ஜிமெயில் மூடப்படும் இன்பாக்ஸ் இடம் பிடிக்கும்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 நவ
2014
00:00

இந்த தலைப்பைப் படித்துவிட்டு, பலர் மனம் பதைபதைக்கலாம். ஜிமெயில் தளத்தில் தங்களின் முக்கிய டாகுமெண்ட்களை, ரகசியக் கடிதங்களைப் பலர் ஸ்டோர் செய்து வைத்துள்ளனர். பலருடன் மேற்கொண்ட தனிப்பட்ட மற்றும் அலுவலகத் தொடர்புகளுக்கான சாட்சியங்கள், ஜிமெயில் தளத்தில் தான் உள்ளன. எனவே, ஜிமெயில் மூடப்பட்டால், இவர்கள் கதி என்னவாகும்? திடீரென அனைத்தும் இருண்டுவிடாதா? எனவே, ஜிமெயிலாவது மூடப்படுவதாவது? என்று தங்கள் மனதைத் தேற்றிக் கொள்பவர்களும் உண்டு.
ஆனால், கணினி தொழில் நுட்பத்தில் இயங்கும் வல்லுநர்கள், இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக, ஒரு நாளில், முன்னமே அறிவிக்கப்பட்டு, கால அவகாசம் தரப்பட்டு, பதிலியாக வேறு ஒன்று வழங்கப்பட்டு, ஜிமெயில் மூடப்படும்; அதன் தளங்களைத் தாங்கி இருக்கும் சர்வர்கள் வேறு பணிக்குத் திருப்பப்படும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இந்த முடிவிற்கு வருவதற்கான காரணங்களை இங்கு காணலாம்.
1. ஜிமெயில் அதனைப் பயன்படுத்துபவர்களின் கைகளில், அவர்களுக்காகவே இயங்கி வரும் ஒரு பெரிய சாப்ட்வேர் அப்ளிகேஷனாகும். இதனை வடிவமைத்து இயக்கும், கூகுள் நிறுவனத்திற்கு இதனால், எந்த பிரதிபலுனும் இல்லை. டேட்டா வடிவில் கூட பயன் எதுவும் இல்லை. இதிலிருந்து எந்தவிதமான டிஜிட்டல் பயன்களை கூகுள் பெறுவதில்லை. எனவே, நாம் விரும்பினாலும், இல்லை என்றாலும், கூகுள் நிறுவனத்திற்கு இது தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், ஜிமெயில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஒன்றுதான்.
2. மின் அஞ்சல் என்னும் இமெயில் உருவாக்கப்பட்டது எதற்காக? தேவையற்றவற்றைப் போட்டு வைக்கும் இடமாகத்தான் இது உருவானது. இதனை மொபைல் சாதன டிஜிட்டல் உலகில், ஆங்கிலத்தில், "dumb pipe" எனக் கூறுவார்கள். பல சர்வர்கள், இதனைப் பயன்படுத்துபவர்கள் ஒருவருக்கொருவர் தங்களுடைய தகவல்களை பிட்களில் அமைத்துப் பரிமாறிக் கொள்ளவே இயங்குகின்றன; மின் அஞ்சல் டூல் எந்த உருப்படியான புதியதாக ஒன்றைத் தானாக வழங்க முடியாது. இதனைப் பயன்படுத்துபவர் பார்க்கின்ற விஷயங்களுக்கும், பார்க்காத விஷயங்களுக்கும் இடையே ஒரு வாயில் காவலனாகக் கூட இமெயில் செயல்படுவதில்லை.
