடிகாரத்திற்கு அருகில் உள்ள ஐகான்களை எப்படி நீக்கலாம்? அவற்றினால் பயன் ஏதும் இல்லையே?
எம். புவனா, தேனி.
பதில்:
நீங்கள் குறிப்பிடும் பகுதியில் உள்ள ஐகான்கள் System Icons என அறியப்படுகின்றன. அவை உள்ள இடத்திற்கு சிஸ்டம் ட்ரே என்றும் பெயரிடப்பட்டுள்ளது. நாம் இவற்றை அழிக்கவோ, நீக்கவோ முடியாது. மறைத்து வைக்கலாம். ஸ்டார்ட் மெனுவில் உள்ள கட்டத்தில் “Turn system Icons on or off.” என டைப் செய்து தேடவும். கிடைக்கும் விடையில் கிளிக் செய்தால், Taskbar and Start Menu ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ கிடைக்கும். இதில் customize என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இன்னொரு விண்டோ திறக்கப்படும். இதன் கீழாக உள்ள, Turn System Icons on or off என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு ஐகான் எதிரிலும், அதனைக் காட்டவும், மறைக்கவும் (on or off) ஆப்ஷன் கிடைக்கும். நீங்கள் விரும்பியபடி, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். இன்னொரு தகவலையும் தருகிறேன். இங்கு ஐகான்களைக் கூடுதலாக இணைக்கலாம்.

கேள்வி: எழுத்து அளவினைக் குறிப்பிடுகையில், பைகா என்று அளவிடுகின்றனர். ஆனால், கம்ப்யூட்டரில் இது குறித்த தகவல் எந்த எழுத்து வகைக்கும் தரப்படவில்லை. இதனை எப்படி அறிவது?
மெ. செந்தில்நாதன், திண்டுக்கல்.
பதில்
: பைகா (Pica) என்பது ஒரு typographical அளவு சொல். இது ஏறத்தாழ ஒரு அங்குலத்தில் ஆறில் ஒரு பங்கினைக் குறிக்கிறது. எழுத்தின் அளவைக் குறிக்கும் இந்த சொல், பப்ளிஷிங், டைப்செட்டிங் மற்றும் அச்சு தொழிலில் அதிகம் கையாளப்படுகிறது. பைகா என அளவினைக் குறிப்பிடுகையில், அதற்கான எண்ணை எழுதி இறுதியில் pi எழுத வேண்டும். எடுத்துக் காட்டாக, பாராகிராப் ஒன்றை அடுத்து 2 பைகா இடம் விடப்பட வேண்டும் எனக் குறிப்பிட பாராகிராப் டயலாக் பாக்ஸில், After பாக்ஸில், 2 pi என அமைக்க வேண்டும்.

கேள்வி: எனக்கு வந்துள்ள டாகுமெண்ட் ஒன்றில் தரப்பட்டுள்ள ஹெடரை நீக்க விரும்புகிறேன். இதற்கான வழி என்ன?
ஆரா. கம்பதாசன், கோவை.
பதில்:
நீங்கள் நீக்க விரும்பும் ஹெடரில் கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும். ரிப்பனில் Insert டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். Header & Footer குரூப்பில், ஹெடர் அல்லது புட்டரை, உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கவும். இங்கு வேர்ட் ஆப்ஷன்கள் அடங்கிய கீழ்விரி பட்டியல் ஒன்றைத் தரும். தொடர்ந்து, நீங்கள் முதலில் தேர்ந்தெடுத்ததன் அடிப்படையில், Edit Header அல்லது Edit Footer என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து Del கீயை அல்லது கண்ட்ரோல் + எக்ஸ் கீகளை அழுத்தவும். ரிப்பனில், டிசைன் டேப்பில் Close Header and Footer என்பதில் கிளிக் செய்திடவும்.

