சாம்சங் காலக்ஸி ஸ்டார் 2 ஜி 130 இ
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 நவ
2014
00:00

அண்மையில் சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்திய மொபைல் போன்களில், மத்திய நிலையில், ரூ.5,000க்கும் குறைவான விலையில் போன்களைத் தேடுவோர் தேர்ந்தெடுக்கும் போனாக, ஜி 130 இ காலக்ஸி ஸ்டார் 2ஜி உள்ளது. இதன் அதிகபட்ச விலை ரூ.4,829.
இது ஒரு 2ஜி நெட்வொர்க்கில் இயங்கும் மொபைல் போன். இரண்டு சிம்களை இதில் இயக்கலாம். இதன் பரிமாணம் 109.8 x 59.9 x 11.8 மிமீ. எடை 107.6 கிராம். பார் டைப் வடிவத்தில் இது அமைக்கப்பட்டு, சாப்ட் கீகள் கொண்ட கீ போர்ட் தரப்பட்டுள்ளது.
வெள்ளை நிறத்தில் உள்ள இந்த போன், டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் கொண்டது. இதன் திரை 3.5 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பிக்ஸல்கள் 320 x 480 என்ற அளவில் அமைந்துள்ளன. மல்ட்டி டச் வசதியும் இந்த திரையில் கிடைக்கிறது.
லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஜாக், மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் (32 ஜி.பி. வரை) தரப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 512 எம்.பி. திறன் கொண்டது. இதன் ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. எட்ஜ், வை பி, புளுடூத், யு.எஸ்.பி. போர்ட் ஆகியவை இயங்குகின்றன. இதன் கேமரா 2 எம்.பி. திறன் கொண்டது. வீடியோ 480p@24fps வேகத்தில் இயங்குகிறது.
இதில் தரப்பட்டுள்ள ப்ராசசர் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. அக்ஸிலரோமீட்டர் சென்சார் தரப்பட்டுள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4.2. கிட்கேட் ஆகும். எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகியவை இயங்குகின்றன.எம்பி 3 மற்றும் எம்பி 4 பிளேயர்கள் இதில் இயங்குகின்றன.
ஆர்கனைசர், போட்டோ /விடியோ எடிட்டர், கூகுள் சர்ச், கூகுள் மேப்ஸ், ஜிமெயில், யு ட்யூப், காலண்டர், ஜி டாக், பிகாஸா, வாய்ஸ் மெமோ, பிரிடெக்டிவ் டெக்ஸ்ட் ஆகிய வசதிகள் இணைந்தே தரப்படுகின்றன. இதில் லித்தியம் அயன் பேட்டரி 1,300 mAh திறனுடன் தரப்பட்டுள்ளது.

Advertisement

 

மேலும் மொபைல் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X