3. மின் அஞ்சல் சேவை வழங்குபவர்கள், இது போல குப்பைகளைத் தாங்கும் குழாய்களாக, தங்கள் சேவை சாதனங்கள் அமைவதை விரும்பவில்லை. ஏனென்றால், அதில் எதுவும் லாபம் ஈட்ட முடியாதே. இந்த இமெயில் குப்பை இடத்திற்கென தனி செயல் அடையாளம் இல்லை. இதனை இது கொடுக்கும் நம்பகத்தன்மை மற்றும் வேகமான செயல்திறன் கொண்டே பயனாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், இமெயில் செயல்பாட்டில் கிடைப்பது ஸீரோ லாபம் தான்; ஏன், சில வேளைகளில் ஸீரோவிற்கும் கீழே இதன் மூலம் கிடைக்கும் வருமானம் செல்கிறது. ஆனால், பயனாளர்கள், இந்த குப்பை குவியும் இடத்தையே விரும்புகின்றனர். இதனை இயக்கும் நிறுவனங்கள், விரைவான செயல்பாடு, நம்பகத்தன்மை மற்றும் மலிவான மொபைல் டேட்டா தொடர்பு ஆகியவற்றைத் தருவதனையே பயனாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இணையம் அவர்களுக்குத் தேவையான அப்ளிகேஷன்கள், சேவைகள் மற்றும் சமுதாயத் தகவல் பாரிமாற்றத்திற்கானதைத் தரவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
4. மின் அஞ்சல் என்பது, தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தின் குப்பைத் தொட்டி பதிப்பாகும். இதனால் தான் இன்றைய உலகில் இது மிகவும் பிரபலம் அடைந்த சமூக இயக்கமாக உள்ளது. மின் அஞ்சல் என்பதன் தாத்பரியமே, அது ஒரு மத்தியஸ்தர் இல்லாத ஒரு தகவல் தொடர்பு மீடியமாக இருப்பதுதான். நீங்கள் செய்தி ஒன்றை ஒருவருக்கு அனுப்புகிறீர்கள். அதனை அவர் பெற்றுக் கொள்கிறார்.
5. மக்கள் உங்களுக்கு செய்திகளை அனுப்புகையில், அவை உங்கள் இன்பாக்ஸில், மாறான வரிசையில் இடம் பிடித்து அமைகின்றன. அண்மையில் வந்தது முதல் இடத்தில் அமைகிறது. இதனை, பேஸ்புக் போன்ற சமுதாய இணைய தளத்தின் செயல்பாட்டுடன் ஒப்பிடுங்கள். நீங்கள் உங்கள் நண்பர்களுக்கென தகவல் ஒன்றைப் பதிகிறீர்கள். அந்த ஒரு சில நண்பர்கள் அதனைப் பெறுகின்றனர். அல்லது, நீங்கள் பேஸ்புக்கில் உள்ள ஒருவருக்கு மெசேஜ் ஒன்று அனுப்புகிறீர்கள். பேஸ்புக் நெட்வொர்க் அதனை "Other" என்னும் போல்டரில் போட்டு வைக்கிறது. இதனை யாரும் பார்ப்பதில்லை. தற்போது, அண்மைக் காலமாக, ஒரு சிறிய அளவில், கூகுள் மத்தியஸ்தராக இயங்குகிறது. குப்பை மெயில்களைத் தரம் பிரித்துக் காட்டுகிறது. கூகுள் குப்பை (ஸ்பேம்) மெயில்கள் என வகைப்படுத்துவதனை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.
6. கூகுளுக்கு மின் அஞ்சல் ஏன் பிரச்னைக்குரியதாகிறது? ஜிமெயில் ஒரு குப்பைத் தளமாக இயங்குவதனை மாற்ற பலமுறை அடுத்தடுத்து முயற்சிகளை மேற்கொண்டதனை நாம் பார்த்திருக்கிறோம். ஜிமெயில் பயன்பாட்டினைச் சற்று உற்சாகமூட்டுவதாகவும், பொருள் கொண்டதாகவும் அமைக்க, Google Wave என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியது. ஆனால், அது மக்களிடம் எடுபடவில்லை. தொடர்ந்து, மின் அஞ்சலுக்குப் பதிலாக மக்கள் Google+ என்னும் டூலை ஏற்றுக் கொள்வார்கள் என்று கூகுள் எதிர்பார்த்தது. அதுவும் மக்களிடம் செல்வாக்கு பெறவில்லை. அடுத்து, அஞ்சல் வகைப்படுத்துதலை கூகுள் கொண்டு வந்தது. டேப்களுடன் கட்டம் கட்டி,
நம் அஞ்சல்களைப் பட்டியலிட்டது. முக்கிய செய்திகளை "Primary," "Promotions," "Social Messages," "Updates" and "Forums" எனப் பல வகைகளில் பிரித்துக் காட்டியது. இந்த முயற்சியும், ஒரு சில பயனாளர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
மற்றவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. மேலும், இது ஒரு பெரிய மத்தியஸ்தர் வேலையே இல்லை. மின் அஞ்சலுக்குப் புதியதாக உற்சாகம் தரும் வகையில் எதுவும் தரப்படவில்லை.
