சீனாவில் பேஸ்புக் பயன்பாட்டிற்கு தடை இல்லை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 நவ
2014
00:00

அண்மையில் சீனாவிற்கு வர்த்தக ரீதியான பயணமாக, பேஸ்புக் நிறுவனர் மார்க் சென்றிருந்தார். அப்போது சீனாவின் சிங்குவா பல்கலைக் கழகத்தில் உரையாற்றிய போது, சீன மொழியில் உரையாற்றி, அவர்களின் மனதில் இடம் பிடித்தார். அங்கிருந்த அனைவரும், அவரின் சீன மொழியில் அமைந்த பேச்சினைக் கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் சீன அரசின் இணைய தகவல் அலுவலகத்தின் உயர் அதிகாரி லு வே, பேஸ்புக், சீனா அரசின் விதிகளை முழுமையாகப் பின்பற்றினால், தாராளமாக, சீனாவில் இயங்கலாம் என்று அறிவித்துள்ளார். சீனாவில் பேஸ்புக் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று ஏற்கனவே வந்த செய்தி தவறு என்றும் கூறியுள்ளார். அதே நேரத்தில், பேஸ்புக் சீனாவில் இயங்க அனுமதிக்கப்படும் என்றும் தான் கூறவில்லை என்றும் அறிவித்தார். வெளிநாட்டின் எந்த ஓர் இணைய நிறுவனமும், சீன அரசின் விதிகளை மதித்துப் பின்பற்றினால் மட்டுமே, சீனாவில் இயங்க முடியும் என அவர் கண்டிப்பாகத் தெரிவித்தார்.
”சீனா எப்போதும் நல்ல நட்பு ரீதியான அணுகுமுறையினையே மற்ற நாட்டு நிறுவனங்களிடம் கடைப் பிடித்து வருகிறது. ஆனால், யார் எங்கள் விருந்தினராக முதலில் வர முடியும் என்பதை நாங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். நாங்கள் மற்றவர்களை மாற்ற முடியாது. ஆனால், எங்கள் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் எங்களுக்கு உரிமை உண்டு” என்றும் லூ குறிப்பிட்டுள்ளார்.
சீன அரசின் விதிமுறைகளைப் பின்பற்றுவது என்பது, சீனாவின் கடுமையான சில சட்டங்களுக்கு பணிந்து போவதாக முடியும். குறிப்பாக, அரசியல் ரீதியாக எந்த ஒரு எதிர்ப்பான நிலையும் வெளிவரக் கூடாது. சென்ற 2009 ஆம் ஆண்டில் இருந்து, சீன அரசு பேஸ்புக் இயக்கத்தினைத் தடை செய்துள்ளது. சீனாவில் அப்போது நடைபெற்ற கலாச்சார எதிர்ப்பினை அடுத்து இந்த தடை விதிக்கப்பட்டது.
பேஸ்புக் நிறுவனர் மார்க், இதுவரை நான்கு முறை சீனாவிற்கு பயணமாகச் சென்று, சீன அரசின் உயர் தொழில் நுட்ப நிறுவனத் தலைவர்களைச் சந்தித்துள்ளார். சீனாவில் இணைய தேடல் நிறுவனமான பைடு (Baidu) மற்றும் மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஸியோமி (Xiaomi) ஆகியவற்றுடன் பல சுற்று பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். ஆனால், சீனாவில் தன் நிறுவனத்தின் செயல்பாடு எப்போது தொடங்கும் என்பது குறித்து சிறிய அளவில் கூட அவர் தகவல்களை வெளியிடவில்லை.
சீனாவில் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 60 கோடிக்கும் மேலாகும். நவம்பரில் அரசு ஆதரவுடன் பன்னாட்டு அளவிலான இணையக் கருத்தரங்கு ஒன்றினை சீனா நடத்த உள்ளது. அமெரிக்கா உட்பட பல நாட்டு நிறுவனங்கள் இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X