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டத்தில், எம்.எஸ்.ஆபீஸ் 2007 பயன்படுத்தி வருகிறேன். இதில் வேர்ட் டாகுமெண்ட்களில் வாட்டர் மார்க் உருவாக்கி அமைப்பதற்கான வழிகள் தெரியவில்லை. எப்படி அமைப்பது என விளக்கவும்.
எஸ். வரதராஜன், கோவை.
பதில்:
வாட்டர்மார்க் அமைக்க வேண்டிய டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளவும். பின்னர், கீழே தரப்பட்டுள்ளபடி செயல்படவும்.
1. ரிப்பனில், “Page Layout” என்ற டேப்பில் கிளிக் செய்திடவும்.
2. “Page Background” குரூப்பில் “Watermark” என்ற கட்டளையில் கிளிக் செய்திடவும். இங்கு மாறா நிலையில் ““CONFIDENTIAL 1”, “DO NOT COPY”, or “URGENT 1”” ஆகிய வாட்டர்மார்க் அடையாளங்கள் கிடைக்கும். இதில் ஒன்றை நீங்கள் விரும்பினால் தேர்ந்தெடுக்கலாம். அல்லது, “Custom Watermark” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது “Printed Watermark” என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
இங்கு பலவித ஆப்ஷன்கள் கிடைக்கும். இவற்றில் நீங்கள் விரும்பும் வகையில் உள்ளதைத் தேர்ந்தெடுக்கலாம்.
“No watermark” தேர்ந்தெடுத்தால், அப்போதைய வாட்டர்மார்க் நீக்கப்படும். இதே செயல்பாட்டினை, ரிப்பனில் உள்ள “Remove Watermark” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் மேற்கொள்ளலாம்.
படம் ஒன்றை வாட்டர்மார்க்காக அமைக்க விரும்பினால், “Select Picture” என்ற பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். படத்தின் அளவை, விருப்பப்படி மாற்றி அமைக்க, “Scale” என்பதில் கிளிக் செய்திடவும். தேர்ந்தெடுத்தால், டெக்ஸ்ட்டை வாட்டர்மார்க்காக அமைக்கலாம். “Text” என்பதை அடுத்து நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட்டை அமைக்க வேண்டும். இதன் பின், டெக்ஸ்ட் வண்ணம் மற்றும் அது எப்படி அமைய வேண்டும் என்பதனை அமைக்க ஆப்ஷன்கள் கிடைக்கும். இவற்றை அமைத்த பின்னர், ஓகே அழுத்தி டயலாக் பாக்ஸை மூடவும். இனி டாகுமெண்ட்டில் நீங்கள் அமைத்த டெக்ஸ்ட் நீங்கள் அமைத்த விருப்பப்படி வாட்டர்மார்க்காக அமைக்கப்படும்.