7. தற்போது அழைப்பிதழ் அடிப்படையில், குறிப்பிட்டவர்களுக்கு இன்பாக்ஸ் (Inbox) என்ற ஒரு சேவையினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவும் மின் அஞ்சல் குப்பை தளத்தின் பிரச்னையை மத்தியஸ்தம் செய்திடும் ஒரு முயற்சியே. இது ஜிமெயில் அக்கவுண்ட்டிற்குப் பதிலாகத் தரப்படுவதுதான். புதியதாக அக்கவுண்ட் தொடங்கி இதனைச் செயல்படுத்த வேண்டியதில்லை. ஜிமெயிலின் டேப்களுக்குப் பதிலாக, இன்பாக்ஸ், செய்திகளின் தன்மைக்கேற்ப வகைப்படுத்தி, லேபிள் மற்றும் வண்ணங்களில் தனித்தனியே காட்டுகிறது. இதன் அதி முக்கிய செயல்பாடே, இது நமக்கு வரும் அஞ்சல் கடிதங்களில் கண்டுள்ள தகவல்களைப் படித்தறிந்து, அதில் உள்ளவற்றின் தன்மைக்கேற்ப, தகவல்களுக்கேற்ப, அஞ்சல்களைப் பிரித்துக் காட்டுவதுதான். பிரித்துக் காட்டுவதுடன், அவற்றின் தன்மை குறித்து குறுந்தகவல் கொடுத்து, அஞ்சல் சேவையில் கூடுதலாக, புதிய பரிமாணத்தைக் காட்டுகிறது.
இதனை இப்படியும் பார்க்கலாம். ஜிமெயில் அஞ்சல் செய்திகளில் உள்ள தகவல் அடிப்படையில் கூடுதலான தகவல்களைப் பெற்று, அவற்றைக் Google Nowல் அமைத்து வழங்குவதற்குப் பதிலாக, அஞ்சல் கிடைத்தவுடனேயே, அவற்றிற்கான Google Now அட்டைகளை, அஞ்சல் இன்பாக்ஸிலேயே காட்டி அமைக்கிறது.
இன்பாக்ஸ் முகவரிகள், தொலைபேசி எண்கள், விபரங்கள் (பயணங்கள், பொருட்கள் வாங்கியது) ஆகியவற்றைக் கண்டறிந்து, அவை குறித்த கூடுதல் தகவல்களை, லிங்க்காகக் கொடுக்கிறது. இதனால், கூடுதல் தகவல்கள் தேவைப்படும்போது, இந்த லிங்க்குகளைக் கிளிக் செய்து நாம் அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.
இத்துடன், நாம் “ஓரங்கட்டுதல்” போன்ற மெயில் பாக்ஸ்களை அமைத்து, மெதுவாகப் பார்த்துக் கொள்ள வேண்டிய அஞ்சல்
செய்திகளை ஓரங்கட்டி வைக்கலாம். பிற்பாடு தேவைப்படும்போது அவற்றைத் தேடிப் பார்த்துப் படித்து செயல்படலாம். இது
மட்டுமின்றி, இன்பாக்ஸ் இன்னும் சில வசதிகளயும் தருகிறது.
