இந்திய இணையத்தில் பெண்களே முதல் இடம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 நவ
2014
00:00

அண்மையில் இந்தியாவில் 35 நகரங்களில் இணையம் பயன்படுத்துவோர் குறித்து ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், இந்தியாவில், பெண்களே அதிகமாக இணையத்தினைப் பயன்படுத்துகிறார்கள் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இணையப் பயனாளர்கள் எண்ணிக்கை வளர்ச்சியில், பெண்கள் 30% உள்ளனர். ஆண்கள் 25% உள்ளனர். Internet and Mobile Association of India மற்றும் Internet Market Research Bureau ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டன.
மும்பையில் தான் அதிக எண்ணிக்கையில் இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சி வேகம் சென்னையில் தான் மிகக் குறைவாக உள்ளது. இணையம் பயன்படுத்தும் 35 நகரத்துப் பெண்களில், 62% பெண்கள் கல்லூரி செல்பவர்களாகவும். 34% பேர் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளாகவும் உள்ளனர். எனவே, இந்த கண்டுபிடிப்பு, ஆண்கள் தான் இணையத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர் என்ற மாயையை நீக்கிவிட்டது.
இது குறித்து IAMAI துணைத் தலைவர் சக்ரவர்த்தி குறிப்பிடுகையில், ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரிப்பதே இதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது என்றார். குறைவான வருமானம் உள்ள பெண்கள் கூட, குறைந்த விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் போன்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். இது ஒரு வரவேற்கத்தக்க வளர்ச்சி சார்ந்த அம்சமாகும். இணையப் பயன்பாடு தொடங்கியபோது, அது மின் அஞ்சல்களைப் பார்ப்பதற்கும், அதற்கு பதில் அளிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால், இன்றைய பெண்கள், இணையத்தில் கிடைக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கான வாய்ப்புகள் குறித்து அறிய ஆவலுடன், இணையத்தினைப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு, ஸ்மார்ட் போன்கள், இணையம் பயன்படுத்த நல்லதொரு வாய்ப்பைத் தருகின்றன. குறிப்பாக, இளம் வயது பெண்கள், ஸ்மார்ட் போன்களை மட்டுமே பயன்படுத்துபவர்களாக உள்ளனர்.
இந்த ஆய்வில், மும்பை 1.6 கோடி பேர்களுடனும், டில்லி 1.2 கோடி பேர்களுடனும் முதல் இரண்டு இடத்தைப் பிடித்துள்ளன. சென்னை 55 லட்சம் பேர்களைக் கொண்டுள்ளது. புனேயில், அதிகமான எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ளதால், அது சென்னைக்கும் முன்னதாக 34% வளர்ச்சியுடன் உள்ளது. பெங்களூரு 36% வளர்ச்சியையும், ஹைதராபாத் 34 சதவீதமும் கொண்டு உள்ளன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X