கேள்வி: ஜிமெயில் மெசேஜ் அமைக்கையில், வலது ஓரமாக சிறிய விண்டோ தரப்படுகிறது. இன்பாக்ஸ் உள்ளேயே தரப்படும் இந்த விண்டோ பயனுள்ளதாக இருந்தாலும், அளவில் சிறியதாக இருப்பது, பல வேளைகளில் சிரமத்தைத் தருகிறது. ஜிமெயில் செட்டிங்ஸ் பக்கத்தில், இதனைப் பெரிதாக்க எந்த செட்டிங்ஸ் குறிப்பும் இல்லை. இதனைப் பெரிதாக அமைக்க முடியுமா?
எம். சுந்தரேசன், திருப்பூர்.
பதில்:
தாராளமாக முடியும். ஜிமெயில் விண்டோவில், கம்போஸ் பட்டனைக் கிளிக் செய்தால், திரையின் வலது மூலையில், மாறா நிலையில், சிறிய விண்டோ ஒன்று கிடைக்கும். இது வழக்கம்போல, நாம் விண்டோஸ் இயக்கத்தில் பெறுஇம் விண்டோ போன்றதுதான். அதன்படி, இந்த விண்டோவில், வலது மேல் மூலையில், மூன்று கட்டங்கள் தப்படுகின்றன. அவை Minimize, Full-screen, and Close. நடுவில் உள்ள கட்டத்தில் கிளிக் செய்தால், முழு விண்டோ கிடைக்கும். இது முழு விண்டோ அல்ல; சற்றுப் பெரிய விண்டோ. பின்புலத்தை இருட்டாக்கி, இதுவே ஸ்கிரீன் முழுமையும் இருப்பதாகக் காட்டும். சரி, இதனையே மாறா நிலை விண்டோ அளவாக இருக்க வேண்டும் என்ற உங்கள் விருப்பத்திற்கு வருவோம்.
1. Compose கிளிக் செய்த பின்னர், கம்போஸ் விண்டோவில் கீழே வலது மூலையில் சிறிய அம்புக் குறி அடையாளத்தைக் காணலாம்.
2. அந்த அம்புக் குறியில் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Default to full-screen என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இனி நீங்கள் கம்போஸ் கிளிக் செய்திடுகையில், இதே பெரிய விண்டோ கிடைக்கும். மீண்டும் சிறிய விண்டோ வேண்டும் என்றால், மேலே சொல்லப்பட்ட வழிகளில் சென்று, மாற்றவும்.

கேள்வி: ஹார்ட் டிஸ்க் ஒன்றை அப்படியே இன்னொரு ஹார்ட் டிஸ்க்கிற்கு காப்பி செய்திட முடியுமா? இதைத்தானே எனக் குறிப்பிடுகிறோம். அல்லது அது வேறா? விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இ. செண்பகம், புதுச்சேரி.
பதில்:
Ghosting என்பது நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல, ஹார்ட் ட்ரைவ் ஒன்றை, இன்னொரு ஹார்ட் ட்ரைவின் நகலாகப் பதிக்கும் முறை ஆகும். இதனை cloning என்றும் குறிப்பிடுவார்கள். நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில், மிக அதிகமான பைல்களுக்கு பேக் அப் எடுக்கும் போது, இந்த செயல்முறை பின்பற்றப்படுகிறது. தனி நபர்கள் இந்த வழியினைப் பின்பற்றுவது இல்லை, அலுவலக ரீதியான பணிகளில் பயன்படுத்தப்படும் ஹார்ட் ட்ரைவ் மற்றும் கம்ப்யூட்டர்களில் இந்த முறை அடிக்கடி பயன்படுத்தப்படும். டேட்டா மொத்தமாகக் கொண்டு செல்ல இது உதவும். மேலும், இந்த முறை ஹார்ட் ட்ரைவ் ஒன்றின் பைல்களுக்கு பேக் அப் எடுப்பதில் வேகமான முறையாகும்.

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டத்தில், எம்.எஸ். ஆபீஸ் 2003 பயன்படுத்துகிறேன். இதில் எக்ஸெல் புரோகிராமில், ஸ்ப்ரெட்ஷீட் தயாரிக்கையில், செல்களின் கிரிட் லைனை வண்ணமாக, அதன் டேட்டாவிற்கு ஏற்றபடி நானே அமைக்க விரும்புகிறேன். அவ்வாறு அமைக்க முடியுமா?
எஸ். கோவிந்தராஜ், காரைக்கால்.
பதில்:
உங்களின் நோக்கம் நல்ல முயற்சிதான். வண்ணங்களில் கோடுகளை அமைத்துவிட்டால், அவை மூலம் செல்களில் உள்ள டேட்டாவின் தன்மையினை நாம் திட்டமிட்டபடி அறிந்து கொள்ள முடியும். தாராளமாக, நாமாகவே, கிரிட் லைனை, நாம் விரும்பும் வண்ணங்களில் அமைக்க முடியும். செல்களின் பார்டர் கோடுகளின் வண்ணங்களை மாற்ற, கீழ்க்காணும் செயல்முறைகளைப் பின்பற்றவும்.
1. டூல்ஸ் (Tools) மெனுவிலிருந்து ஆப்ஷன்ஸ் (Options) தேர்ந்தெடுக்கவும். உடன் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
2. இந்த விண்டோவில் கிடைக்கும் டேப்களில் View டேப்பினை அழுத்தித் தேர்ந்தெடுக்கவும்.
3. இங்கு தரப்படும் கலர் விரி மெனுவில், உங்களுக்குப் பிடித்தமான வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும். Gridlines செக் பாக்ஸ் கட்டத்தில் டிக் அடையாளம் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
ஒவ்வொரு ஒர்க் ஷீட்டிற்கும், வேறுபாடான வண்ணங்களைக் கொடுத்து, அடையாளம் காணும் வகையில், வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.