இதனால், கூகுள் ஒரு புதுவித மத்தியஸ்தராகச் செயல்படத் தொடங்குகிறது. நீங்கள் மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்ளும்
தகவல்கள் ஒரு புறம் மற்றும் பொருட்கள், சேவைகள், தேவைகளைத் தரும் நிறுவனங்கள் ஒருபுறம் என அமைத்து, இந்த இரு புறங்களுக்கிடையே ஒரு மத்தியஸ்தராக தன் செயல்பாட்டினை அமைத்துக் கொள்கிறது.
இதன் மூலம், உங்கள் இமெயில் இன்பாக்ஸ், கூடுதல் புத்திசாலித்தனத்தையும், அதிக செயல்திறனையும் கொண்டதாக விளங்குகிறது. ஆனால், அதே நேரத்தில், பயனாளர் கட்டுப்பாட்டில் இருந்ததனைத் தான் எடுத்துக் கொள்கிறது. பயனாளர்கள் கொண்டிருந்த கட்டுப்படுத்தும் சக்தியை எடுத்துக் கொண்டு எதிர்பாராத வகையில் இமெயில் செயல்படும் என்ற தோற்றத்தினைத் தருகிறது. அது உண்மையும் கூட. இந்நிலையைப் பயனாளர்கள், நல்லது அல்லது தீயது என எடுத்துக் கொள்வார்களா என்பதைப் பற்றி கூகுள் கவலை கொள்ளவில்லை.
கூகுள் மற்றும் பிற நிறுவனங்கள், தாங்கள் வழங்கும் ஒன்றில், மத்தியஸ்தமாக தாங்கள் செயல்பட வேண்டும் என்பதனை அதிகமாகவே விரும்புகின்றன என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. கணித சூத்திரங்களின் அடிப்படையில், முடிவுகளையும், சேவைகளையும் தரும் நிறுவனமாக கூகுள் செயல்பட்டு வருகின்றது. அதன் பயனாளர்கள் பரிமாறிக் கொள்வதில் பெறும் சிக்னல்களைக் கொண்டு, தகவல்களைக் கண்டறிந்து, அதற்கேற்ற விளம்பரங்களைத் தரும் வர்த்தகத்தில் உள்ளது. இடைத்தரகர்கள் இல்லாமல் தகவல் பரிமாறிக் கொண்டிருந்த தன் பயனாளர்களுடன், இன்னொரு பிரிவான நிறுவனங்களை இணைத்து மத்தியஸ்தம் செய்திடும் நிறுவனமாக கூகுள் செயல்படுகிறது. இதனைத்தான், கூகுளின் சர்ச் டூல் மேற்கொள்கிறது. அது நம்மை இணையத்துடன் இணைக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். பீட் சேவைக்குப் பதிந்து கொண்டு, ஆர்.எஸ்.எஸ். ரீடர் மூலம், வாடிக்கையாளர்கள் எவற்றைக் கேட்டு அக்கவுண்ட் திறந்தார்களோ, அவற்றை முறையாக, சிறிதும் பிசகாமல் வழங்குவதனை கூகுள் நல்ல ஒரு வர்த்தகமாக எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் தான், கூகுள் ரீடர் (Google Reader) சேவையை நீக்கியது. இதே காரணத்திற்காக ஜிமெயில் சேவையையும் நீக்கிவிடும் என்று அனைவரும் கருதுகின்றனர். குப்பையைக் கொட்டி வைக்கும் தளமாக, பயனாளர்களுக்கு இடையே தனக்கென ஒரு மத்தியஸ்த வேலை இல்லாத இடமாக ஜிமெயிலை, கூகுள் எண்ணுகிறது. அதனால் தான், தன் செயல்பாட்டினை மையமாகக் கொண்டு இயங்கும், தன் வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ, வர்த்தக, சேவை நிறுவனங்களை இணைக்கும் வகையிலான சேவையினைத் தரும் இன்பாக்ஸ் போன்றவற்றை ஜிமெயில் இடத்தில் தருகிறது கூகுள். எனவே, ஜிமெயில் பயனாளர்கள், என்றாவது ஒரு நாள், ஜிமெயில் இன்றைய தோற்றத்தினை, செயல்பாட்டினை, சேவையை மாற்றிக் கொண்டு தன்னை மாய்த்துக் கொள்ளும் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X