பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 நவ
2014
00:00

“இன்பாக்ஸ்” போல பல புதிய வசதிகளைத் தருவது கூகுள் நிறுவனத்தின் வாடிக்கையான செயல்பாடுதான். ஆனால், எத்தனை டூல்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்பதனையும் நாம் கவனிக்க வேண்டும். இன்பாக்ஸ் மூலம் தன் ஜிமெயில் தளத்திற்கு வராத வருமானத்தைப் பெருக்க கூகுள் நினைக்கலாம். இந்த நோக்கில் யாரும் பார்க்கவில்லையா?
-ஆ. செந்தில்வேல், திண்டுக்கல்.

நீங்கள் இன்பாக்ஸ் குறித்தும் அதன் புதிய அம்சங்கள் குறித்தும் தந்துள்ள தகவல்கள் மிக அருமை. இவ்வளவு வசதிகள் கொண்ட இன்பாக்ஸ் நிச்சயம் அதிக அளவில் வாடிக்கையாளர்களைப் பெறும். அனைவரும் விரும்புவார்கள். நான் அறிந்த அளவில் என் நண்பர்கள் யாருக்கும் இன்பாக்ஸ் பயன்படுத்த அழைப்பு வரவில்லை.
பேரா. கா. சிவஞானம், விழுப்புரம்.

விரிவாக மொபைஜெனி குறித்து எழுதி, அதனைப் பயன்படுத்துவதில் உள்ள ரிஸ்க் குறித்தும் தகவல் கொடுத்ததற்கு தங்களைப் பாராட்ட வேண்டும்.
என். கார்த்திக், மும்பை.

இன்பாக்ஸ் கேட்டு மெயில் அனுப்பினேன். கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. கூகுள் கண்டுகொள்ளவே இல்லை. கிடைத்தால் தானே அதன் வசதிகள் குறித்து அறிந்து கொள்ள முடியும்.
-எஸ். கிருஷ்ண குமார், சென்னை.

பிரதமர் அலுவலகத்தில் இயங்கும் இணைய இணைப்பு வேக அளவிற்கு நம் மக்களுக்கு கிடைக்காவிட்டாலும், அதில் பாதியளவிற்காவது வேகமாக, பழுதின்றி குறைந்த கட்டணத்தில் வழங்கலாம். டிஜிட்டல் இந்தியா இலக்கை முன்வைத்துள்ள நம் பிரதமருக்கு, தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் இந்த வகையில் உதவுவார்களா!
கா. ஜெயப்பிரகாஷ், சிதம்பரம்.

ஹெடர் மற்றும் புட்டரில் உள்ளதை நீக்க சுட்டிக் காட்டிய வழி எனக்கு பல பிரச்னைகளில் இருந்து விடுதலை தந்தது. இது போன்ற கேள்வி பதில்கள் மற்றும் நீங்கள் வழங்கும் டிப்ஸ்கள், பல வேளைகளில் எங்களுக்கு நல்ல உதவியாய் இருக்கின்றன. உங்கள் முயற்சிக்கும் உதவிக்கும் நன்றி.
-ஆரா. கம்பதாசன், கோவை.

ப்ரீபிக் தளம் சென்று பார்த்தேன். அத்தளத்தில் உள்ள இலவசமாகத் தரப்படும் படங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும் என்பது உறுதி. எந்த வகையில் வேண்டுமானாலும், எந்த அளவில் வேண்டுமானாலும் படங்கள் குவிந்து கிடக்கின்றன. அச்சுத் தொழிலுக்கு நல்ல உதவியாக இது உள்ளது. தகவலுக்கு மனமார்ந்த நன்றி.
-ஆர். சேகர், சிவகாசி.

கிரிட் லைன் வண்ணம் அமைப்பது குறித்த டிப்ஸ் மிகவும் உபயோகமான ஒன்றாகும். செல்களில் இடும் தகவல்களுக்கேற்ப இப்போது நான் ஒர்க்ஷீட் தயாரித்து வருகிறேன். இது ஒரு ஒர்க்ஷீட்டைப் பார்த்தவுடன் அதன் டேட்டா தன்மை பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது. இதனால், எனக்கு பாராட்டு கிடைக்கிறது. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
எஸ். சுதர்சனம், காரைக்கால்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X