கேள்வி: எலக்ரானிக் மின் நூல்களைப் படிக்க உதவிடும் சாதனங்களை கிண்டில் (Kindle) என ஏன் அழைக்கின்றனர். பயன்பாட்டிற்கும் பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே. இதுவும் புளுடூத் போலத் தானா? இந்தப் பெயர் வைத்ததன் பின்னணியில் ஏதேனும் கதை உள்ளதா?
எம்.பிரகாஷ் ராஜன், சிதம்பரம்.
பதில்:
அருமையான கேள்வி. சற்று கற்பனையை அல்லது கதையை எதிர்பார்த்து கேள்வி கேட்டுள்ளீர்கள். அனைவரும் அறியும் வண்ணம், இந்த பெயர் வந்ததன் பின்னணியைத் தருகிறேன். கதை அல்ல நிஜம்.
இ-புக் என அழைக்கப்படும் எலக்ட்ரானிக் நூல்கள் படிக்கும் வழக்கத்தில் ஒரு மாபெரும் புரட்சியைக் கொண்டுவந்த சாதனம் Kindle. இதனை வடிவமைத்த குழுவைச் சேர்ந்த ஒரு தம்பதியரை, (மைக்கேல் க்ரோனன் மற்றும் கரேன் ஹிப்மா), அமேஸான் நிறுவனம் இந்த சாதனத்திற்குப் பெயர் ஒன்றைத் தருமாறு கேட்டுக் கொண்டனர். இந்த சாதனம் எதற்கெல்லாம், எந்த வழிகளில் எல்லாம் பயன்படும் என்று இவர்கள் ஆழ்ந்து சிந்தித்தனர். எந்த தொழில் நுட்பத்தையும் நினைவு படுத்தும் வகையில் பெயர் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அதே நேரத்தில் சிந்தனையைத் தூண்டும் வகையிலும், பல நல்ல பொருளைத் தருவதாகவும் இருக்க வேண்டும் என எண்ணினார்கள். எனவே Kindle என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்தனர். இதற்கு ”எரிவதைத் தூண்டுவது, ஒளிறச் செய்வது, நல்லவற்றிற்குத் தூண்டுவது, கொழுந்துவிட்டு எரியச் செய்வது” என்று பல பொருள் உண்டு. தொன்மை வாய்ந்த நார்ஸ் (Norse) மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு இந்த சொல் வந்து இப்பொருளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த சொல்லின் மூலப் பொருள் “மெழுகுவத்தி” என்பதாகும். இந்த சொல்லைத் தந்த ஹிப்மா கூறுகையில், “நூல்களில் நாம் பெறும் தகவல்களும் செய்திகளும் தீயைப் போன்றவை; பக்கத்திலிருப்பவர்களிடமிருந்து இதனைப் பெறுகிறோம். மேலும் அதனைத் தூண்டுகிறோம். பின் அவற்றை மற்றவர்களுக்குத் தருகிறோம். இப்படியே அது அனைவரின் சொத்தாக மாறுகிறது” என்றார். உண்மைதான், பொருத்தமான பெயர்தான்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X